முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கூடன்குளம்: எந்த முடிவும் எடுக்க முடியாத கோழை அரசாங்கத்தின் சில்லறைத் தந்திரங்களும் தேசிய அளவில் வியாபிக்கும் அணு எதிர்ப்பு அலையும்
மாயா
தடை செய்யப்பட்ட எமன்களின் நாடு
எர்னஸ்டோ குவேரா
இன்னும் முடியவில்லை.........மாய மான் வேட்டை........?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மாற்றங்களை எதிர்ப்போம்...!
ஆர்த்தி வேந்தன்
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4)
ராஜ்சிவா
மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் - 2011 நவம்பர் 21 முதல் 27 வரை
-
கவிதை
ஓர் இக்ளூ அறைக்குள் பற்றியெரிதல்
பத்மஜா நாராயணன்
தேய்பிறை
ராஜா
திரும்புதல்
ஆறுமுகம் முருகேசன்..
எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்
தேனு
காலமாற்றம்...
ஹேமா
விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..
இளங்கோ
எஃப் டிவி ஒளிரும் கார்காலம்
ப.தியாகு
ஒரு ரகசியம் உருவாகியது
சரவண வடிவேல்.வே
கனவின் தீவிரம்
ராசை நேத்திரன்
மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்
சின்னப்பயல்
காக்டெயில்
ஆத்மார்த்தி கவிதைகள்
சிறுகதை
விசுவாசம்
கார்த்திக் பாலா
மேய்ச்சல்
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி
காக்டெயில்
ஆத்மார்த்தி கவிதைகள்

1.நடைசார்த்துதல்

மதுக்கூடம் பூட்டப்பட்டுவிட்டது.
வழங்கப்பட்ட நேரம் முடிந்ததும்
கருணையின்றி
உள்ளிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தத்தமது கடிகாரங்களில்
இன்னும் சில நிமிடங்கள்
இருக்கிறதாய் வாதிட்டவர்கள்
ஒரு புன்னகையோடு கூடிய
இரும்புப் பிடிகளோடு
அனுப்பிவைக்கப்பட்டனர்.

ப்ரஞையற்றுத்
தன்னிலிருந்து வெளியேறி
உலவிய சிலரை,
ப்ரேதம்போல் தூக்கிச்சென்று
சாலையில் இறக்கிவைப்பதும் நடந்தது

வெளியே வீசப்பட்டவனொருவன்
அரற்றியபடியே
அதிகாரபீடங்களைச்சாடிக்கொண்டிருக்கிறான்.
அவனுக்கு எதிரே இருக்கிறவர்களை
அவனே தீர்மானித்துக்கொள்கிறான்.
தணிக்கையற்ற ஒரு மொழியினை
அவன் உபதேசித்துக்கொண்டிருக்கிறான்.
அம்மொழி அத்தனை அன்பானதாயிருக்கிறது.
தன் தேடலுக்குள்
தான் புகுந்துகொள்ள விழைகிற
சித்தாந்தத்தைப் பகிர்கிறோமென்று
அவன் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

2.உச்சிகால பூஜை

மதுக்கூடத்தைப் பராமரிக்கிற
ஒரு வயோதிகர்.இன்னொருவனும் நுழைகின்றனர்
வயோதிகர் எச்சில் பண்டங்களை அகற்றிக்கொண்டிருக்கிறார்.
வாலிபன் பீர்க்குடுவைகளை சாக்கிலிடுகிறான்.
வயோதிகர் தண்ணீர்ப்பாக்கெட்டுகளை நீக்கத்தொடங்குகிறார்
வாலிபன் ப்ளாஸ்டிக் தம்ளர்களை தனியே அகற்றுகிறான்.

பரந்த மதுக்கூடத்தின் ஓரத்தில்
டேபிள்களுக்குமேலாய்க்
கவிழ்ந்துறங்குகின்றன ப்ளாஸ்டிக் சேர்கள்.
கூடமெங்கும் அலம்பிவிடுகின்றனர்
சுழன்றுகொண்டிருக்கிறது
மின்விசிறி கட்டக் கட்டக் கட்டக் கட்டக்

வேலை அலுப்பு முகத்தில் வழிய
பீடியைப் பற்றவைக்கிறான் கிழவன்.
அவன் பீடியைத் தனதால்
முத்தமிட்டுக்கொண்டு அகலுகிறான் வாலிபன்.

மதுக்கூடத்தின் உள்ளே
எல்லா விளக்குகளும்
அணைக்கப்படுகின்றன.

பொங்கும் மார்புகளோடு புன்னகைக்கிற
சுவர்விளம்பர ஓவியளுக்கு
தினந்தினம் வாய்க்கும் தனிமை
இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவிருக்கிறது.

காலி மதுபோட்டல்களிலிருந்து
எஞ்சிய துளிகளை
கிழவனின் கையிலிருக்கிற பாத்திரத்தில்
சேகரம் செய்கிறான் வாலிபன்.
 
கணிசமாய்த் திரவம்தளும்புகையில்
குடிக்கத் துவங்குகின்றனர் அவ்விருவரும்.
தங்களின் அன்றைய
காக்டெயிலை

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com