முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கூடன்குளம்: எந்த முடிவும் எடுக்க முடியாத கோழை அரசாங்கத்தின் சில்லறைத் தந்திரங்களும் தேசிய அளவில் வியாபிக்கும் அணு எதிர்ப்பு அலையும்
மாயா
தடை செய்யப்பட்ட எமன்களின் நாடு
எர்னஸ்டோ குவேரா
இன்னும் முடியவில்லை.........மாய மான் வேட்டை........?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மாற்றங்களை எதிர்ப்போம்...!
ஆர்த்தி வேந்தன்
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4)
ராஜ்சிவா
மாபெரும் உலக இலக்கிய நூல்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் தொடர் பேருரைகள் - 2011 நவம்பர் 21 முதல் 27 வரை
-
கவிதை
ஓர் இக்ளூ அறைக்குள் பற்றியெரிதல்
பத்மஜா நாராயணன்
தேய்பிறை
ராஜா
திரும்புதல்
ஆறுமுகம் முருகேசன்..
எல்லையிழந்த வார்த்தைப் பறவைகள்
தேனு
காலமாற்றம்...
ஹேமா
விழ நேரும் தருணங்களின் விதிமுறைகள்..
இளங்கோ
எஃப் டிவி ஒளிரும் கார்காலம்
ப.தியாகு
ஒரு ரகசியம் உருவாகியது
சரவண வடிவேல்.வே
கனவின் தீவிரம்
ராசை நேத்திரன்
மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்
சின்னப்பயல்
காக்டெயில்
ஆத்மார்த்தி கவிதைகள்
சிறுகதை
விசுவாசம்
கார்த்திக் பாலா
மேய்ச்சல்
உஷாதீபன்
ஹைக்கூ வரிசை
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி
கொஞ்சம் டேஸ்டியாய்............கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலக்ஷ்மி

கன்னடர்கள் மட்டுமில்லாத கொடவர், கொங்கனியர், துளுவர் போன்றவர்களும், சித்தி இன பழங்குடிகளும் இங்கு வசிப்பதால் பலதரப்பட்ட கலை, கலாச்சாரம் மேலோங்கி உள்ளது. கலை நாடக  கலாச்சாரம் மிகத் துடிப்பான ஒன்று. நினாசம், ரங்கசங்கரா, ரங்காயனா போன்ற அமைப்புகளும்,குப்பி வீரண்ணா நாடக கம்பெனிகளே இதற்கு அடித்தளமிட்டன. இவர்களது பாரம்பரிய நடனமாக இருப்பது யக்ஷகானம். இவர்களது மற்ற நடன வகைகள், வீரகாசி, டோலு குனிதா,சோமன குனிதா மற்றும் கம்சாலி . இதில் வீரகாசி, தசராவின் போது ,ஆவணி, கார்த்திகை மாதங்களிலும் ஆடப்படுகிறது. ஒரு குழு என்பது  2,4, அல்லது 6 பேர் கொண்டது. பாரம்பரிய முறையிலான தலைப்பாகை, சிவப்பு நிற ஆடை, கழுத்தணி, இடுப்புப் பட்டியாக, ருத்திராட்சம், நெற்றி, முழங்கையில் திருநீறு பூசி, பாம்பு போல் செய்யப்பட்ட  ஆரத்தை கழுத்தில் அணிந்து,கையில் வாள், கேடயம் கொண்டு வீராவேசத்தோடும், விறுவிறுப்பாகவும் ஆடல் புரிவர். பார்ப்பதற்கு சற்று மிரட்சியாகவே இருக்கும். தட்சனின் மகளாகப் பிறந்த தாட்சாயணி, தந்தையின் யாகத்தீயில் குதித்து உயிர்த் தியாகம் செய்த பின் கோபம் கொண்ட சிவன் அன்று ஆடிய ருத்ர தாண்டவமே இன்று வீரகாசி என அழைக்கப்படுகிறது. தட்சயாகமே பாடல்களாகப் பாடப்படுகிறது. தாளம், ஷெனாய் ,இதற்கு ஒத்திசைவு தரும் இசைக்கருவிகள்.

வெந்தயக் கீரை சித்ரான்னம்---- வட கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சாத வகை இது.

வட கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சாத வகைஇது

வெந்தயக் கீரை---1கட்டு,அரிசி---2 கப், வெங்காயம்---1, எலுமிச்சை சாறு ---2 ஸ்பூன்உப்பு--தேவையானது,

அரைப்பதற்கு
துருவிய தேங்காய்---1கப், பச்சை மிளகாய்---4, பூண்டு---2, சீரகம் ஸ்பூன்,

தாளிப்பதற்கு
கடுகு, கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ---2, பெருங்காயம் ---சிறிது.

குக்கரில் வழக்கம் போல் உதிரியாக சாதம் வடிக்கவும். கடாயில் எண்ணெய் காய வைத்துத் தாளிக்கவும். பின் வெங்காயம் வதக்கி, அதில் சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும்,அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து விட்டு, தேவையான சாதம், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிட்டு தயிர் வெங்காயம், உருளைக்கிழங்கு காரப் பொரியல், அப்பளத்துடன் பரிமாறவும்.

மத்தூர் வடை

மாண்டியாவில் உள்ள ஒரு சிறு நகரம் மத்தூர். எதேச்சையாக ஒருவர் கண்டுபிடித்தது தான் இந்த வடை.நம்ம ஊர் தெருவோரங்களில் மசால் வடை விற்பது போல் அங்கு இந்த வடையை விற்பர்.

ரவை---1 கப், அரிசி மாவு---1 கப், மைதா மாவு---2 ஸ்பூன், வெங்காயம் நறுக்கியது ---2, பச்சை மிளகாய் நறுக்கியது---3, கறிவேப்பிலை----சிறிது, கொத்தமல்லி தழை சிறு கட்டு,உப்பு தேவையானது, எண்ணெய் பொரிப்பதற்கு.

அனைத்ததையும் ஒன்றாகக் கலந்து, சூடான எண்ணெய் 2 ஸ்பூன் விட்டுலேசாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சிறு உருண்டை செய்து ,மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் பொரித்து தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.

முத்திரை----39

விஷ பரிகார முத்திரை (விஷாபஹாரி முத்திரை)


கட்டைவிரல் நுனியை மோதிர விரலின் அடியில், கடைசிரேகையில் வைத்தபடி 5---15 நிமிடம் அமரவும்.

இதன் பலன்...?

நம் உடலின் கழிவுகள், மலம், சிறுநீர், வேர்வை மூலமாக வெளியேறுகின்றன. சில போதுகளில் உண்ட உணவு சரியாக செரிமாணம் ஆகாமல் கழிவுகள் உடலிலேயே தங்கி விடும் வாய்ப்பு உண்டு.  வேறு சில கழிவுகளும் சேர்ந்து தங்கும் போது அவை விஷமாக மாறி உடலுக்கு அஜீரணம், அலர்ஜி போன்ற கேடு விளைவிக்கும். அவ்வாறு கழிவுகள் தங்காமல் உடலைத் தூய்மைபடுத்துவது இம்முத்திரை.  நல்ல தூக்கம், ஜீரண சக்தி, உடலுக்குத் தேவையான சக்தி, அமைதி தரும். தேவையற்ற  நினைவுகள், பயம், கோபம், கெட்ட பழக்கம், எதிர் மறை எண்ணங்கள் போன்றவற்றையும் நீக்கும் ஆற்றல் பெற்றது. உடல், மனதை தூய்மைப்படுத்தும் இம்முத்திரை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com