உயிரோசை - Uyirosai-177
 
கிரிக்கெட்டுக்கு வயதுண்டா?
- ஆர்.அபிலாஷ்
நண்பன் எவருடனும் ஒட்டாமல்!
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
நைஜீரியா – மூன்றாம் உலகில் ஒரு மக்கள் போராட்டம்
- குருமூர்த்தி பழனிவேல்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (13)
- ராஜ்சிவா
பறவை நாகங்களும் மலைப் பூனைகளும்
- ஷாநவாஸ்
கண்மணி கமலாவுக்கு புதுமைப் பித்தன் (ஒரு வாசிப்பு அனுபவம்)
- உஷாதீபன்
3 இசை விமர்சனம்
- சின்னப்பயல்
‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’ நூலாசிரியர் நேர்காணல்
- கே.பாலமுருகன்
இய‌ல்பு
- ராம்ப்ரசாத்
நாதப்பிரம்மம்
- ராஜா
ஹேமா கவிதைகள்
- ஹேமா
இளங்கோ கவிதைகள்
- இளங்கோ
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
- ஆறுமுகம் முருகேசன்
விடைபெறுதல்
- வளத்தூர் .தி.ராஜேஷ்
செல்லா இடத்துச் சினம்
- பிரேம்குமார்
பசி
- ஆத்மார்த்தி
பிரியங்களின் அந்தாதி
- இவள் பாரதி
எனக்கு மிகவும் பிடிக்கும்
- சின்னப்பயல்
சில்வர் மோளி
- கிஷோர் ஸ்ரீராம்
கனவுக்குச் சொந்தமான அறை
- கே.பாலமுருகன்
கறிவேப்பிலை
- ஷாநவாஸ்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
click here
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்

வா..

என் சிநேகிதங்களைக் குடித்துவிடும்
மதுக் குவளைகளுக்கு
எதற்கொண்டும்
தலை கவிழ்வதாய் இல்லை

வா..

சாகடிப்போம் இறந்த காலத்தை
ஓர் விரல் முத்தம் செய்து
ஓர் புன்னகை எய்து
ஓர் மௌனம் கீறி
ஓர் புணர்தலின் உச்சம் காட்டி
ஓர் அன்பின் மொழி எழுதி

வா..

கொண்டாடுவோம்
நிகழ்காலம் தூவும்
பிரியத்தின் நட்சத்திரங்களை
நிலா மழலை கொண்டு.


ஆகையால் காதல் செய்வோம்

காடென வளரும் வாதையினை
பிரசவித்துவிட்டு,
மழலைப்பேச்சு
மிகப் பிடிக்கும் என்கிறாய்

பெண்மையின் அந்தரங்கம்
புள்ளியென
கோடென
வட்டமென
விவரித்துக் கொண்டாடி, பின்
ரகசியம் அதிஅற்புதம் என்கிறாய்

பிறழ்வின் முற்றத்தில் நின்று
உரக்க கத்துகிறேன்
நீ என் தோழி..
நீ என் தோழி..

ஆகையால்
காதல் செய்வோம் என்கிறாய்

ஓர் அபத்த பகலை
உடைத்துக்கொண்டு நகர்கிறது
எனது வானம் ! 
               

click here

click here
click here