உயிரோசை - 13.08.2012
 
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (14)
- ராஜ்சிவா
அயல் பசி - 20
- ஷாநவாஸ்
நகரத்தின் கதை பாகம் - 25
- சித்ரா ரமேஷ்
ஒரு நீண்ட நகைச்சுவைப் படம் முடிவுக்கு வருகிறது
- ஆர்.அபிலாஷ்
எண்ணங்கள் 20
- நர்சிம்
பொன் மாலைப்பொழுது
- சின்னப்பயல்
பாற்சிப்பிகள்
- இஸுரு சாமர சோமவீர, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
17-M ரூட்டில் வழக்கத்தைவிட ஜாஸ்தியான டிராபிக் ஜாம்
- ஆறுமுகம் முருகேசன்
கவிதை எழுத மொழி அவசியமா ?
- சின்னப்பயல்
உடைக்கப்பட்ட நம்பிக்கையின் அவமானத்திற்குப் பிறகு
- செ.சுஜாதா
உச்சரிக்க முடியாத கடவுளின் குரல்
- இளங்கோ
இரைஞ்சுத‌ல்
- ராம்ப்ரசாத் சென்னை
வடுக்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
குத்துச்சண்டை
- பாபுஜி
துப்பாக்கிச் சூடு
- பாபுஜி
வெற்றி மேடை
- பாபுஜி
வில்வித்தை
- பாபுஜி
click here
17-M ரூட்டில் வழக்கத்தைவிட ஜாஸ்தியான டிராபிக் ஜாம்
ஆறுமுகம் முருகேசன்

17-M ரூட்டில் வழக்கத்தைவிட ஜாஸ்தியான டிராபிக் ஜாம்

பெருவிபத்து பற்றிய செய்தியையும்
இன்னும் பருவம் எட்டியிராத அம்மா இல்லாத எனது மகள்
புணரப்பட்டு உயிரில்லாது கிணற்றுள் கிடைத்த செய்தியையும்
விளம்பர இடைவேளைக்குமுன் சொல்லி முடித்திருந்தாள்
நிறைந்த வேலைப்பாடுகளுடைய நெக்லஸ் அணிந்த வாசிப்பாளினி

குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து
மிஞ்சிப்போன வாழ்க்கைக்கு யாசகம் செய்வாள் தன்னை
வேளாங்கண்ணியின் இளம் மனைவி
அப்பாயில்லாத சங்கரின் அம்மாவோ பித்துப்பிடித்தவள் ஆகியேவிட்டாள்
பயணத்தில் இருந்த அறிமுகமில்லாத இன்னும் சிலதுகள்
கை கால்கள் விடுபட்டு அரசாங்க ஆஸ்பத்திரியில்
வலி கொள்ளாது கத்திக் கொண்டிருக்கின்றன

பாவம் அந்த துறு துறு நான்கு பள்ளிச் சிறுவர்கள்
சொர்க்கத்தில் கடவுளர்களோடு எண்ணெய் வறுபடுகின்றனர்

கவிழ்ந்த பஸ்ஸின் தப்பிய இயக்குனர்கள்
வழக்குகளோடு பிதுங்கிச் சாவார்கள்?

அதே விபத்தில் இறந்துபோன நான்
சொர்க்கத்தில் சாத்தானோடு ஒயின் அருந்திக் கொண்டே
நாளை உங்களோடு பேசுகிறேன்

அதுவரை நீங்கள் "உச்" கொட்டுங்கள்
செத்தவர்களுக்கெனவும்
பிழைத்தவர்களுக்கு ஆகவும்
நிகழ்ந்த விபத்தின் காரணத்திற்கான
அனுமானங்களைக் கொறித்துக் கொண்டு

*****

அவரவர் சித்திரம் அவரவர்க்கு

உறக்கத்திலிருந்த கனவிலிருந்து
மெல்ல வெளியேறுகிறது
குரங்கு

உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன்
நான்

முன்பே
என்னிடத்து வந்து போயிருக்கலாம் நீங்கள்
நீங்களாகவோ
நீங்களல்லாமல் ஆகவோ

*****

பிரபஞ்சம் நனையும் தீர்த்தக் கரையினிலே

ஞாபகக் காட்டில் பைத்திய மழை வலுக்கும் நேரம்
உனது மௌனக் குடையில்
எனது முத்த விரல்கள்
ரீங்கரிக்கும்
உச்ச ஸ்வாகதத்தில்
பெரும் ஸ்பரிசப் பாடலொன்றை
(தோழி ஆராதனாவுக்கு)

click here

click here
click here