உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
தமிழவன்

"திறனாய்வுக் கேள்விமரபு" (Critical Enquiry) என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து ஒரு காலாண்டிதழ் வந்து கொண்டிருக்கிறது.

அந்தக் காலாண்டிதழில், சில வருடங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட தலைப்புச் சார்ந்து விவாதத்தை நடத்தியது. ஹைடேக்கரின் தத்துவம், பாசிசம் ஜெர்மனியில் வளர்வதற்கு வழி வகுத்ததா?' என்ற பிரச்சினையைச் சுற்றி பல சிந்தனையாளர்கள் கட்டுரையும் கருத்துரையும் முன்வைத்திருந்தார்கள். தெரிதா கூட ஒரு கட்டுரை அளித்திருந்தார் என்று நினைவு.

இந்த விஷயத்தை எதற்காகக் கூறுகிறேன்? தமிழோடு ஜெர்மன் பாசிசத்துக்கு ஒரு தொடர்பு இருக்கிறது. ஐம்பதுகளில் திராவிட எழுச்சி ஏற்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சி, பாசிசத்தோடு திராவிட (தமிழ்) எழுச்சியை இணைத்தது. கால்ட்வெல்லின் நூலில் ஆரிய-திராவிட எதிர்வு முதன்முதலாக வரையறைபடுத்தப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் அகில உலக சிந்தனைப்போக்கின் நீட்சியாய் அமைந்த தமிழ் முதன்மைச் சிந்தனை வரையறை அது. அது மட்டுமல்லாமல் அக்காலகட்ட அகில உலக சிந்தனைப்போக்கே அதுதான். ஆரியர் என்ற சிந்தனைக்கட்டமைப்பு- சமஸ்கிருத அறிவு, மாக்ஸ் முல்லராலும் வில்லியம் ஜோன்ஸாலும் உலக அரங்குக்கு கொண்டு போகப்பட்ட சூழலில் ஜெர்மனியில் பல சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் அங்கு, ஆரியர் சிந்தனைக் கட்டமைப்புத் தான் எதிரியை யூதர்களாய்ப் பார்த்ததன்மூலம் நிறைவேறியது. இந்தியாவில் ஆரியர் கட்டமைப்பு திராவிடர்களைக் கண்டுபிடித்ததின் மூலம் நிறைவேறியது. திராவிடப் பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சியில் பல பிராமணர்களும் ஆரம்பக்கட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பின்பு சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் போன்றவைகளின் இயக்க உருவாக்கத்தில் ஆரியர்-திராவிடர் எதிர்வு, பிராமணர்-பிராமணரல்லாதார் என உருவம் பெற்றது.

எப்போதும் கம்யூனிஸ்டு தோழர்கள் அகில உலக சிந்தனையென்று ரஷ்யமூல சிந்தனையையோ, ஆங்கிலமூலச் சிந்தனையையோ, சீன மூலச்சிந்தனையையோ மேற்கொள்வது வழக்கம்.

பரிதாபம், இவர்களுக்குத் தமிழ்மூலச்சிந்தனை என்று ஒன்று உருவாவதேயில்லை. அதனால் தான் பி. ராமமூர்த்தியும், எஸ்.. முருகானந்தமும் தமிழ் எழுச்சியை(திராவிட) பாசிஸ்டு எழுச்சி என்று கூறி வரலாற்றில் மிகப் பெரிய தவறை தொழிலாளர்களின் பெயரால் செய்தார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் சாம்ராஜ்யம் கட்டமைப்போடு இருக்கவில்லை. மாராட்டியர்கள், விஜயநகர தெலுங்கர்கள், கன்னடர்கள், என்று தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி தமிழ் உணர்வு தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவியது. கடைசியில் தென்காசியில் ஓடி ஒளிந்து வாழ்ந்தது சங்காலத்திலிருந்து தொடர்ந்து கால்வழியைக் காப்பாற்றிய பெரும் பரம்பரை.

இந்த சரித்திரக்காலகட்டத்தில் வெள்ளையர்கள் தமிழகத்தைக் கைப்பற்றுகின்றனர். அந்தச் சூழலில் சூடு சுரணையுள்ள தமிழ்உணர்வு இருந்திருந்தால்- மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் பாடிய உள்ளெழுச்சியைத் தமிழர்கள் புரிந்திருக்க வேண்டும். ஆனால் நம்முடைய கம்யூனிஸ்டு தோழர்கள் தமிழ் எழுச்சியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் அதனை பாசிஸ்டு எழுச்சி என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஆரியர்-யூதர் என்ற எதிர்வுக்கு இணையான ஆரியர்- திராவிடர் என்ற எதிர்வு இவர்களை ஏமாற்றியிருக்கிறது. அதாவது ஒரு உண்மைசார் நிலைப்பாடு இங்கே உருவாகாமல் ஒரு பிரதியியல் (டெக்ஸ்டுவல்) செயல்பாடு மொத்த தமிழ் கம்யூனிஸ்டுகளையும் கட்டமைத்திருக்கிறது. இன்று எல்லா உண்மைகளும் மொழி விளையாட்டாகப் பார்க்கப் படும்போது இது ஆச்சரியத்தைத் தருகிறது.

பெரிய பரிதாபம் என்ன என்றால் இன்றும் ஈழத்தமிழ் எழுச்சியைப்புரிந்து கொள்ளாமல் அனைத்திந்தியா என்ற கோழிமுட்டை உடைந்து விடும் என்று ஒரு மனப்பிராந்தியால் பீடிக்கப்பட்டு எட்சூரியும் காரத்தும் கூறும் வாக்கியங்களை நம்பி தமிழகத்தில் கட்சி நடத்துகிறார்கள் தமிழ் கம்யூனிஸ்ட் தோழர்கள்.

ஜெர்மனியில் ஹைடேக்கரும், நீட்சேயும் தங்கள் தத்துவத்துக்குள் ஒரு ஜெர்மென் மொழிசார்ந்து எழும் கருத்துருவத்தைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் நாம் இன்று தமிழை ஆங்கிலவாக்கிய நினைவில் எழுதுவதுபோல் ஹைடேக்கருக்கும் நீட்சேக்கும் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை. ஒரு மூலப்படிம உணர்வெழுச்சி அவர்கள் தத்துவத்துக்குள் அவர்களைத் தெரிந்தோ தெரியாமலோ வழிகாட்டியிருக்கும்.

ஆனால் - இப்போது என் உள்நோக்கத்துக்கு வருகிறேன்- தமிழ் எழுச்சியை வழிகாட்ட, அர்த்தப்படுத்த, வடிவப்படுத்த தத்துவம் ஒன்றைக்கட்ட வேண்டும். அப்படி மூலப்படிம நினைவுகள் சார்ந்த ஓர் சிந்தனை ஒழுங்கிணைவைச் செய்வதில் தப்பில்லை என்பதுதான் என் வாதம்.

அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் சென்று செவ்விந்தியர்களைக் கொன்று தள்ளிய போது ஒரு செவ்விந்திய ஹைடேக்கரோ, நீட்சேயோ, தோன்றி செவ்விந்திய மூலப்படிம உணர்வை எழுப்பி ஐரோப்பியர்களைத் திருப்பித்தாக்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். வரலாறு விநோதமாக இருந்திருக்கும்.

இதே தான் ஆஸ்திரேலியாவிலும், பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடந்தது. அந்தந்த தேசியக் குடிகள் தங்களுக்குள் ஒரு ஹைடேக்கரோ, நீட்சேயோ, உருவாகும் அளவு தொழில் நுட்பத்திலும் சிந்தனையிலும் வளரவில்லை.

இன்று தமிழர்களும் இதே ஆதி வாசிகளின் சூழலில்தான் உள்ளனர். நம்முடைய ஆதிவாசித் தலைவர்தான் கலைஞர். ஒரு தமிழ் ஹைடேக்கரோ, ஒரு தமிழ் நீட்சேயோ உருவாவதில் தவறில்லை. செவ்விந்தியர்களோ, ஆப்பிரிக்க தேசியக் குடிகளோ, அப்படி ஒரு மனித குல அழிப்பைச் செய்துவிடமாட்டார்கள். தமிழர்களும் செய்துவிடமாட்டார்கள். தங்களைத் தற்காக்கும் போர்தான் செய்கிறார்கள்.

அகில உலகமெங்கும் பரவியுள்ள அகண்ட தமிழ் அகிலம் தன்சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டும். தன்னுடைய ஹைடேக்கர் யார், நீட்சே யார், அத்தகைய சிந்தனைகள் எந்தெந்த தமிழ் நூல்களில் அடங்கியுள்ளன என்று மூலப்படிமக் கோட்பாடு சார்ந்து புதிய ஆய்வு தோன்ற வேண்டும்.

நீட்சே பற்றிய நூல்ஒன்று தமிழில் வந்துள்ளது. மலர்மன்னன் எழுதியுள்ளார். அதைவிட நீட்சே பற்றிய கைலாசபதியின் ஒரு வரி தமிழில் மிகப் பிரபலமாகிவிட்டது. 'பாசிச ஜடாமுனி' என்ற பிரயோகம் ஒரு உயர்ந்த தத்துவவாதிக்குக் கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுக்கவில்லை. நீட்சேயின் மூல நூல்களைப்படிக்க வேண்டும். அப்படி மூல நூலைப்படித்த பல உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் உள்ளனர். ழான் பவுல் சார்த்தரிடம் நீட்சே பாதிப்பு உண்டு. இன்னொரு மிகமுக்கியமான சிந்தனையாளர் மிஷெல் பூக்கோ, அவரிடம் நீட்சே பாதிப்பு உண்டு. இப்படிப்பட்ட தத்துவ உள்ளொளி தரக்கூடியவரை பாசிச ஜடாமுனி என்று ஒதுக்க முடியுமா? எனக்கென்னவோ அப்படி ஒதுக்க முடியாதென்றுதான் தோன்றுகிறது. இடது சாரித் தோழர்கள், ஃபிராய்டை இப்படித்தான் ஒதுக்கினார்கள். அல்துஸ்ஸர் என்ற கம்யூனிஸ்ட், தத்துவ அரங்கில் தோன்றிய பிறகு அது தவறு என்று கம்யூனிஸ்டுகள் உணர்ந்தனர். தமிழ் மூலப்படிம நோக்கில் நீட்சேயை ஒதுக்கக் கூடாது என்பது என் வாதம்.

ஏன் என்று கேட்கிறார்கள்.

நீட்சேயின் ஆரம்பக்கட்ட நூல்களில் ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது. அதில் கிரேக்க இலக்கியத்தின் கருத்துகளில் இருந்து சில தத்துவக் கருத்துகளை உருவாக்குகிறார் நீட்சே.

அப்படி நீட்சே கூறும் இரு கருத்துகள் ஒன்று 'அப்பொலனியன்' அம்சம். இரண்டு 'டைனோபியன்' அம்சம். இந்த இருசிந்தனைகளையும் படித்தபோது, அவற்றின் ஆழங்களோடு, எனக்குத் தமிழரின் புராதன இலக்கியத்திலிருந்து தத்துவம் செய்ய யாருக்கும் தோன்றவில்லையே என்று வருத்தமாக இருந்தது. அகம், புறம் என்ற இருமை எதிர்வும், இரண்டும் இணைகின்றன என்ற (அகப்புறம்) இயங்கியல் கருத்தும் தமிழர்களின் சிந்தனையில் உள்ளன. சமணர்களால் ஓரளவு சாத்வீகமாக்கப்பட்ட தமிழ் மரபு மீண்டும் தன் மூலப்படிமக்கூறுகளைக் கண்டடைவதில் லாபமிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

பிரச்சினை வேறொன்றுமில்லை; எந்தச் சிந்தனையாளனின் மூல நூல்களையும் நாம் படிப்பதில்லை. சிந்தனைக்குப்பதில் அந்த நபர் பற்றிய ஒருவரிப் பிரச்சாரம் மிகவேகமாய் நம்மை வந்தடைகின்றது. நீட்சே என்றால் பாசிச ஜடாமுனி!

உலகக் காலனியாதிக்க எதிர்ப்புச்சிந்தனையில் பிரான்ஸ் ஃபானன் கருத்துகளைப் பலர் அறிந்திருக்கலாம். பிரான்ஸ் பானனும் நீட்சே மரபில் வருபவர். இதனைப் புரிந்து கொள்ள பிரான்ஸ் பானனின் நூலான 'பூமியில் இழிந்தோர்' (ரெச்சர்ட் அப் தி எர்த்) என்ற நூலின் முன்னுரையைப் படிக்க வேண்டும். அதனை எழுதியுள்ளவர் நோபல் பரிசு வேண்டாம் என்று சொன்ன ழான் பவுல் சார்த்தர். அவர் சிந்தனைகளில் நீட்சேயின் பல கூறுகள் உள்ளன. வன்முறை பற்றிய ஃபானனின் கருத்துகளை சார்த்தர் ஆதரித்து முன்னுரை எழுதுகிறார். அல்ஜீரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது வெறிபிடித்த பிரஞ்சு நபர்களுக்கிடையில் வாழ்ந்தபடியே சார்த்தர் வெள்ளைக்கார பிரஞ்சு நாட்டவனைக் கொல்வதை நியாயப்படுத்தி எழுதுகிறார். ஒரு ஐரோப்பியனைச் சுட்டுத்தள்ளுவது என்பது ஒரு கல்லால் இரண்டு பறவைகளை அடிப்பது போன்றது. ஒடுக்குகிறவனையும் ஒடுக்கப்படுகிறவனையும் ஒரே நேரத்தில் அழிக்கும்செயல் அது. ஒடுக்கப்படுபவன் தன் அடிமை நிலையிலிருந்து அழிக்கப்பட்டு சுதந்திரமானவனாகிறான் என்று கூறுகிறார் சார்த்தர்.

இது பாசிசக் கருத்துக் கொலையை ஆதரிக்கும் கருத்து என்று யாரேனும் சொல்ல முடியுமா?

உலகில் இருக்கும் போராளி இயக்கங்களில் மிகவும் கட்டுப்பாடான இயக்கம் தமிழ்ப் போராளி இயக்கம் என்கிறார்கள். அது போல் பெண்கள் யுத்தத்தில் பங்கெடுக்கும் முக்கியமான இயக்கம். உலகத் தமிழர் வரலாற்றில், சார்த்தர் சொல்வதுபோல், வன்முறையால் ஒரு அடங்கிப்போன மக்கள் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்யும் (Reshaping a suppressed history) முயற்சி இன்று நடக்கிறது. இது அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம். பழைய ஞாபகத்தில் உள்ள வரலாற்றை உயிர்ப்பிக்கும் ஆற்றல் வாய்ந்த தருணம்.

இந்தத் தருணத்தைப் புரிந்து கொள்வது எப்படி என்பதுதான் முக்கியமான கேள்வி.

தமிழர்களின் அப்பலோனியன் உணர்வு எது? தமிழர்களின் டயோனிசியன் உணர்வு எது?

இந்த புதுமுறை வரையறுப்பால் அகில உலகத் தமிழ் தத்துவம் ஒன்றை வரையறை செய்வதில் இன்றைய காலகட்டத்தைவிட பொருத்தமான காலகட்டம் ஒன்று உள்ளதா?

இதுபோல ஹைடேக்கர் மொழியை ஒரு முக்கியமான அறிவு வழங்குமுறையாகப் பயன்படுத்துகிறார். அன்றைய ஜெர்மன் மொழி அனைத்து ஜெர்மன் மக்களையும் ஒன்றிணைத்ததைப் பார்த்ததிலிருந்துதான் இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்.

click here

click here
click here