உயிரோசை - 22/12/2008
 
சத்தியத்தின் சரித்திரம்
- செல்லமுத்து குப்புசாமி
ஜார்ஜ் புஷ்க்கு கிடைத்த அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு
- அ.முத்துக்கிருஷ்ணன்
செருப்பும் சிறப்பும்
- இந்திரா பார்த்தசாரதி
திருவள்ளுவர் மலையாளியா?
- ஸ்ரீபதி பத்மநாபா
ஆகாயத்தில் வெடியோசை
- சி.வி.பாலகிருஷ்ணன்
இலங்கை பிரச்சனையும் யுத்த குற்றவாளிகளும்
- தமிழவன்
கூடு திரும்பும் பறவைகள்
- ஆர்.அபிலாஷ்
குழந்தைகளின் விளையாட்டு உலகம்
- ந. முருகேச பாண்டியன்
மலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை
- சுதேசமித்திரன்
பேருந்தை விரும்பாத பேருந்து நிலையங்கள்!
- இந்திரஜித்
கள்ளக்காதலும் குண்டுவெடிப்பும்
- மனோஜ்
உறங்குவதற்கு மட்டும் வரும் ஜெகதா
- த.அரவிந்தன்
குழப்பத் தீர்வுகள்
- மதன்
பிரிவுப்பேச்சுகள்
- டி.கே.பி. காந்தி
ஜன்னல் வழியே
- பாஸ்கர்
உடைபடும் கண்ணீர்
- புனிதா
நற்பவி என்றொரு குழந்தை
- வே. முத்துக்குமார்
குட் நைட்
- சரவணகுமார்.மு
காக்கைக் கூட்டம்
- அனுஜன்யா
நான் நான்தான்
- கார்க்கி
சிவாஜியை வணங்கிய குஷ்பு!
- தமிழ்மகன்
அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள்
- கழனியூரன்
கலை விழா
- பாபுஜி
புலி வருது
- பாபுஜி
டை ஹேட்மேன்
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கல்யாண்ஜி- கி.ரா. வுக்கு எழுதியது
- -
‘மகாகவி’
- -
மா.இராமையாவின் படைப்புலக ஆய்வும் அநங்கம் முத்திங்கள் இதழ் அறிமுகமும்
- -
click here
காக்கைக் கூட்டம்
அனுஜன்யா

உச்சியிறங்கும் போதில்
யாருமற்ற மேற்கின் நிசப்தம்
பின்னிரவின் பேரெழுச்சிக்குமுன்
சோம்பல் முறித்த சிற்றலைகள்
பிரிக்கப்படும் பொட்டலத்திற்கு
கூடத் துவங்கிய காகங்கள்;
சூட்டிகைகள் சில
தேர்ந்த அலகுகளால் 
பெருந்துண்டுகளை
வானில் கவ்வி மறைந்தன -
மதிப்பெண்களின் சூட்சுமம்
அறிந்த முன்னிருக்கை
மாணாக்கர் போல்;
நொறுங்கிய துகள்களை
மணலுடன் உண்ட மற்றவை
தொங்கிய தலையுடன்
மண்சோறு உண்ட
அக்காளை நினைவுறுத்தின;
கசக்கி வீசப்பட்ட
அலுமினியத் தாளை
தேடிப்பிடித்து உண்டன
இதுவரை இரை கிட்டாத
இரண்டு காகங்கள்;
வீசப்பட்ட தாளின் நிறம்
பத்தாவப்புடன் நிறுத்திக்கொண்ட
இஸ்திரி வண்டி பழனியின்
சட்டைப்பையில் இருந்த
லாட்டரிச் சீட்டின் நீலந்தான்;
நெடுஞ்சாலையில் நிறுத்தி
கடற்கரைக்கு வழிகேட்டவனை
எதிர்த்திசையில் திருப்பிவிட்டேன்

click here

click here
click here