முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஒரு கடிதம் மூலம் தனது அடுத்த காய்நகர்த்தலை உணர்த்தும் கருணாநிதி: காங்கிரசின் பலவீனத் தருணத்தில் வஞ்சம் தீர்க்கத் தயாராகிறாரா?
மாயா
மனிதன்... உயிரினம்... உள்ளுணர்வு...?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
அரவான்-உக்கிரமான தேடல்
க.உதயகுமார்
அயல் பசி 2
ஷாநவாஸ்
நமது ஜனநாயகம்
வாஸந்தி
ஒரு நகரத்தின் கதை – பாகம் 4
சித்ரா
உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!
வித்யாசாகர்
கவிதை
முடிவற்ற ஒருவழிப் பாதை...
இளங்கோ
மந்தை வெளி
அருண்
அன்பெனும் தீரா நோய்
ஆறுமுகம் முருகேசன்
சுயம் மறக்கும் மையத்தின் அடர் வியூகம்..
தேனு
அற்புத‌ இர‌வு
ராம் ப்ரசாத்
காதலிப்பது
தனுஷ்
அட்டைப்படுக்கையில் துயில்வோன்
வானச்சாமி
ஒரு நாளின் தொடக்கத்தில்
கயல்விழி
சில்வியா'வின் மரணம்
சின்னப்பயல்
போக்குவரத்து நெரிசல்
உமா மோகன்
மின்சாரம் தடைபட்ட ஒரு நள்ளிரவில்....
ரா.நாகப்பன்
சிறுகதை
நான் அதுவல்ல
உஷாதீபன்
பாதுகை
கே.எஸ்.சுதாகர்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்......கொஞ்சம் ஹெல்தியாய்...
கே.பத்மலக்ஷ்மி
இந்த வார கருத்துப்படங்கள்
உ.பி.
பாபுஜி
தலைவர்கள் லிஸ்ட்
பாபுஜி
அன்பெனும் தீரா நோய்
ஆறுமுகம் முருகேசன்

அன்பெனும் தீரா நோய்

 


ஒரு தற்கொலை முயற்சியில்
ஆழப் பதிந்த பெருவலி
சமணக்காலிட்டு தரையிலமர்ந்து
மிக எதார்த்தமாய் விழுங்கிய முதல்துளி மதுவினை
அநாயாசமாய் ஞாபகத்தில் அரைகிறது

குடித்தபொழுது கிடைக்கும் குடிகாரப் பட்டம்
குடி நிறுத்திய பின்பும் பின்தொடர்வது
ஒருவித மனக்கலக்கத்தையும்
அதிலிருந்து பிறழ்வையும்
எளிதில் உருவாக்கிவிடக்கூடிய
அபாயம் உண்டென்பதால்..

பட்டத்தையும் பட்டம் சூட்டுபவர்களையும்
மிக கவனமாகக் கையாள வேண்டும்
இல்லையெனில்
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு
முந்தையதைக் காட்டிலும்
பேராபத்தான குற்றங்கள் புரியும்
ஆயுதத்தை உங்களுக்குத் தருவிப்பார்கள்
ஓர் எளிய புன்னகையோடு

அப்பொழுதும் அவர்களை அமைதியாகவே
எதிர்கொள்ள வேண்டும்
தவறினால்
காய்ந்த முந்திரி,சாக்லேட் போன்றவைகளாலான
ஒரு அருமையான சுவையுடைய ஐஸ்கிரீமென
அவமானத்தின் தலைகுனிவை
ருசித்து உண்ணப் பணிப்பார்கள்..
 
அத்தருணம்
ஒரு கொலையாலோ
ஒரு தற்கொலையாலோ
புனையப்பட்டிருக்கும் அவ்-இடம்

மேலும்
அன்பெனும் தீரா நோய்
அங்கும் இங்கும் வேகமாகப் பரவும்
அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.அரூபம்


உயிர்த்திருத்தலுக்கும்
வாழ்விற்கும்
நடுவிலுள்ள வெளி

இத்தனை சிறியது தானென்கிறாய் நீ
எத்தனை பெரியதோவென வியக்கிறேன் நான்

இனி
அவரவர்
அவரவர் இருத்தலுக்குத் திரும்புதல்
சுலபத்தில் சாத்தியமல்ல! 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com