முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
குஷ்புவின் ‘திருமணத்திற்கு முந்தைய செக்ஸ்’ பற்றிய கருத்திற்கு எதிராகப் போராடியவர்கள், நித்யானந்தரின் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வீடியோவே ஒளிபரப்பப்பட்டிருக்கும்போது எங்கே போனார்கள்?
மாயா
அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு ஒரு திறந்த கடிதம்
பிரம்மராஜன்
டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணத்தில் அக்கறை கொண்ட பிரஜைகள் மற்றும் பெண்ணியவாதிகளின் அறிக்கை
அ.மங்கை, வ.கீதா, கீதா ராம்சேஷன்.
பாலியல் படமெடுக்கும் ‘பயந்தாங்கொள்ளி’ இயக்குனர்
சுப்ரபாரதிமணியன்
எம்.எப்.ஹுசைன் எனும் பிரஜை
நிஜந்தன்
அவைகள் இப்போதெல்லாம் இங்கு வருவதே இல்லை....!
எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா
போருக்குப் பின்னான இலங்கை
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள்: நீல. பத்மநாபனின் தனி மரம்
அ.ராமசாமி
தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்
கார்த்திக்
நூதன உறுப்பு-மாற்று சிகிச்சையும், டாக்டர் ஜோக்கும்
ஆர்.அபிலாஷ்
ஐ.பி.எல். அணி வரிசை : சென்னை சூப்பர் கிங்ஸ்: எதிர்பார்ப்புகளும் எதிர்பாராமையும்
- ஆர்.அபிலாஷ்
நித்யானந்தர் - சில குறிப்புகள்
மனுஷ்ய புத்திரன்
கவிதை
தனிமையைத் தேடி...
ராஜேஸ்வரி
துறவிக்காமம்
பொன்.வாசுதேவன்
நிசி அகவல்!
ப்ரவீன்
மனிதக்காட்சி சாலையின்.. பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டுள்ள இரவுகள்..
இளங்கோ
நானெனப்படுவது..
சுரபி
சிறுகதை
'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'
எம்.ரிஷான் ஷெரீப்
புத்தகன்
உஷாதீபன்
பொது
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
நல்வாழ்வு
பாபுஜி
நித்யானந்தா
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
பதிவுகள்
’உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களைப் படைப்பாளிகள் புறக்கணிக்கவேண்டும்’-கவிஞர் விக்ரமாதித்யன் சூளுரை
பொன்.வாசுதேவன்
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி

சுய மரியாதையுள்ள இளவரசி

முன்பொரு காலத்தில், தனக்கு சொல்லித் தரப்பட்ட மற்றும் தானாகக் கற்றுக் கொண்ட விஷயங்களும், தான் நம்பும் விஷயங்களும் மட்டும்தான் சரி என்று நினைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அரசன் ஒருவனிருந்தான்.

பல விதங்களில் அவ்வரசன் நேர்மையான, நீதிமானாவான். ஆனால் அந்த அரசனின் கருத்துக்கள் குறுகிய வட்டத்தில் சுழன்று கொண்டிருந்தன.

ஒரு நாள் அந்த அரசன் தனது மூன்று மகள்களைக் கூப்பிட்டான். "நான் வைத்திருப்பதெல்லாம் உங்களுக்குத்தான் அல்லது எதிர்காலத்தில்

உங்களுக்கு உடைமையாகப் போகிறதுதான்.

என்னால் நீங்கள் வாழ்க்கை பெற்றீர்கள். எனது தீர்மானம்தான் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்,. உங்கள் விதியையும் உருவாக்கும்" என்று தனது மகள்களிடம் சொன்னான் அரசன்.

அரசனின் கூற்றில் உண்மை இருக்கிறதென்று ஒப்புக்கொண்டு அரசனின் இரு மகள்களும் கடமையுணர்வுடன் அரசனின் சொல்லுக்குத் தலையாட்டினர்.

"நான் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எனது தற்போதைய நிலை நிர்ப்பந்தித்தாலும், என்னுடைய விதி உங்களுடைய அபிப்பிராயங்களால்தான் தீர்மானிக்கப்படும் என்பதை என்னால் நம்ப முடியாது" என்று தந்தையுடன் குறுக்கிட்டாள் மூன்றாவது மகள்.

"அதையும்தான் நாம் பார்க்கலாம்" என்றான் அரசன்.

- சொல்லிவிட்டு, அரசன் தனது மூன்றாவது மகளைப் பாதாள சிறையில் அடைத்து வைக்குமாறு உத்தரவிட்டான்.

சிறையில் பல வருடங்கள் வாடி வதங்கினாள் இளவரசி.

இளவரசி சிறைப்பட்டிருந்த காலத்தில், அவள் பங்குக்குப் போய்ச் சேர வேண்டிய செல்வங்களையெல்லாம் ஆண்டு அனுபவித்து வந்தனர் அரசனும் மற்ற இரு மகள்களும்.

"அவள் தீர்மானத்தின் பேரில் அவள் சிறையிலில்லை . என்னுடைய விருப்பத்தின் பேரில்தான் அவள் அடைக்கப்பட்டிருக்கிறாள். தர்க்க ரீதியிலாக இயங்கும் எவருக்கும் அவள் விதியை அவள் உருவாக்கவில்லை. நான்தான் நிர்ணயித்தேன் என்பது புரியும் " என்று தனக்குள் உரக்கச் சொல்லிக் கொண்டான் அரசன்.

"நமக்குத் தெரிந்து, அரசரிடம் எந்தக் குற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. தனது சொந்த உதிரத்தையே அரசர் இப்படி நடத்த வேண்டுமென்றால் அவள் ஏதோ தவறுதலாகப் பேசியோ, நடந்தோ இருக்க வேண்டும."

இளவரசி சிறையிலடைக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட அத்தேசத்து மக்கள் மேற்கண்டவாறு தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அரசன் சரியென்று நினைக்கும் எல்லாவற்றையும் விமர்சனம் பண்ணும் தன்மைக்கு அவ்வூர் மக்கள் வளரவில்லை.

அவ்வப்போது தன் மகளைக் காண்பதற்கு அரசனும் சிறைச்சாலைக்குப் போவதுண்டு.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளவரசி வாடி வதங்கி, பலவீனமடைந்து, ஆரோக்கியம் சீர்கெட்டிருந்தாலும் தனது அபிப்பிராயத்தைக் கிஞ்சித்தும் மாற்றிக் கொள்ளவில்லை.

கடைசியில் அரசனும் தனது பொறுமையை இழந்து விட்டான்.

"உனது கீழ்படியாத தன்மை என்னை இன்னும் அதிகக் கோபம் கொண்டவனாக்குகிறது, என் அருகிலேயே நீ இருந்தால், நான் நிலையிழந்து விடுவேன்.

நான் உன்னை சுலபமாகக் கொன்று விட முடியும். ஆனால் நான் கருணை மிக்கவன்.ஆகவே நான் அருகிலிருக்கும் வனாந்தரத்திற்கு உன்னைத் துரத்தப் போகிறேன்.

அந்த வனாந்தரம் காட்டு விலங்குகளாலும், பகுத்தறிவு ரீதியில் இயங்கும் நமது தேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட, சமூகத்திற்கு ஒவ்வாத மனிதர்களையும் கொண்டது.

அங்கு உனது குடும்பத்தைச் சாராமல் விலகிய தனித்ததொரு வாழ்க்கையை உன்னால் வாழ முடியுமா? இல்லை நம் வாழ்க்கையைவிட அவ்வாழ்க்கையை விரும்பத் தொடங்குவாயா என்பது உனக்குப் புரியும்" என்று அரசன் அடைபட்ட இளவரசியிடம் கர்ஜித்தான்.

அரசனின் ஆணை உடன் நிறைவேற்றப்பட்டது.

இளவரசி தேசத்தின் எல்லையில் கொண்டுபோய் விடப்பட்டாள்.

பாதுகாப்பாக வளர்ந்த அரண்மனைச் சூழ்நிலைக்கு மாறாக, தன் வாழ்க்கையில் பார்த்தறியாத பயங்கரமான வனாந்தரச் சூழலை முதன் முதலாக அனுபவித்தறிந்தாள் இளவரசி.

ஆனால் ஒரு குகையானது அவளுக்கு நல்ல உறைவிடமாகப் பயன்படுமென்பதையும், மரங்கள் உதிர்க்கும் கனி வர்க்கங்கள் சுவை உண்டியாக ஆகுமென்பதையும், சூரியக் கதிர்கள் கதகதப்பைத் தரக்கூடியது என்பதையும் வெகு சீக்கிரத்தில் அங்கு புரிந்து கொண்டாள் இளவரசி.

அந்த அடர்ந்த காடு தனக்கேயுரித்தான வனப்பையும், இருப்பையும் உள்ளடக்கி உச்சரித்துக் கொண்டிருந்தது .

சுனையிலிருந்து வரும் நீரும், பூமியிலிருந்து முளைத்த காய்கறிகளும், எரியும் காட்டு மரங்களிலிருந்து கிடைத்த தீ ஜுவாலையும் இளவரசியின் வாழ்வை ஒழுங்குபடுத்தின.

இங்குள்ள விஷயங்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று கலந்தவையாக இருக்கின்றன. ஒரு முழுமையை உருவாக்குபவையாக இருக்கின்றன. இங்குள்ளவை தனியாகவோ அல்லது கூட்டாகவோ அரசரான எனது தந்தைக்குக் கட்டுப்படுவதில்லை' என தனக்குள் சொல்லியவாறு இருந்தாள் இளவரசி.

ஒரு நாள் வழி தவறிய பிரயாணி ஒருவன், இளவரசி இருந்த அடர்ந்த காட்டுக்குள் வந்து சேர்ந்தான். அவன் இளவரசியைக் கண்டான் . காதல் கொண்டான். இளவரசியைத் தனது தேசத்திற்குக் கூட்டிச் சென்று மணமுடித்துக் கொண்டான்.

சிறிது காலம் உருண்டோடிய பின்பு, புதுமணத் தம்பதியினர் தாங்கள் முன்பு சந்தித்துக் கொண்ட காட்டுக்குத் திரும்பி வந்தனர்.

அங்கு தமது விவேகம், திறமை, நம்பிக்கை போன்றவைகளின் முழு வீச்சும் வெளிப்படுமாறு செழிப்புடன், வசதி வாய்ப்புகளுடன் கூடிய பிரும்மாண்டமான நகர் ஒன்றை நிர்மாணித்தனர் இருவரும்.

சமூகத்திற்கு ஒவ்வாதவர்கள் என ஓதுக்கப்பட்ட நபர்களும், மன நலம் பிறழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களும், கட்டுக்கடங்காமல் நடப்பவர்கள் எனறு விலக்கி வைக்கப்பட்டவர்களும் நெகிழ்வுத் தன்மையுடனும், பல வாழ்க்கை முறைகளை அங்கீகரிக்கக்கூடிய புதிய நகரத்துக்குள் இசைவுடன் ஐக்கியமானார்கள். அப்படி ஐக்கியமானவர்கள் நகரத்தின் இயங்கங்களுக்கு பயன்படவும் செய்தனர்.

புது நகரமும், அதைச் சுற்றியிருந்த கிராமப்புறப் பகுதிகளும் உலகம் முழுக்க பிரபலம் அடைந்தன.

புதிய நகரத்தின் அழகும், அதிகாரமும் இளவரசியின் தந்தை நாட்டினுடைய புகழை மங்கச் செய்வதற்கு வெகுகாலம் பிடிக்கவில்லை.

இளவரசியும், அவளது கணவனும் அப் புதிய இலட்சிய தேசத்தை இணைந்து நிர்வகிக்கும்படி புது நகரவாசிகளால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மாயமாய் வனாந்தரத்துக்குள் தோன்றிய அந்த வினோத நகரத்தைக் கண்டு வர முடிவு செய்தான் அரசன்.

அரசனாலும் அவனைச் சார்ந்தவர்களாலும் வெறுத்தொதுக்கப்பட்ட மக்கள்தான் அப்புதிய தேசத்தில் உறைகின்றனர் என்ற செய்தி வேறு அரசனின் காதுகளை எட்டியிருந்தது.

தலையைக் குனிந்தபடியே, தன்னை விட நீதியான, செழிப்பான, நலன் பேணுகிற ஆட்சியை நடத்துபவர்கள் என்று எட்டுத் திக்கும் புகழைக் கொண்ட அந்த தம்பதியினர் அமர்ந்திருந்த அரியணையை நெருங்கிக் கொண்டிருந்தான் அரசன்.

மெதுவாகக் கண்களை உயர்த்தி அரசன் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க முற்பட்டபோது , "பாருங்கள் தந்தையே... ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவரவர்களுக்கான விதியும், சுய தேர்வுகளும் இருக்கின்றன" என்று இளவரசி முணுமுணுத்த வார்த்தைகள் அரசனின் காதில் விழுந்தன.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com