உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
தீப. நடராஜன்

 கடித இலக்கியம்

தீப.நடராஜன்

"பஞ்சவடி"

2, அனுமந்தபுரம் தெரு,

தென்காசி-627 811

18-01-2003


நட்பும் அன்பும் நல்கியவருக்கு வணக்கம்.

"விளிம்பில்" படித்துக் கொண்டிருக்கிறேன்.

முதலில் பக்கம் 75 முதல் 81 வரை படித்து விட்டேன்.

சாகாவரமுள்ள உங்கள் எழுத்துக்குள் என்னைப் பதித்துவிட்டீர்கள். ஒருவகையில் நானும் சாஸ்வதமாகிவிட்டேன்! புல்லரிக்கிறது.

பெங்களூரில் இருக்கும் வள்ளி எனக்கு "விளிம்பில்" புத்தகத்தை அனுப்பினார். அவர் என்னைத் தம் பெரியண்ணாவாகத் தத்தெடுத்திருப்பவர். கொடைவள்ளல் அழகப்பச் செட்டியாரின் சகோதரர் பேத்தி.

தென்காசிக்கு மேனேஜராக வருவதற்கு முன்பே ஒரு முறை அறிமுகமில்லாத என் வீட்டுக் கதவை வந்து தட்டி, மனக்கதவையும் திறந்து, உள்ளே புகுந்தவர் நீங்கள்.

உங்களை மாதிரியே, முன்பின் தெரியாத என்னை வந்து பார்த்துப் பரவசப்படுத்தியவர் தி.ஜானகிராமன்.

என்னை எவ்வளவு பெருமைக்குரியவன் ஆக்கினீர்கள் இருவரும்.

இந்த வீட்டில் வந்து பிறவி எடுத்தது ஒரு பேறு. உங்களைப் போன்ற இலக்கிய மேதைகளோடு பழகும் வாய்ப்பைப் பெற்றது இன்னொரு பாக்யம்.

எங்கள் கையை விட்டுப்போன நெல்லை வண்ணார்பேட்டையிலுள்ள (வட்டத்தொட்டி) வீட்டை, அந்தத் தெரு வழியாகப் போய் வெளியே இருந்தே ஒருமுறை பார்த்தேன்.

மீனம்பாக்கத்தில் அப்பாவோடு களித்த வீட்டைப் பார்க்க ஒரு காலைப் பொழுதில் போனேன். அஞ்சலகம் அதில் செயல்பட்டு வந்தது. காலை வேளையாதலால் அலுவலகம் திறக்கப்படவில்லை.

மைலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்துக்கு நேர் எதிரே "கபாலி நிவாஸ்" இருக்கிறது. நான் பிறந்து, தவழ்ந்து விளையாடிய வீடு அது. எவ்வித மாற்றமுமின்றி இன்றும் அப்படியே இருக்கிறது.

இந்த இல்லங்களை எல்லாம் சென்று பார்க்கவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டது. நமக்கு உரிமையில்லாத அந்த வீடுகள் நம் உள்ளத்தில் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது.

பாங்காக்கில் (சிங்கப்பூரா?) இருக்கும் சேகர் இதே உணர்வோடு சில ஆண்டுகளுக்குமுன் தென்காசிக்கு எல்லாரையும்-உங்களையும் சேர்த்து- இழுத்துக்கொண்டு வந்தான்.

தென்காசி ஊரையும், தெருவையும், மண்ணையும் காண வேண்டும் என்ற உந்துதல் அவனுக்கு.

இப்படித்தான் இந்த உலகத்தைப் பார்க்கவேண்டும் என்று மறுபடி, மறுபடி பிறவி எடுக்கிறோமா?

மெனக்கெட்டு லால்குடி ஊரையும் பார்த்துவிட்டு, சப்தரிஷியையும் தரிசித்து வந்தேன். லா..ரா. என்னுள் புகுந்ததால்.

கும்பகோணம் சென்றபோது மங்களாம்பிகையைப்போய்ப் பார்த்தேன். தி.ஜா.வின் எழுத்தில் காட்சி தந்தவள் அவள்.

கங்கையை கங்கையாகவும் ஹூக்ளியாகவும் கண்டு களித்திருக்கிறேன். ஆனால் காசிக்குப் போனவனல்ல.

விளிம்பில் ஆரம்பித்து எங்கெங்கோ அலைகிறேன்.

சிந்தாநதி புத்தகத்தில் முதல் பக்கத்தில் கடிதமே எழுதினீர்கள். அதில் முத்தம்மாளுக்கு ரெண்டு வரிகள்.

நீங்கள் முத்தம்மாளிடம் வைத்திருக்கும் ப்ரியம் அவளுக்கு ஒரு ஆசீர்வாதம். அடுக்களைக்கே அவளைத் தேடிப் போவீர்களே!

எங்களிடம் நீங்கள் காட்டும் அன்பும் பரிவும் சௌலப்யமும் நினைக்க நினைக்க புளகாங்கிதம்.

என்னுடைய குறைகளையோ, அவலங்களையோ, விதியின் கொடுமையில் வெந்ததையோ உங்களிடம் சொல்லப் போவதில்லை.

யயாதி கதையில் தந்தையும் மகனும் இளமையைப் பரிமாறிக் கொண்டதுபோல நாம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவேண்டாமே?

விளிம்பில் நீங்கள் நிற்பதாகச் சொல்கிறீர்கள். நானும் உங்கள் பின்னாலே வந்து கொண்டுதான் இருக்கிறேன்.

நமஸ்காரம்.


தீப.நடராஜன்

பின்குறிப்பு:

தீப. நடராஜன் - ரஸிகமணி டி.கே.சி. அவர்களின் பேரன்.

'விளிம்பில்' - லா..ரா. எழுதிய நூல்.

முத்தம்மாள் - தீப.நடராஜனின் துணைவியார்.

click here

click here
click here