உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
இந்திரஜித்

ஒபாமா வந்தாலும் வந்தார் உலகெங்கும் அரசியலில் பல நகைச்சுவைகள். சிங்கப்பூரில் சீனர் அல்லாதவர் பிரதமராக வர முடியுமா என்ற பழைய கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. வரலாம் ஆனால் இப்போதைக்குச் சரிப்படாது என்பதே அதற்குப் பிரதமர் லீ சியன் லூங் சொன்ன பதில். ஒரு மலாய் சமூக நிகழ்ச்சியில் அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். நெடுங்காலத்துக்கு முன்பு தனபாலன் பிரதமராக வர முடியுமா என்று கேள்வியைப் போட்டு சிங்கப்பூர் இன்னமும் சீனர் அல்லாத பிரதமருக்குத் தயாராக இல்லை என்று பதில் சொன்னார் அன்றைய பிரதமர் லீ குவான் இயூ.

மலேசியாவிலும் புதிய பேச்சு. புதிய வீச்சு. மலாய் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியுமா? என்று ஒரு கேள்வி. அதற்கு இன்னும் மலேசியா தயாராகவில்லை என்றெல்லாம் யார் யாரோ பேசினார்கள். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களில் ஒன்று இதுதான். சிங்கப்பூரில் இதுபோன்ற பெரிய விஷயம் என்றால் சீரியசாக எடுத்துக் கொண்டு பிரதமர் மட்டும்தான் கருத்து சொல்வார். மலேசியாவில் அப்படி அல்ல. எதுவானாலும் தோலான் தொத்தியான் எல்லாம் கருத்து சொல்லலாம். கேட்பார் கிடையாது. மலேசியாவில் எவ்வளவு பேர் கருத்து சொன்னாலும் மகாதீர் சொல் போல் வராது. வாயைத் திறந்தாரே மகாதீர்!

ஒபாமாவுக்கு ஏற்கனவே வாழ்த்துச் சொல்லி அவரது புளோக்கில் எழுதிவிட்டார். பிறகு மெதுவாக மலேசியாவுக்கு யார் பிரதமராக வரலாம் என்பது பற்றிப் பேச்சு கொடுத்திருக்கிறார். சிங்கப்பூரைக் கிண்டல் செய்வது மகாதீரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக சின்ன வயதில் இருந்து இருந்திருக்கிறது. `சிங்கப்பூருக்கு சீனர் அல்லாத ஒருவர் பிரதமராக வர முடியாது என்று சியன் லூங் சொல்லிவிட்டார். அவர்கள் சொல்வதைச் செய்பவர்கள். மலேசியா அப்படி அல்ல. நாம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும்!`

முதல்முறை மகாதீர் பேசுவதைக் கேட்பவர்களுக்கு அவர் சொல்வது புரியாது. எப்போதுமே மகாதீர் சொல்வது ஒன்றாகவும் சொல்ல வருவது ஒன்றாகவும் இருக்கும்.

உண்மையான நகைச்சுவை இனிமேல்தான் உள்ளது. மலேசியாவுக்கு யார் வேண்டுமானாலும் பிரதமராக வரலாம் என்று ஒரு போடு போட்டுவிட்டார் மகாதீர். ஆனால் அந்தப் பிரதமர் பெரும்பான்மைக் கட்சியில் இருந்துதான் வர வேண்டுமாம். மலேசியாவில் மலாய் ஐக்கியச் சங்கமான அம்னோ கட்சிதான் பெரிய அரசியல் கட்சி. அதில் இருந்துதான் பிரதமர் வர முடியும் என்பதை எல்லாம் மகாதீர் விளக்கிச் சொல்வதில்லை.

இன்னொன்றும் சொன்னாரே! அம்னோவில் மலாய்க்காரர் அல்லாதவர் சேர முடியாதாம். மலேசியா அதற்கு இன்னும் தயாராக வில்லையாம்.

ஆக-அம்னோவில் மலாய்க்காரர்கள் மட்டும்தான் இருக்க முடியும். பெரிய கட்சியான அம்னோவில் இருந்துதான் பிரதமர் வர முடியும். ஆனால் மலேசியாவுக்கு யார் வேண்டுமானாலும் பிரதமராக வரலாம்!

மகாதீரை என்ன செய்யலாம் என்றுதானே யோசிக்கிறீர்கள். எவ்வளவோ பேர் யோசித்துவிட்டார்கள். ஒன்றும் செய்ய முடியாது. அவரை விட்டுவிடுவோம். இந்த ஒபாமாவை என்ன செய்யலாம்?

அவரை நாம் என்ன செய்வது? தமிழ்ச் சினிமா பாடல்களில் இனி அவரை வைத்து வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவார்கள் பாருங்கள். சாதாரணமாக முக்கி முக்கி நடித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசனையே ஐநா அழைக்கும் என்றால் ஒபாமாவின் கதி என்ன? அவர் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பதாக ஒரு காதல் பாட்டாவது எழுதாமல் விட மாட்டார் வைரமுத்து.


கால்கழுவி நீ குடித்தால்

காலமெல்லாம் குலம்செழிக்கும்

கால்கழுவி நீர் குடித்தால்

நீர் குடித்தால் நீர் குடித்தால்


செவ்வாய்க் கோளத்தில்

கடற்கரை ஓரத்தில்....


கவிப்பேரரசைவிட பேரரசு இன்னும் நன்றாக எழுதுவார்.


அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் மலேசியா-சிங்கப்பூருக்கு பிரதமர்களைத் தேடும் வேலையில் இறங்குவோம். இணையத்தில் என்ன தெரியுமா சொல்கிறார்கள்?

மலேசியாவில் ஏற்கனவே இந்தியர் ஒருவர் பிரதமராக இருந்திருக்கிறாராம். அதனால் இனியாவது மலாய்க்காரருக்குக் கொடுத்தால் தேவலை என்கிறார்கள். இன்றைய பிரதமர் அப்துல்லாவின் பாட்டி சீனர். சீனாவின் ஹைனான் மாநிலத்தில் இருந்து வந்தவர். இதற்கு முந்திய பிரதமர் மகாதீரை இந்தியர் என்றுதான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறார்களே.

மகாதீரின் தாத்தா கேரளாவில் இருந்து வந்தவர். அவர் பெயர் இஸ்கந்தர். ஆனால் பாட்டி சீனர் என்பதும் தாத்தா இந்தியர் என்பதும் செல்லாது. அப்துல்லாவின் தாத்தா மலாய்க்காரர். அவரது குடும்பம் ஒரு மலாய்க் குடும்பமாகவே இயங்கி வந்திருக்கிறது.

அதேபோன்று மகாதீரும் மலாய்க்காரர்தான். அவரை மட்டம் தட்டுவதற்காக `மாமாக்! மாமாக்!` என்று கூப்பிட்டாலும் உத்தமமான மலாய்க்காரர்தான் மகாதீர். ஒரு இந்தியர் மலாய்ப் பெண்ணை மணந்ததும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மலாய் இனத்தைச் சேர்ந்துவிடுகிறது. பாட்டனார் இஸ்கந்தரின் புதல்வர் முகம்மது ஒரு மலாய்க்காரர்தான். அவரும் ஒரு மலாய்ப் பெண்ணையே மணந்தார். அவர்களுக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஒருவர்தான் மகாதீர். அதனால் அவருடைய தாத்தா இந்தியர் என்பதை வைத்து அவரை இந்தியர் என்று சொல்வது அபத்தம்.

இணையத்தில் இப்படித்தான் கண்டதும் எழுதுவார்கள்!

மலாய்க்காரர்களுக்காக மகாதீர் போல் பாடுபட்டவர் எவரும் இல்லர். ஆனால் அரசியல் அப்படிப்பட்டது. ஏராளமான பணமும் பேரும் புகழும் கொண்டுவரும். அதேபோல் பணத்தைத் தவிர மற்றதெல்லாம் காற்றில் பறந்து சென்றுவிடும்.ஒரு தமிழர் மலேசியாவுக்கோ சிங்கப்பூருக்கோ பிரதமராக வந்தால் தமிழர்களுக்குப் பெருமையா? அப்படி ஒரு நிலை வரலாம். அப்படி வந்தாலும் அதனால் தமிழர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு தனிமனிதரின் உயர்வு அந்தத் தனிமனிதரைப் பற்றியதுதான். அதற்காக அவரது குடும்பத்தினர் பெருமைப்படலாம். அவரும் என் இனத்தைச் சேர்ந்தவர் என்று மற்றவர்கள் பெருமைப்பட ஒன்றும் இல்லை.

ஒரு தமிழர் பெரிய தலைவராக வந்தால் அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதை வைத்து அவரது ஜாதிக்காரர்கள் பெருமைப்படுவார்கள். பெருமைப்படுவதோடு நின்றுவிட மாட்டார்கள். அங்கங்கே நன்கொடை கொடுக்கிறேன், நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று சொல்லி அவர் எங்கள் ஜாதிதான் பாருங்கள் என்று கூத்தடித்துவிடுவார்கள்.

சிங்கப்பூரிலும் சில ஜாதிகள் பயங்கரமாக வளர்க்கப்படுகின்றன.

எல்லாருக்கும் பொதுவான சீனரே பிரதமராக இருப்பதுதான் நமக்குப் பெருமை. தமிழர்கள் எவ்வளவோ குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சீனர்கள் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். திறமை உள்ள யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை சிங்கப்பூரில் நான் பார்த்ததில்லை; அப்படியே ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் அதற்கு இனம் காரணமாக இருந்ததில்லை.

ஒரு வர்த்தக நிறுவனத்தில் யாருக்கு வேலை கொடுப்பது என்பதை அந்த நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப அது முடிவு செய்கிறது. அதை எப்படிக் குறை சொல்லலாம்? ஒரு மெகா ஸ்டார் என்ற நிறுவனத்தில் ஒரு கலைச்செல்வன் என்ற வர்த்தகர் பாஸ்கரன் என்பவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்கிறார். ஏன் சீனருக்கு வாய்ப்புக் கொடுக்கலாமே?

தேவை திறமை இரண்டும் சேர்கிறது. தமிழர்களைப் போல் ஆயிரத்து எட்டு வேறுபாடுகளைக் காட்டுவதில்லை சீனர்கள் என்பதுதான் நிஜம்.

ஒபாமா வெற்றிபெற்றால் கறுப்பாக இருக்கும் நமக்கெல்லாம் பெருமையா? கறுப்பர்கள் உலகெங்கும் மேலும் ஒரு அங்குலம்கூட நகர முடியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்கள். வெள்ளையர்கள் மேலும் ஒரு படி முன்னேறியிருக்கிறார்கள்.

யாருக்குப் பெருமை? தன் இனமே வாழ வேண்டும் என்று நினைக்கும் மகாதீர்களுக்கு இதில் என்ன பெருமை? கம்யூனிட்டி பிராணியான நமக்கெல்லாம் என்னதான் பெருமை?

click here

click here
click here