உயிரோசை - 28.5.2012
 
ஒரு மக்கள் விளையாட்டும் ரேப்பிஸ்டுகளும்: ஆயிரம் பெண்டிருடன் கன ஜோராக நடக்கும் பி.சி.சி.ஐ.யின். ஐ.பி.எல் சந்தை
- மாயா
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 3
- ராஜ்சிவா
எண்ணங்கள் 9: ஒரு நாடகமன்றோ நடந்தது..
- நர்சிம்
கலைந்து கலையாத பிம்பங்கள் - 3 சுந்தர ராமசாமி சில குறிப்புகள்
- இந்திரஜித்
விடுதலையின் நடனம்
- ஆர்த்தி வேந்தன்
ஐபிஎல் – ரசனையின் வீழ்ச்சி, மோசமான அரங்க நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் சுரண்டல்
- ஆர்.அபிலாஷ்
நகரத்தின் கதை பாகம்:14
- சித்ரா ரமேஷ்
அயல் பசி -11
- ஷாநவாஸ்
இலவச இணைப்பு
- எம். ராஜா
பழக்கப்படாத பாதைகளின் சாத்தியங்கள்
- ராம்ப்ரசாத்
அடங்கி இருக்கிறது
- வளத்தூர் தி.ராஜேஷ்
முன் பின்னறியா மழை
- ஸ்வரூப் மணிகண்டன்
அன்படர்ந்த தேற்றுதலில்
- ஆறுமுகம் முருகேசன்
கடந்த ஞாயிறு...
- ஹேமா
சிறுகதை: பாலு மீண்டும் உள்ளூர் வருவான்
- உஷாதீபன்
click here
அன்படர்ந்த தேற்றுதலில்
ஆறுமுகம் முருகேசன்

அன்படர்ந்த தேற்றுதலில்

மரணத்தை விழுங்கிக் கொண்டு
கேவலுடன் மடி வழிய வழிய
உப்பு நீர் நிறைத்து
காதல் இறைஞ்சுகிறது
நிரம்ப பரிச்சயமுள்ள இரவிடத்து 
கண்களைக் குருடாகச் செய்ய


விந்து முந்திய கலவிக்குப்
பிறகான இரவில்
காதல் மனைவியின்
அன்படர்ந்த தேற்றுதலில்
மெல்ல ஒளியுறுகிறது
அமைதியானதொரு பகல்


தற்கொலையின் தற்கொலை

ஆகச்சிறந்த ஒரு வழிப்பாதையை
தேர்ந்தெடுத்ததாய்  நம்பிக்கொண்டு
நடக்கத் துவங்கினேன்

எனக்கு முன்பாகத் தொலைந்துபோக
எண்ணியிருப்பான் போல,
வழி முற்றியதென

திருப்பி வந்து கொண்டிருக்கிறான்
நான் நம்பிய நீலநிறக் கண்களுடைய கடவுள்
நம்பிக்கையற்ற செந்நிறக் கண்களோடு


பரஸ்பரம்

அபரிமிதமான அன்பின்
அபத்த பதில்களில்
அர்த்தப்படும்
நிறைவானதொரு தருணம்

நிழலாய் வியாபிக்கும் வெளியாய்
ஒரு சிறு புன்னகையில்
கவிகிறது நேசத்தின் ஓசை

click here

click here
click here