முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
ஆன்மிக குருக்கள் தேவையா?
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
மூன்றாவது அணி!
இந்திரஜித்
பொருளாதார வளர்ச்சி --அறிந்து கொள்ள என்ன இருக்கிறது!?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்
அ.ராமசாமி
புலியின் புல்
நிஜந்தன்
சிறுபான்மையினரின் தாய் மொழிக்கு பேரழிவு
கே.பால முருகன் (மலேசியா)
கவிதை
அதீதத்தின் ருசி
மனுஷ்ய புத்திரன்
இப்பொழுது நான் வளர்ந்த பெண்
மூலம் - ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்), தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
மீளாதவை
நளன்
சிறு புன்னகை செய்..
ஆறுமுகம் முருகேசன்
புரிதலற்ற எதிர்முனைகள்..
இளங்கோ
மீட்டாத வீணை
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
அவை ஆபத்தானவை
ஆனந்த் அண்ணாமலை
கடைசி பயணி மாரிமுத்து
கே.பாலமுருகன்
நெருப்பாலான‌ ஜின்கள்
அ.மு.செய்ய‌து
இந்தவாரக் கருத்துப்படம்
விரிசல்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
90 புத்தகங்கள் 51 படைப்பாளிகள் 13 நாடுகள் 4 தலைமுறைகள் 10 இலக்கிய வகைமைகள் 6 நூல் வெளியீட்டு அரங்குகள்
33 வது சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு (டிசம்பர் 30-ஜனவரி 10) உயிர்மை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 1
சாருநிவேதிதாவின் பத்து நூல்கள்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 2
எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு நூல்கள்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 3
ஜெயமோகனின் பத்து நூல்கள்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 4
உயிர்மையின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 5
ரவிக்குமாரின் நான்கு நூல்கள்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 6
தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை நூல் வெளியீட்டு விழா
மூன்றாவது அணி!
இந்திரஜித்

அண்மையில் சிங்கப்பூரின் ஆங்கில எழுத்தாளர் பிலிப் ஜெயரத்தினத்தின் பேட்டியைப் படித்தபோது கடைசியில் எனக்காக ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவரும் என்னைப் போலவே ஆர்சனல் ரசிகர். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள ஒரே ஒற்றுமை அதுவாகத்தான் இருக்க முடியும். சிங்கப்பூரில் பெரும்பாலும் மென்செஸ்ட்டர் யுனைட்டட், லிவர்பூல் என்றுதான் அலைமோதுவார்கள். ஆர்சனல் என்பது அபூர்வமானது. எப்போதாவது ஒருவரைப் பார்க்கலாம். நான் ஏன் ஆர்சனலைத் தேர்வு செய்தேன் என்று பல நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. கூட்டமாக எல்லாரும் காற்பந்து பற்றிப் பேசும்போது நான் மட்டும் தனியாக இருக்க நேரும். `இவரு ஆர்சனலு சப்போட்டரு!` என்று சொல்லி ஒரு ஜோக் சொல்லிவிட்ட திருப்தியில் சிரிப்பார்கள்!

எனவே தப்பித் தவறி ஆர்சனல் ரசிகர்கள் எதிர்ப்படும்போது ஒருவிதமான பூர்வஜென்மப் பந்தத்தோடு பார்த்துக் கொள்வோம்! பிலிப் ஜெயரத்தினமும் மறைந்த அவருடைய அப்பா எதிர்க்கட்சித் தலைவர் ஜே பி ஜெயரத்தினமும் ஆர்சனல் ரசிகர்கள் என்று படித்தபோது அந்தப் பேட்டியில் உள்ள மற்ற பகுதிகள் எல்லாம் மறந்துவிட்டன.

பிலிப் முகத்தைப் பார்த்தால் காற்பந்து பார்க்கிற முகமாகத் தெரியவில்லை. அதுவும் வியப்புக்கு ஒரு காரணம். ஜே பி உயிரோடு இருக்கும்போதே விவரம் தெரிந்திருந்தால், ராபிள்ஸ் எம்ஆர்டி நிலையத்தில் நின்று அவர் புத்தகம் விற்கும்போது `நானும் ஆர்சனல்தான்!` என்று கைகொடுத்துச் சொல்லியிருப்பேன். அவர் பதிலுக்கு `மேக் இட் ரைட் ஃபோர் சிங்கப்போ!` என்று கர்ஜித்திருப்பார்.

அவ்வப்போது தேவையற்ற தோல்விகளைச் சந்திக்கும் காற்பந்துக் குழுக்களில் ஒன்று ஆர்சனல். இங்கிலாந்தில் விளையாடும் அணிகளில் ஆர்சனலுக்கு இணையாக காற்பந்து ஆடக்கூடிய அணி எதுவும் இல்லை. காற்பந்து விளையாட்டை ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆர்சனல் ஆட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். ஆனால் ஆர்சனல் ஜெயிக்குமா என்றால் இல்லை!

அது ஒரு விநோதமான நிலை. எல்லா ஆற்றலும் இருந்தும் தோற்பது. சில சமயம் படுமுட்டாள்தனமான குழுக்கள்கூட ஆர்சனலை வெற்றிக் கொண்டு போய்விடுவது உண்டு.

ஜே பி ஜெயரத்தினத்தின் வாழ்க்கைக்கூட கிட்டத்தட்ட அப்படிப்பட்டதுதான். அவர் தோற்கக் கூடியவரோ, தோற்க வேண்டியவரோ இல்லை. ஆனால் சிங்கப்பூர் அரசியலில் அவருக்குக் கிடைத்தது அடுக்கடுக்கான தோல்விகளே.

 ஆனால் தந்தையின் பாதையில் போகாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு, வாழ்க்கை உண்டு என்று தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு பிலிப் ஜெயித்துவிட்டார். நாற்பத்தைந்து வயதில் பெரிய எழுத்தாளர், மூத்த வழக்குரைஞர். உற்றுப் பார்த்தால் பிலிப் ஜெயரத்தினம், சிங்கப்பூரின் வெற்றிக் கதைகளில் ஒன்று. அவர் எழுதிய கதைகளை நான் ரசித்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. நான் ஒரு விதமான வாசகன். என்னைக் கவர்வது ஒருவிதமான கதைகள். பிலிப் எழுதியவற்றை நான் ரசிக்கும் ஒருநாள் வரலாம். இப்போது அவரும் ஆர்சனல் ரசிகர் என்று தெரிந்துவிட்டதால் நான் புதிய ஆர்வத்தோடு படிக்கக்கூடும்! அதுவரை... சிங்கப்பூரில் ஏராளமான விருதுகளை வென்றும் என்னைப் போன்ற வாசகர்களைக் கவராத எழுத்தாளர்களில் பிலிப்பும் ஒருவர்.

பிலிப் ஜெயரத்தினத்துக்கு என்று சில அடையாளங்கள் மெல்ல உருவாகி வருகின்றன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதல்நிலையில் தேறியவர் என்பது சிங்கப்பூருக்கு மிகவும் பிடித்தமான தகுதி. அதைவிடவும் அவர் எழுத்தாளர் என்பது பிரபலமானது. வழக்குரைஞர் சங்கத்தின் தலைவராக வந்தார். ஒவ்வொன்றாக புதிய பதவிகள் அவரைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. பிலிப் அவருடைய சொந்த சாதனைகளுக்காக நிறையவே பாராட்டப்படுகிறார். ஆனால் தந்தையின் நிழலில் இருந்து மகன் விலகவே முடியாது என்பதற்கு அவரே மிகச்சிறந்த உதாரணம்.

ஜே பி ஜெயரத்தினம் அவ்வளவு பெரிய ஆளுமை. இத்தனைக்கும் அவர் என்ன சாதிக்க நினைத்தார் என்பதுகூட சிங்கப்பூரில் புரியாத புதிர். நல்ல வீடு, பெரிய வழக்குரைஞர் வேலை, கைநிறையப் பணம், நிம்மதியான வாழ்க்கை இவற்றை எல்லாம் அவர் எதற்காக, யாருக்காக தியாகம் செய்தார்? மிகப்பெரிய ஆற்றல் படைத்த ஒரு பெரிய மனிதர் நம் கண்முன் மெல்ல கரைந்து போனார்.

அதுபோல்தான் ஆர்சனலும். இணையற்ற காற்பந்து அணி. ஆர்சன் வெங்கர் போன்ற ஒரு காற்பந்து நிர்வாகி உலகில் எங்குமே இல்லை. காற்பந்து என்பது கோல்போடாமல் தடுப்பதும், கோல்போடுவதும் என்று சுருக்கி எழுதப்படாமல் அதற்கு ஒரு விரிவான அர்த்தம் இருப்பதை உறுதி செய்து கொண்டிருப்பவர்களில் ஆர்சன் வெங்கர் முக்கியமானவர்.

ஆனால் இந்தப் பருவமும் இங்கிலீஷ் பிரிமியர் லீக்கை ஆர்சனல் வெல்லப் போவதில்லை. பாதியிலேயே தெரிந்துவிட்டது!

இந்தத் தோல்விகள் வியப்புக்குரியவை. தோல்வி அடையும் குழுக்களுக்கும் ரசிகர்கள் இருப்பது அதைவிட வியப்புக்குரியது.

பொதுவாக மக்கள் வெற்றிக்குப் பின்னால் ஓடவே விரும்புகின்றனர். இப்போது போய் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் அந்தக் கேள்விக்கான பதில் கடந்தாண்டு சொன்ன பதிலில் இருந்து வெகுவாக மாறியிருக்கும். ஆம் என்றாலும் இல்லை என்றாலும் புதிய பதில், வயதால் மூத்துவிட்டது.

மனிதர்களில் இரண்டு விதம் உண்டு. ஆதரிப்பவர். எதிர்ப்பவர். அதுபோலவே வெல்பவர், தோற்பவர் என்றும் இரண்டு விதம் இருக்கக்கூடும்.

வெற்றியை ஏற்றுக் கொள்வதைவிடவும், தோல்வியை ஒப்புக்கொள்வது சிரமம்.

தோற்றுப் பழக்கப்பட்ட ஆர்சனல் ரசிகர்களுக்குக் கூட..

விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான ஒரு நண்பரிடம் பிரபாகரன் இறந்துவிட்டாரா? என்று கேட்டேன். சட்டென்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்தார்.

`எனக்குச் சந்தேகம் கருணாநிதி அழுதாரா இல்லையா?` என்பதுதான் என்றார்.

இப்படியாக மூன்று நிலைகள் உள்ளன.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com