இமேஜ் & இம்ப்ரெஷன் தமிழின் முன்னணி பதிப்பகமான உயிர்மையின் வரைகலைப் பிரிவாகும். நூல் பதிப்பு மற்றும் இதழியல் வடிவவைப்பு சார்ந்த துறையில் நீண்ட கால அனுபவமும் படைப்புத் திறனும் கொண்ட எமது குழுவினர் உலகெங்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தமது சேவைகளை அளித்து வருகின்றனர். புத்தகங்கள், இதழ்கள், புத்தக அட்டைப் படங்கள் இதர வடிவமைப்பு மற்றும் அச்சு சார்ந்த தேவைகளை நேர்த்தியாகவும் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையில் அளிப்பதே எங்கள் குறிக்கோள்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கீழ்க்கண்ட சேவைகளை உலகெங்கும் அளித்து வருகிறோம்.

1. நூல் தயாரிப்பு
2. அட்டை வடிவமைப்பு
3. பிரசுரங்கள், அறிக்கைகள் வடிவமைப்பு
4. பத்திரிகைகள் வடிவமைப்பு
5. சுவரொட்டிகள் வடிவமைப்பு
6. விளம்பரங்கள் வடிவமைப்பு

நீங்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்தாலும் உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் சார்ந்த தேவைகளை நியாயமான கட்டணத்தில் செய்து தரத் தயாராக இருக்கிறோம். உங்கள் மென்பிரதிகளை சீரான எழுத்துருவுக்கு மாற்றி, செப்பமாக வடிமைத்து, உயரிய தரத்தில் அச்சிட்டு நீங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் தங்களது பத்திரிகை மற்றும் நூல்கள் தொடர்பான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். உங்களுக்கு நாங்கள் ஆற்றும் பணிகளை நீங்கள் இணையத்தின் வழியே பார்வையிட்டு திருத்தங்கள் மாற்றங்களை உடனுக்குடன் எங்கள் குழுவினருடன் உரையாடி மேற்கொள்ளலாம்.

மேலும் புத்தக மற்றும் இதழ்கள் சார்ந்த துறையில் தயாரிப்பில் மட்டுமின்றி விநியோகம் மற்றும் விற்பனையிலும் வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் எமது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறோம்.

படைப்பாற்றல், பொறுப்புணர்ச்சி, விரைந்த செயல்பாடு என்ற அடிப்படையில் எமது சேவைகள் உங்களுக்ககாக காத்திருக்கின்றன.

தொடர்புகளுக்கு:
Image & Impression
11/29 Subramaniam street
Abiramapuram
Chennai-600 018
Tamilnadu
India
Phone:91-44-24993448
E-mail:imageandimpression@uyirmmai.com