முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
குஷ்புவின் ‘திருமணத்திற்கு முந்தைய செக்ஸ்’ பற்றிய கருத்திற்கு எதிராகப் போராடியவர்கள், நித்யானந்தரின் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வீடியோவே ஒளிபரப்பப்பட்டிருக்கும்போது எங்கே போனார்கள்?
மாயா
அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு ஒரு திறந்த கடிதம்
பிரம்மராஜன்
டபிள்யு.ஆர்.வரதராஜனின் மரணத்தில் அக்கறை கொண்ட பிரஜைகள் மற்றும் பெண்ணியவாதிகளின் அறிக்கை
அ.மங்கை, வ.கீதா, கீதா ராம்சேஷன்.
பாலியல் படமெடுக்கும் ‘பயந்தாங்கொள்ளி’ இயக்குனர்
சுப்ரபாரதிமணியன்
எம்.எப்.ஹுசைன் எனும் பிரஜை
நிஜந்தன்
அவைகள் இப்போதெல்லாம் இங்கு வருவதே இல்லை....!
எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா
போருக்குப் பின்னான இலங்கை
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள்: நீல. பத்மநாபனின் தனி மரம்
அ.ராமசாமி
தெளிவைத் தொலைத்ததால் தொலைந்து போகும் கவிதையான நொடிகள்
கார்த்திக்
நூதன உறுப்பு-மாற்று சிகிச்சையும், டாக்டர் ஜோக்கும்
ஆர்.அபிலாஷ்
ஐ.பி.எல். அணி வரிசை : சென்னை சூப்பர் கிங்ஸ்: எதிர்பார்ப்புகளும் எதிர்பாராமையும்
- ஆர்.அபிலாஷ்
நித்யானந்தர் - சில குறிப்புகள்
மனுஷ்ய புத்திரன்
கவிதை
தனிமையைத் தேடி...
ராஜேஸ்வரி
துறவிக்காமம்
பொன்.வாசுதேவன்
நிசி அகவல்!
ப்ரவீன்
மனிதக்காட்சி சாலையின்.. பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டுள்ள இரவுகள்..
இளங்கோ
நானெனப்படுவது..
சுரபி
சிறுகதை
'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'
எம்.ரிஷான் ஷெரீப்
புத்தகன்
உஷாதீபன்
பொது
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
நல்வாழ்வு
பாபுஜி
நித்யானந்தா
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
பதிவுகள்
’உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களைப் படைப்பாளிகள் புறக்கணிக்கவேண்டும்’-கவிஞர் விக்ரமாதித்யன் சூளுரை
பொன்.வாசுதேவன்
’உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களைப் படைப்பாளிகள் புறக்கணிக்கவேண்டும்’-கவிஞர் விக்ரமாதித்யன் சூளுரை
பொன்.வாசுதேவன்

தமிழ் படைப்புலகில் நிலவும் வறட்சியான விமர்சன சூழலைக் கவனப்படுத்தியும், கவனப்படுத்தாத படைப்புகளின் மீதான நேர்மையான விமர்சனங்களின் அவசியங்கருதியும் சொற்கப்பல் விமர்சன தளம் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 ‘சொற்கப்பல்‘ அமைப்பின் அறிமுக விழா மற்றும் விளக்கு’ விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் மார்ச் 6 அன்று நடைபெற்றது. விருப்பு வெறுப்பற்ற விமர்சனங்களின் அவசியத்தையும், சொற்கப்பல் அறிமுகத்தையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் படைப்புகளின் மீதான விமர்சன நிகழ்வு ஒருங்கிணைக்கப்படும் என்பதையும் கூறி, பொன்.வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார். ‘சொற்கப்பல்’ செயல்பாடுகள் பற்றியும், விமர்சனங்களின் முக்கியத்துவம் குறித்தும் அஜயன்பாலா அறிமுகவுரையாகப் பேசினார். ‘விளக்கு’ விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

 வாழ்த்துரை வழங்கிய கவிஞர் விக்ரமாதித்யன் பேசுகையில்,

 "ஆதியில் ஓசையிலிருந்து பிறந்த மொழியானது பாடல்களாகி பின் உரைநடையாகியது. பின்னர் வசன கவிதை, நவீன கவிதை என அதன் நீட்சி ஏற்பட்டது. விமர்சனம் என்பது தற்போதைய சூழலில் போலியானதாக, தனிப்பட்ட விருப்புகள் சார்ந்தே இருக்கிறது. திரும்பத் திரும்ப குறிப்பிட்ட படைப்பாளிகளை முன்னிறுத்திப்பேசி தமிழில் வேறு படைப்பாளிகளே இல்லை என்பது போன்ற போலியான தோற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தியதில் இலக்கிய இதழ்களின் பங்கு அதிகம். காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகள் தமிழ் இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதன் போக்குகளை நிர்ணயம் செய்கிற அதிகாரத்துடன் செயல்படுகின்றன. தி.மு.. அல்லது அ.தி.மு.. என அரசியலில் கட்சிகள் இருப்பது போலவே, இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் ஒன்று. காலச்சுவடு கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது உயிர்மையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள். படைப்பாளிகளை சார்பு நிலையில் செயல்படச் செய்யும் இப்படியான இலக்கியப் போக்கு தொடர்வதை நாம் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசினார்.

 தொடர்ச்சியாக, அமிர்தம் சூர்யா எழுதிய ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’ சிறுகதைத் தொகுதி மீதான வே.எழிலரசு அவர்களின் விமர்சனம் மற்றும் சந்திரா எழுதிய ‘காட்டின் பெருங்கனவு’ சிறுகதைத் தொகுதி பற்றிய அசதா மற்றும் காலபைரவன் ஆகியோரின் விமர்சன நிகழ்வும் நடைபெற்றது. விமர்சனத்தையொட்டி கேள்விகளும், உரையாடலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் வேடியப்பன் நன்றியுரை வழங்கினார்.

 அஜயன்பாலா, பொன்.வாசுதேவன் (அகநாழிகை), முகுந்த் (தடாகம்.காம்), வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) ஆகியோர் சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com