உயிரோசை - 17.11.2008
 
அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்
- ஆர்.அபிலாஷ்
தேச பக்தி என்ன விலை?
- இந்திரா பார்த்தசாரதி
ஒபாமாவுக்குச் செவ்வாய்க்கிரகத்தில் கடலோரமாகச் சிலை வைப்போம்
- இந்திரஜித்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
- தமிழவன்
அந்தியின் நிழல்கள்
- வாஸந்தி
பெண் அணங்கு என்னும் பேதமை
- அ.ராமசாமி
நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!
- சுதேசமித்திரன்
காளைச் சண்டை அல்லது அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்
- யமுனா ராஜேந்திரன்
கெட்ட பயல்
- வா.மணிகண்டன்
ஆடும் மாடும் எங்கள் கூட்டம் - I
- ந. முருகேசபாண்டியன்
ஒரு குரூரமான மோதலில் மறைந்திருக்கும் ஜாதீயம்
- மாயா
சட்டம் ஒரு ஜாதி அறை
- மனோஜ்
கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்
- ஸ்ரீபதி பத்மநாபா
மதமாற்றமும் சித்திரவதையும்
- மாயா
பேதமையும் பிரியமும்
- பாவண்ணன்
அவளும் நாய்க்குட்டியும்
- பிரேம்குமார் சண்முகமணி
முதல் முத்தம்
- வே. பிச்சுமணி
விழைதல்
- நிஷாந்தன்
கடற்கரையில் ஓர் காலை
- அனுஜன்யா
தேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்
- கோகுலன்
கே.பாலமுருகன் கவிதைகள்
- கே.பாலமுருகன்
பொய் சொல்வதற்கெனப் பிறந்தவர்கள்
- எஸ்.செந்தில்குமார்
தருமி முதல் தசாவதாரம் வரை
- தமிழ்மகன்
நிறை செம்பு நீரில் விழும் பூக்கள்
- கழனியூரன்
எதிர்கால இந்தியா
- பாபுஜி
ஜுரம்
- பாபுஜி
ஜேக் கெரவேக் கவிதைகள்
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
லா.ச.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது
- தீப. நடராஜன்
அழுதழுது பெற்றாலும், பிள்ளையை அவள்தான் பெற வேண்டும்
- கழனியூரன்
தமுக்கு
- சிவன்
அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்
- ஹரன் பிரசன்னா
உங்கள் கருத்துகள்
- -
click here
தமுக்கு
சிவன்


சிற்றிதழ் என்பதற்கான அலகு என்ன? அதற்கு ஏதேனும் வரையறை உண்டா? அதன் உள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? அதன் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டும்? போன்ற வினாக்களுக்குத் திட்டவட்டமான ஒரு விடை இல்லை. தெரிந்த சில நண்பர்களினூடாகப் புழங்கும் கையெழுத்துப் பிரதி முதல், ஆசிரியர் குழு கொண்டு சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிடப் பெறும் இதழ்கள் வரை ஒவ்வொன்றின் அலகும் வேறுபடுகிறது.

இலக்கியத்தில் பாத்திர மாந்தராக, கீழ் மக்களுக்கு இடமில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்த வகையில் படைக்கப் பெற்று வந்த இலக்கியங்களில் 'இடக்கரடக்கல், குழூஉக்குறி, மங்கலம்' என்பன இலக்கணமாக அமைந்து மொழியின் 'புனிதத்தை' கட்டமைத்து வந்தன. தலித் மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பறைசாற்றும் விதமாகப் படைக்கப்பெறும் எழுத்துகளில் இன்று, மொழி நிகழ்த்திய முந்தைய அரசியல் உடைகிறது. (தலித் மக்கள்தான் அப்படியான 'கெட்ட வார்த்தை' பேசுகிறார்கள் என்பது அப்பட்டமான பொய். எழுத்தில் புனிதம் காத்த இடைநிலை; மேல்நிலை மக்களும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது காது கூசும் சொற்களைப் பிரயோகிக்கத் தயங்குவதேயில்லை.) (வசைச் சொற்கள் இல்லாமல் தலித் சிந்தனையாளர்களின் கட்டுரைகள் கொண்ட இதழ்களும் வந்துகொண்டிருக்கின்றன.)

அவ்வாறு மொழியின் கட்டமைப்புக்குள் நிகழும் அரசியலானது சொற்கள், பொருளடக்கம், கதைமாந்தர் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. அவ்வாதிக்கத்தை உடைத்து, தன்னுடைய குரலை அங்கீகாரம் பெறச் செய்ய வேண்டுமென்பதே தலித் மக்களின் படைப்புகள் மற்றும் அவ்வெழுத்துகளைத் தாங்கிவரும் இதழ்களின் நோக்கம். அந்த வகையில்

'தமுக்கு' என்னும் சிற்றிதழ் 'சூலை-ஆகஸ்ட்-2008' இதழில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்ன என்பதை நமக்கு உணர்த்துகிறது. எல்லா சமூக ஆண்களும் இந்த வன்முறையைக் கொண்டிருக்கின்றனர் எனும் இதன் கூற்று விழிப்புணர்வைத் தருவதாக இருக்கிறது.
ஜெயகரன் அவர்களின் கட்டுரை மிகச் சிறப்பாக, சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது. சினிமா மூலமாக அரசியலுக்கு வருவதை கேள்விக்குள்ளாக்குகிறது.


'தமுக்கு'

இருமாதமொருமுறை இதழ்
ஆண்டுக் கட்டணம் - ரூ.60/-

முகவரி

தலித் ஆதார மய்யம்
32சி, பாரதிதாசன் சாலை,
அரசரடி, மதுரை-16.
தொலைபேசி-0452-2302199.

click here

click here
click here