|
Brammarajan
|
1953ஆம் ஆண்டு பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ.ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அரசுகல்லூரி யொன்றில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணியாற்றுகிறார். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர் மற்றும்இதழாசிரியர். இதுவரை 5கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். 1989ஆம் ஆண்டு வெளிவந்த உலகக் கவிதை என்ற நூலின் தொகுப்பாசிரியர். மீட்சி என்ற இலக்கியச் சிற்றேட்டை (1981-992) நடத்தியவர். கவிதைப் பட்டறைகள் சிலவற்றை நடத்தியிருக்கிறார். முதல் கவிதைத் தொகுதி அறிந்த நிரந்தரம் (1980) கடைசியாக வெளிவந்த கவிதைத் தொகுதி மஹா வாக்கியம் (2000) எஸ்.ரா.பவுண்ட் பற்றிய அறிமுக நூல் ஒன்றை 1985ஆம் ஆண்டு வெளியிட்டார். ப்ரக்ட் கவிதைகள் மொழிபெயர்ப்பு 1987இல் வெளிவந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதோடு மட்டுமின்றி தமிழிலிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். சித்தர் பாடல்களில் தேர்ந்தெடுத்த 64கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை இந்தியன் லிட்டரேச்சர் வெளியிட்டிருக்கிறது. போர்ஹே கதைகள் (2000) மற்றும் கால்வினோ கதைகள் (200) ஆகியவை அவரது புனைகதை மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவை. தற்போது Ôம்யூஸ் இந்தியாÕ என்ற இணைய இதழின் தமிழ் பிரிவுக்கான ஆலோசகராக இருக்கிறார். ஃபியூஷன் இசை பற்றிய விரிவான நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.
|