முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்திய சீனியர்கள்: வியூகத்துக்கு உள்ளே யும் வெளியேயும்
ஆர்.அபிலாஷ்
அயல் பசி
ஷாநவாஸ்
எதிர் இசைப்பாடகன் - பாடகர் கைலாஷ் க்ஹெர்
யா. பிலால் ராஜா
ஒரு நகரத்தின் கதை – பாகம் 3
சித்ரா
காதலில் கதைப்பது எப்படி?!
சின்னப்பயல்
சோழம் முதல் ஈழம் வரை - புதிய பாலத்தின் வழியே ஒரு புனிதப் பயணம்...
அருண் காந்தி
கோஷ்டித் தகராறு, அரசியல், வணிகமயமாக்கல்: இந்திய கிரிக்கெட்டின் புதிய தாழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கும் இரு தமிழ் ‘ஸ்ரீ’க்கள்
மாயா
ஷாஜி
இந்திரஜித்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (20)
ராஜ்சிவா
அடையாளம் தேடும் ஆன்மாக்கள்
ஆர்த்தி வேந்தன்
கவிதை
மரணத்துளிகள் சிந்தும் புறக்கணிப்பின் மௌன இரவு
தேனு
அபத்தக் கணத்தின் நிழல் அறை
இளங்கோ
வழியனுப்புதல் சுலபமில்லை
க.உதயகுமார்
பறக்கும் ரகசியங்கள்...
ஹேமா(சுவிஸ்)
டெட்டி பியர்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
நீங்கள் உங்களை நகர்த்துங்கள் வேகமாக
ஆறுமுகம் முருகேசன்
ஐந்து மரணங்கள்
ஆத்மார்த்தி
யத்தனிக்கும் எதிர்காலம்
பெரா. துசி
வானம் உயர
வானச்சாமி
சிறுகதை
நீ, நான், நேசம்
எம்.ரிஷான் ஷெரீப்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்... கொஞ்சம் ஹெல்தியாய்...
பத்மலக்ஷ்மி
இந்த வார கருத்துப்படங்கள்
பால்காரர்
பாபுஜி
போஸ்ட்டர் ரெடி
பாபுஜி
கடிதங்கள்
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
நீங்கள் உங்களை நகர்த்துங்கள் வேகமாக
ஆறுமுகம் முருகேசன்

சொற்கள் மிதக்கும் அறையில் 
மௌனமாக நிரம்பி இருந்தாள் அவள்

பசிப்பொழுதினில் பசலைக் கால
பிசுபிசுப்புகளை உண்டு வியாபித்தாள்

தனித்த இரவின் வெம்மைச் சுவரில் 
அவள் எதை எதையோ வரையத் துடிக்கிறாள்  

பேரன்பின் உதட்டு முத்தம் 
கண்ணாடிச் சில்லுகளாய் சிதறிக் கிடக்கும் 
அப்படுக்கை அறையினுள்,
 
யாருடைய இசையையோ நிரம்பப் பருகி 
பேதலில் உரக்கக் கத்துகிறாள்

இதென் காதல்..
இதென் காதல்.. 

நீங்கள் நகர்த்துங்கள் உங்களை வேகமாக!  சாத்தான் கடவுளாதல்!  

தனிமையோடு விவாதித்துக் கொண்டிருக்கும் 
இந்நேரத்தில் உள்வரும் நீ 
என்னையொரு மனநலம் குன்றியவனென
எண்ணிவிட சாத்தியமுள்ளது

தவறில்லை,
நானும் இவனிடத்தில் 
அப்படித்தான் சொல்லிவைத்திருக்கிறேன் 
உன்னை   

அந்தப் பீடிக்கட்டில் சிலவற்றைத்
தந்துவிட்டு நீ கிளம்பலாம் ( உன் வசந்தி தேடுவாள் ) 

ஒரேயொரு நிபந்தனை 
போகிற வழியில்
மாலனுக்குப் பைத்தியமென 
தங்கப்பனிடம் மட்டும் சொல்லிவிட்டுப் போ 

அவன் பார்த்துக் கொள்வான் மற்றனைத்தும்
(
தங்கப்பன் செல்வியின் கள்ளப் புருஷன் )  
செல்வி??
வேண்டாம், நானென் தனிமைக்குத் திரும்புகிறேன் 

ஒரு சாத்தானின் உருவம் வரைந்து 
உலவ விடுகிறேன் அதனை, 
 
இப்பைத்தியக்கார வெளியில் 
கைவிடப்பட்டவர்கள் உள்ள வரை 
தன்னை யாரும் விழுங்கிவிட முடியாதென 
கூக்குரலிடுகிறது..
அதன் கண்களில் ஒரு குரூரம் வழிகிறது..
ஒரு பெருங்கோபம் கொப்பளிக்கிறது..

ஒரு எதிர்நோக்கா நொடியிலது
பக்கத்துக்கு குடிசையை வட்டமடிக்கிறது

காமத்தின் வெம்மையில் அவள் பற்றி எரிகிறாள்!!

கரமைதுனத்தின் கடைசி முனகலில் 
சாத்தான் கடவுளாகிறான்  
அதனறியாது.

நாளை வயக்கரையில் நடக்கையில் 
ஒரு அவசியமற்ற புன்னகையோடு 
எல்லோரும் என்னைக் கவனிக்க 
அதிக வாய்ப்பு உள்ளது. 

                       
 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com