உயிரோசை - 02.11.2009
 
அலைந்துழலும் தமிழினம்
- இளைய அப்துல்லாஹ் (லண்டன்)
மைக்கேல் ஜாக்ஸனின் ஆவி
- வாஸந்தி
நக்சலைட்டுகளும் அரசின் ஆறுதலும்
- நிஜந்தன்
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா
- எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா.
ஆஸ்திரேலியா: ஒரு சூதாடியின் நிழல்
- ஆர்.அபிலாஷ்
பேராண்மை - அடையாளம் மாறத் துவங்கியிருக்கும் நாயக பிம்பங்கள்...
- லக்ஷ்மி சரவணக்குமார்.
மலேசியா: நான்கு வன்முறைகளும் தொங்கும் பாலத்திலிருந்து அறுந்து வீழ்ந்த அலட்சியமும் கவனக்குறையும்
- கே.பாலமுருகன் (மலேசியா)
பாசமுள்ள இயந்திரங்கள்
- அ.ராமசாமி
சந்ரோதயம் இதிலே. . .
- கிருஷ்ணன் வெங்கடாசலம்
பாரத் மாதா கி ஜே!
- வா.மணிகண்டன்
கண்களைத் தழுவும் தூக்கம்- கோகுலக்கண்ணனின் "தூங்கும் குழந்தை"
- பாவண்ணன்
என்ன செய்யலாம் சொல்லுங்க?
- பாண்டியன்
லக்ஷ்மிசரவணக்குமார் கவிதைகள்…
- லக்ஷ்மிசரவணக்குமார்
எல்லைகள்
- அனுஜன்யா
அறையில்....
- வேல் கண்ணன்
விலை
- நந்தன்
எதிர் பிம்பம்
- கே.பாலமுருகன்
ரணத்தின் வாசனை
- வே . முத்துக்குமார்
மைக்கேல் ஆஞ்சலோவின் டேவிட்
- ஆனந்த் அண்ணாமலை
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
நட்புக்காலம்
- பாபுஜி
வட-அமெரிக்க ஹைக்கூ
- தமிழில்:ஆர்.அபிலாஷ்
விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்
- -
click here
எல்லைகள்
அனுஜன்யா

தொட்டிக்குள் தங்க மீன்கள்
அலைந்து கொண்டிருக்கின்றன
இங்குமங்கும் மற்றும்
மேலும் கீழும்
நீரின் ஆழங்களையும்
கண்ணாடி எல்லைகளையும்
அவ்வப்போது சோதனை செய்தபடி
சிறை பிடித்த பெருமிதத்தில்
 நான் பார்த்துக்கொண்டிருப்பதை
அவைகள் கவனிக்கத்
துவங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை
அவைகளின் வால்கள்
இன்னும் அதிகமாக
இன்னும் நளினமாக
சுழல்கின்றன இப்போது
தங்களின் ஒரு பக்கக் கண்களில்
என் முகத்தைக் கவர்ந்து
செல்கின்றன
கடலிலும், ஆற்றிலும்
குளத்திலும் இந்தத் தொட்டியிலும்
அலைகளை உருவாக்கும் மீன்கள்
என்னைக் கேட்கின்றன
 எல்லைகள் யாருக்கென்று
கண்ணாடியைத் தாண்டத் தெரியாத
நீரில் குதித்து அறியாத
சிற்றலைகளை அங்கீகரிக்கும்
பேரலைகளுக்கு அஞ்சும்
என்னிடம் பதிலில்லை
பதில் இருந்தாலும்

click here

click here
click here