உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
கெட்ட பயல்
வா.மணிகண்டன்

 
Ketamine. இதை எப்ப‌டி உச்ச‌ரிக்க‌லாம்?

கேட்டமைன் என்று உச்சரிக்கலாம். "கெட்டமைன்" என்று படித்தாலும்கூட உச்சரிப்பும் பொருளும் சரிதான்.

த‌னேஷ் கெட்ட‌மைன் பிரிய‌ர். கொழுக் மொழுக் என்றிருக்கும் த‌னேஷைப் பார்த்தாலே நீங்க‌ள் முடிவு செய்துவிட‌லாம் அவ‌ரிட‌ம் இருக்கும் ப‌ணத்தின் அள‌வை. ப‌ண‌க்க‌ளை தாண்ட‌வ‌மாடும். ப‌ண‌த்திற்கு ஒரு க‌ளை உண்டா என்றெல்லாம் கேட்க‌க் கூடாது.

வித‌வித‌மான‌ போதை வ‌ஸ்துக‌ளை முய‌ன்று பார்க்கும் த‌னேஷ்க்கு ஸ்பெஷ‌ல் 'கே' ப‌ற்றி தெரிய‌ வ‌ந்த‌து க‌ல்லூரியின் மூன்றாம் ஆண்டு இன்ப‌ச் சுற்றுலாவில். விசாக‌ப்ப‌ட்ட‌ண‌த்தில் நான்கைந்து நாட்க‌ள் டேரா போட்ட‌ ச‌ம‌ய‌ம் சிர‌ஞ்சீவி ந‌டித்து ஆந்திராவில் ச‌க்கை போடு போட்ட‌ இந்திரா ப‌ட‌ம் ரிலீஸ் ஆகியிருந்த‌து. நண்பர்களோடு கூட்ட‌மாக‌ ப‌ட‌த்திற்கு சென்ற‌ போது அங்கு அறிமுக‌மான‌ ஒரு ஆந்திராவாலா ஏக‌ப்ப‌ட்ட‌ காசை இவ‌ர்க‌ளிட‌ம் வாங்கிக் கொண்டு, (இந்த இடத்தில் இவ‌ர்க‌ள் என்று ப‌ன்மையில் இருந்தாலும் மொத்த‌ ஸ்பான்ஸ‌ரும் த‌னேஷ்தான்) கெட்ட‌மைனைக் கொடுத்திருக்கிறார்.

கெட்ட‌மைன் தாவ‌ர‌த்திலிருந்து கிடைப்ப‌தில்லை. 1962 ல் Parke-Davis நிறுவ‌ன‌த்தால் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ உப்பு வ‌கை வேதிப் பொருள். ஆர‌ம்ப‌த்தில் ம‌னித‌ர்க‌ளுக்கும், வில‌ங்குக‌ளுக்கும் அறுவை சிகிச்சையில் ம‌ய‌க்க‌ ம‌ருந்தாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தினார்க‌ள். யாரோ ஒரு தில்லால‌ங்க‌டி ம‌னித‌ன் இதை 'ச‌ர‌க்காக‌'வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியும் என்ப‌த‌னைக் க‌ண்ட‌றிந்து உல‌க‌ம் முழுவ‌தும் ம‌ப்புதாரர்க‌ளின் வ‌யிற்றில் பால்(பினாயில்?)ஐ வார்த்துவிட்டார்.

தனேஷ் குரூப் காசு கொடுத்து கெட்டமைனை வாங்கியது வாங்கிவிட்டார்கள். ஆனால் எத்த‌னை எடுக்க‌ வேண்டும், எவ்வ‌ள‌வு எடுக்க‌ வேண்டும் என்று தெரியாம‌ல் அந்த‌ இர‌வில் இணைய‌த்தில் மேய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்க‌ள். Ketaset(கெட்ட‌மைனின் ஒரு வ‌டிவ‌ம்) 4 ml உட்கொண்டிருக்கிறார்க‌ள். இது 400 mg கெட்ட‌மைனுக்குச் ச‌ம‌ம்.

வெறும் வ‌யிற்றில், ஒரு ஸ்பூனில் வைத்து தொண்டைக்கு அருகில் வைத்து விழுங்கிவிட்டு மேலாக‌ ஆர‌ஞ்சுப் ப‌ழ‌ச் சுளைக‌ளைத் தின்றிருக்கிறார்க‌ள். கெட்ட‌மைனின் சுவை கொடூர‌மான‌தாக‌ இருக்கும் என்று தெரிய‌வ‌ந்த‌தால் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கை. அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ள் போதையோடு திரிந்திருக்கிறார்க‌ள்.
பொதுவாக‌ கேட்ட‌மைன், 'கேட்ட‌மைன் ஹைட்ரோ குளோரைடு' என்ற‌ பெய‌ரில் போதை ப‌ய‌ன்பாடுக‌ளுக்காக‌க் கிடைக்கிற‌து. விலையும் மிக‌ அதிக‌ம். ஒரு கிராம் கிட்ட‌த்த‌ட்ட‌ ஆயிர‌ம் ரூபாய்க்கும் மேலாக‌ ஆகும். 'குருவி ச‌ர‌க்கு'(கடத்தல்) என்றால் கிட்ட‌த்த‌ட்ட‌ ஐயாயிர‌ம் ரூபாயைக்கூட‌த் தொட‌லாமாம். Ketalar(Parke-Davis), Ketaset(Bristol) என்ப‌து எல்லாம் விற்ப‌னைக்குக் கிடைக்கும் கெட்ட‌மைனின் வ‌டிவ‌ங்க‌ள். இந்தியாவில் கிடைக்கிற‌தா என்று தெரிய‌வில்லை.

தனேஷ் குழுவில் இருந்த‌ சார்ல‌ஸ் ம‌ட்டும் ஊசி மூல‌ம் த‌சைக‌ளுக்கு இடையில் செலுத்திக் கொண்டிருக்கிறான். இந்த‌ முறையில் எடுத்துக் கொள்வ‌த‌ற்கு 100 ml ச‌ரியான‌ அள‌வு. அடுத்த‌ நாள் வ‌ரை சார்ல‌ஸ் போதையில் கிட‌ந்தானாம். போதை என்று மட்டும் சொல்வது கெட்டமைனின் போதையைக் குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடலாம். த‌ன் உட‌லை விட்டு மனம் முற்றிலும் நீங்கிவிடும் போதை.
அவ‌ன‌து சொற்களில் சொன்னால் "இற‌க்காம‌ல் இற‌ப்ப‌து".

Dissociative Drug என்ற‌ வகையில் ஸ்பெஷ‌ல் கே வ‌ரும். டிஸோஸியேடிவ்(த‌மிழில் "பிணைப்பு நீக்கி"?) வ‌கை என்ப‌து ம‌னித‌ மூளையின் ம‌ற்ற‌ப் ப‌குதிக‌ளில் இருந்து வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை உண‌ர்வுப் ப‌குதிக்கு(Conscious Mind)வ‌ர‌விடாம‌ல் த‌டுத்துவிடும். இந்த‌த் த‌டுப்புதான் போதைக்கான‌ அடிப்ப‌டைக் கார‌ண‌ம்.
இது மூச்சின் வேக‌த்தைக் குறைத்த‌ல், இத‌ய‌த் துடிப்பின் அள‌வினைக் குறைத்த‌ல் என‌ச் ச‌ங்கு ஊதுவ‌த‌ற்கான‌ அனைத்து வ‌ழிமுறைக‌ளுக்கும் அடிகோலுப‌வை. உட்கொள்ளும் அள‌வு ஏடாகூடமாக மாறினால் க‌ட்டையில் ஏறுவ‌து நிச்ச‌ய‌ம்.
K-hole என்ற‌ ஒரு சொல் கெட்ட‌மைனை உப‌யோக‌ப்ப‌டுத்துபவ‌ர்க‌ளிட‌ம் மிக‌ப் பிர‌ப‌ல‌ம். கிட்ட‌த்த‌ட்ட‌ 150 mg அள‌வுக்கு எடுத்துக் கொண்டால் இந்த‌ K-hole ஐ அடைய‌லாம்.  ம‌ன‌மும், உட‌லும் எந்த‌ வித‌மான‌ தொட‌ர்புமில்லாமல் ஆகும்‌ பிரிவு நிலை. இந்த நிலையை ப‌ற‌ப்ப‌து, ப‌ட்டுத் துணி மீதாக‌ உட‌லை உருட்டுத‌ல் என்று காத‌லின் உச்ச‌த்தில் பித‌ற்றுவ‌து போன்று ஏதேதோ வ‌ர்ணிக்கிறார்கள்.
வ‌ழ‌க்க‌ம் போல‌ இதை உட்கொண்டால் அது வ‌ரும், இது வ‌ரும் என்றெல்லாம் வ‌ரிசைப்ப‌டுத்தாம‌ல் ஒன்றே ஒன்று ம‌ட்டும் சொல்லிக் கொள்ள‌லாம். தொட‌ர்ந்து ஸ்டிரீட் கே வை(கெட்டமைனின் இன்னொரு பெய‌ர்) உப‌யோக‌ப்ப‌டுத்தினால் ஈர‌லும், சிறுநீரக‌ சுவ‌ர்க‌ளும் பாதிக்க‌ப்ப‌ட்டு விரைவில் 'சோலி'யை முடித்துக் கொள்ள‌லாம்.
The Little Book of Ketamine என்பது கெட்டமைன் குறித்தான உலகப்புகழ்பெற்ற புத்தகம். ப‌டிக்க‌ச் சுவார‌சிய‌மாக‌ இருக்கிற‌து. அமேசான்.காம்மில் விற்கிறார்க‌ள்.
செல்ல‌ப்பெய‌ர் இல்லாத‌ போதைப் பொருளா? கெட்டமைனுக்கு ஏக‌ப்ப‌ட்ட‌ பெய‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌. சில‌ சாம்பிள் ம‌ட்டும் இங்கே. கெ,கெல்லாக்ஸ், க்ரிப்பிள், கெஸிள், டெய்ஸி, சோன்,கென்னி, கெவின், கிங் காங், கெட்ஸோ, ப‌ட்டிய‌ல் நீள்கிறது.....
உல‌க‌த்தில் அதிக‌ செல்ல‌ப் பெய‌ர் கொண்ட‌ போதைப் பொருள் இதுவாக‌க்கூட‌ இருக்க‌லாம். செல்ல‌ப்பெய‌ர் காத‌லிக்குத் தானே வைப்பார்க‌ள்? ஸ்பெஷ‌ல் கே வுக்கு எத்த‌னை காத‌ல‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் பாருங்க‌ள்.
vaamanikandan@gmail.com
--
.

click here

click here
click here