உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
சட்டம் ஒரு ஜாதி அறை
மனோஜ்

நாகரிக சமுதாயம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித் தாக்குதல், சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 12ஆம் தேதி அரங்கேறியதைப் பார்த்து நாடே அதிர்ந்தது. அரசியல் தகராறு, அற்பக் காரணங்களுக்காக பக்கத்துக் கல்லூரிகளுடன் மோதுவது ஆகியவற்றைத்தான் மாணவர்களிடம் இதுவரை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் ஜாதி ரீதியாக வெறி மோதலை நடத்தி அவமானக் கறையைப் படிய வைத்திருக்கிறார்கள். சென்னை போன்ற பல்லினக் கலாசாரம் கொண்ட ஒரு பெருநகரில் சட்டம் பயிலும் கல்வி ஸ்தாபனத்தில் கேவலமான ஜாதிச் சண்டை நடந்திருப்பது வெட்கக் கேடு.

தேவர், தலித் என்ற இரு சமூகத்துக்கு இடையே இங்கு பல காலமாக புகைச்சலும் சண்டையும் தொடர்ந்து வந்துள்ளது. ’முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இவர்களுக்கும் எஸ்.சி மாணவர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தேவர் ஜெயந்தி அன்று பேரவை அடித்த போஸ்டரில், கல்லூரியின் பெயரான டாக்டர் அம்பேத்கர் பெயரைப் போடாமல், வெறும் சட்டக்கல்லூரி என்று போட்டதுதான் கலவர விதைக்கு மூல காரணம். பருவத் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது பேரவை சம்பந்தப்பட்ட மாணவர்களை அடிக்கத் திட்டம் தீட்டப்பட்டதாகவும், தேசிய அளவிலான ஜாதிக் கட்சி ஒன்றின் தலைவரின் துணையுடன் அடியாட்கள் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களுடன் மாணவர்களாக சேர்ந்து இத் தாக்குதலை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை ஆகிய மாணவர்கள், மனம் பதறவைக்கும் வகையில் படுபயங்கரமாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இந்த பயங்கரத் தாக்குதல் சம்பவம் வெளிவந்ததால், இப்போது தாக்குதல் நடத்திய மாணவர்கள் மட்டுமல்லாமல் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எதிர்காலத் தாக்குதலுக்கும் இலக்காகி உள்ளனர்.

''அன்றைய மோதலில் மாணவர் பாரதிகண்ணன் கத்தியுடன் பாய்ந்து வந்து தாக்கியதால்தான் வெறி அதிகமாகி மற்ற மாணவர்கள் அவரை நையப்புடைத்தனர். தலித் மாணவர்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலை நியாயப்படுத்திவிட முடியாதுதான். ஆனால் கல்லூரிக்குள்ளும் நாங்கள் தீண்டாமையை அனுபவித்து வந்தோம். அதுதான் இதற்கெல்லாம் காரணம்'' என்று சொல்கின்றனர் தலித் தரப்பு மாணவர்கள்.

தேவர் இன மாணவர்கள் எங்களுடன் கலந்து பழகவே மாட்டார்கள். கிராமங்களில்தான் ஆதிக்க சாதி இந்துக்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். சட்டம் படிக்க சென்னைக்கு வந்தபின்னும் அது தொடர்ந்தால் நாங்கள் எங்கே செல்வது. தாழ்த்தப்பட்ட சாதிக்கான சலுகைகளைப் பெறுவதை ஏளனமும் கேலியுமாகப் பேசுவார்கள். ஒருமுறை கேன்டீனில் சாப்பாட்டுத் தட்டைத் தொட்டுவிட்டோம் என்பதற்காக சோற்றோடு தட்டை வீசியடித்தவர்கள்தான் இவர்கள். ஹாஸ்டலில் எஸ்சி மாணவர்களுடன் தங்குவதை சாதி இந்துக்கள் விரும்புவதில்லை. கடந்த ஆண்டு தங்களுக்குத் தனி பிளாக் வேண்டும் என்றுகூட போராட்டம் நடத்தினார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு ஹோமோசெக்ஸ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வீசுகின்றனர் என்கின்றனர் எஸ்சி மாணவர்கள்.

அதேநேரத்தில் தேவர் இன மாணவர்களின் வாதம் வேறு மாதிரியாக இருக்கிறது. தேவர் மட்டுமல்ல வன்னியர், நாடார், யாதவர் எனப் பல சாதிப் பிரிவு மாணவர்கள் இங்கு இருக்கின்றனர். ஆனால் எங்களை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர். கல்லூரிக்குள் நாங்கள் ஜாதிப் பாகுபாடு எதையும் பார்ப்பதில்லை. கடந்த ஆண்டு எஸ்சி மாணவர்களால் ஹாஸ்டலில் 30 பேர் தாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இதனால் கல்லூரி மாறிப் போய்விட்டனர். இப்போது ஹாஸ்டல் முழுவதும் தலித் மாணவர்கள்தான் நிறைந்திருக்கின்றனர் என்கின்றனர்.

தென்மாவட்ட கிராமங்களில் நடக்கும் ஜாதிச் சண்டைகள்தான் தலைநகர் சென்னையின் சட்டக் கல்லூரியிலும் அரங்கேறி வருகிறது. இதைத் தடுக்கத் தீர்வு ஏதாவது உண்டா என்றால் இல்லை என்பதுதான் திட்டவட்டமான பதில். நீறுபூத்த நெருப்பாகக் கிடக்கும் வன்மம் மீண்டும் மோதலாக வெடிக்கும். வாக்குவங்கிகளுக்காக ஜாதி அரசியல் நடத்துபவர்கள் இருக்கும்வரை இதற்குத் தீர்வே கிடையாது. வேண்டுமானால் இப்போது நடந்த சம்பவத்தில் இருந்து மாணவர்கள் ஒரு விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள் - இனி அடித்தால் கேமராக்கள் இல்லாதபோது அடிக்க வேண்டும்.

இந்தக் கொடூர சம்பவத்தில் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீசார்தான். அவர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும் நீங்கள் கல்லூரிக்குள் போக வேண்டாம் என்று கமிஷனர் சொன்னதால்தான் நெடுமரம் போல சண்டையைப் பார்த்துக்கொண்டு நின்றோம் என்று சஸ்பெண்ட் ஆன துணை கமிஷனர் சக அதிகாரிகளிடம் புலம்பியதாகச் செய்தி வந்திருக்கிறது. சட்டசபை நடக்கும்போது பிரச்சினை பெரிதாக வேண்டாம் என்பதற்காக அப்படி இருந்தார்களாம். காவல்துறையை ஆட்சியாளர்கள் தங்கள் ஏவல் பணிக்கே தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் வரும் அவலம் இது. கண்முன்னே ஒருவனை 70 பேர் அடித்துத் துவைப்பதைக் கண்டும் பதறாமல் இருக்கும் அளவுக்கு போலீஸ் அதிகாரிகளின் மனமும் உடலும் மரத்துப்போய்விட்டது. காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல சகலமும் கெட்டு அழுகிவிட்டது என்பதற்கு சான்றுதான் சட்டக்கல்லூரி வன்முறை சம்பவம். இதற்கும் பொறுப்பேற்க வேண்டியது அரசியல்வாதிகளே.


click here

click here
click here