முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கூடன்குளம்: எந்த முடிவும் எடுக்க முடியாத கோழை அரசாங்கத்தின் சில்லறைத் தந்திரங்களும் தேசிய அளவில் வியாபிக்கும் அணு எதிர்ப்பு அலையும்
மாயா
தடை செய்யப்பட்ட எமன்களின் நாடு
எர்னஸ்டோ குவேரா
இன்னும் முடியவில்லை.........மாய மான் வேட்டை........?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மாற்றங்களை எதிர்ப்போம்...!
ஆர்த்தி வேந்தன்
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4)
ராஜ்சிவா
மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் - 2011 நவம்பர் 21 முதல் 27 வரை
-
கவிதை
ஓர் இக்ளூ அறைக்குள் பற்றியெரிதல்
பத்மஜா நாராயணன்
தேய்பிறை
ராஜா
திரும்புதல்
ஆறுமுகம் முருகேசன்..
எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்
தேனு
காலமாற்றம்...
ஹேமா
விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..
இளங்கோ
எஃப் டிவி ஒளிரும் கார்காலம்
ப.தியாகு
ஒரு ரகசியம் உருவாகியது
சரவண வடிவேல்.வே
கனவின் தீவிரம்
ராசை நேத்திரன்
மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்
சின்னப்பயல்
காக்டெயில்
ஆத்மார்த்தி கவிதைகள்
சிறுகதை
விசுவாசம்
கார்த்திக் பாலா
மேய்ச்சல்
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி
கூடன்குளம்: எந்த முடிவும் எடுக்க முடியாத கோழை அரசாங்கத்தின் சில்லறைத் தந்திரங்களும் தேசிய அளவில் வியாபிக்கும் அணு எதிர்ப்பு அலையும்
மாயா

பிரச்சினைகளை நேருக்கு நேராக சந்திக்கத் தயங்கும் கோழை அரசாங்கம் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக 90 நாட்களுக்கு மேலாகப் பட்டினிப் போராட்டம் நடந்த பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது. அப்துல் கலாம் என்ற அரச விசுவாசியின் நம்பகத்தன்மையை வைத்து எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினரைத் தற்காலிகமாக கலைத்துவிட்ட திருப்தியில் ஒரு புறம் பேச்சு, மறுபுறம் தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்படும் என்ற மிரட்டல் மூலம் காரியத்தை சாதிக்க நினைக்கிறது. ஆனால் அன்னா ஹசாரேவின் இயக்கத்திற்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசின் குழப்ப வியூகத்தைப் போலவே, கூடன்குளம் பிரச்சினையையும் சுலபமாகக் கையாளும் வாய்ப்பை அரசு இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

போர்க் களத்தில் எதிரியை வெட்டி/சுட்டுக் கொல்வதற்குப் பதில் முறைத்துப் பார்த்தே கொல்ல நினைக்கிற வீராதி வீரர்கள் இவர்கள். நாராயணசாமி மைக்கைப் பிடித்து உளறிக்கொண்டே இருக்கிறார். புலி வருது கதையாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார். இந்த 90 நாள் இடைவெளியில் அணு எதிர்ப்பு இயக்கத்தை அத்தனை நயவஞ்சகத்தையும் பயன்படுத்தி உடைக்கப் பார்த்தார்கள். அதில் கொஞ்சம் வெற்றியும்தான் கிடைத்தது. ஆனால் இவ்வளவு காலம் ஒரு பொதுப் பிரச்சினையைத் தீர்க்காமல் பொது வெளியில் இருக்க அனுமதித்ததால் இன்று அது பல்வேறு பரிணாமங்கள் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

தேசிய அளவிலான அணு எதிர்ப்பு விஞ்ஞானிகளும் களத்தில் குதித்திருப்பதால் இது நாடு தழுவிய பிரச்சினையாகத் தொடர்ந்து செய்தியில் அடிபட்டு வருகிறது. இந்த கவனத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் ஒட்டுமொத்த அணு உலைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. 2ஜி ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சில கார்ப்பரேட் புள்ளிகளையும் வாட்டி வதைக்கும் நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்சில் இது விசாரணைக்கு வருகிறது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றி ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை கொடுக்க சரியான மருத்துவமனை இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கூடன்குளம் அணு உலையை தொட்டு நக்கினால்கூட புற்றுநோய் வராது என்று பிதற்றிக்கொண்டிருப்பவர்களின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை இது இன்னமும் கடினமாக்கப் போகிறது.

கூடன்குளம் போராட்டத்திற்கான ஆதரவில் ஒரு பகுதியையாவது கலைத்த பிறகு, கவனத்தை திசைதிருப்பிய பிறகு ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு காத்திருக்கக்கூடும். ஆனால் கூடன்குளம் அணு உலைக்கு கலாம் கொடுத்த ஒரு நாள் சர்ட்டிஃபிகேட்டுக்கு அடுத்து அந்தத் தருணம் கிடைக்கும் என்று நினைத்தவர்களின் கணிப்புகள் பொய்யாகின்றன. இந்த நேரத்தில் பார்த்தா புகுஷிமா அணு உலைக்குப் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும்? அந்த அணு உலையை முழுமையாகச் செயலிழக்கச் செய்ய 30 ஆண்டுகளாகும் என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள் அணு ஆதரவுக் குழுக்களின் தலையில்.

இப்போது அரசாங்கத்திற்கு இருப்பது ஒரே ஒரு வழிதான். பாகிஸ்தான் தீவிரவாத நண்பர்களிடம் சொல்லி ஒரு அட்டாக் நடத்தச் சொல்லலாம். வேறு செய்தி எதுவும் இல்லையென்றுதானே ஊடகங்கள் கூடன்குளத்தைக் கட்டி அழுகின்றன? மீடியாவின் செல்லமான தலைப்பான பயங்கரவாதம் கிடைத்துவிட்டால் ஐஸ்வர்யா ராயின் பிரசவம் என்ற உலகமகா செய்தி நிகழ்வைக்கூட இவர்கள் மறந்துவிடுவார்கள். அப்படி இருக்க கூடன்குளம் போராட்டக்காரர்களை அதே கூடன்குளம் அணு உலையில் போட்டால்கூட யார் கேட்கப் போகிறார்கள்?

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com