முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மயங்க மயங்க தாக்கும் நித்யானந்தாவின் தொடர் பட்டாபிஷேகம், பார்த்துப் பார்த்து அவிந்து போகும் கண்கள்
மாயா
ஒலி மாசு - இனி யாரும் தப்ப முடியாது...!?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நகரத்தின் கதை பாகம்: 11
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் : காலத்தின் சிறகுகள்
நர்சிம்
ஏ.ஆர்.ரஹ்மான் மீட்பராக வந்த மானுடன் - 4
ஆத்மார்த்தி
கவிதை
ஒரு குப்பைத் தொட்டிக்குள்
ஆர்.அபிலாஷ்
உயிர் விளையாட்டு!
செ.சுஜாதா
வெளியெனும் அவளின் பயணத் தீண்டல்கள்..
தேனு
பிரியத்தின் சருகு..
இளங்கோ
சுகந்தம்
எம்.ராஜா
ஓர் உருவம்
ராம்ப்ரசாத்
வாக்குமூலம்
ஆறுமுகம் முருகேசன்
இருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...
உமாமோகன்
ஓய்ந்திருக்கும் சிறகில்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
சிறுகதை - இட்லி
சூர்யா நாராயணன்
பொது
ஒரு புதிய திரைமொழி ‘வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது’ (திரைவிமர்சனம்)
வித்யாசாகர்
பில்லா 2 இசை விமர்சனம்
சின்னப் பயல்
இந்த வார கருத்துப்படங்கள்
வாக்குமூலம்
ஆறுமுகம் முருகேசன்

வாக்குமூலம்

சுசீந்திரம் தேரோட்டக் கூட்டமென
தலைகள் அடர்ந்திருக்கும்
ரயில் வண்டிக் காத்திருப்பில்

உதடு பிளந்து
உதடு பிணைந்து
உதடு கவ்வி
உதடு சுவைத்து
உதடு கரைந்து
உதடு நிறைந்து
நாம் செய்ததை முத்தம் என்றனர்
மிகச்சாதாரணமாக

தொலைதூர பயணத்தின்
இல்லாத நிறுத்தத்தில்
செத்தும் போயிருக்கலாம் கமாலாகிய நான்

பெரு மழை கலைந்த
ரயில்வே பிளாட்பாரத்தில்
கதறி அழுது
உடைந்து ஒழுகி
அம்மணமாய் ஷிபானா நீ நிற்கிறாய்
என்பதறிகையில்!

காதல் நதி

பனித் துளிகளாய் ஒட்டியிருக்கும் இலைக்கு
முத்தமிடும் சூரியனாய் 
கொஞ்சல் காட்டும் உன்னை
எப்படிப் பிரதியாக்குவேன்
வனம் ஒழுகும் இக்காதல் நதிக்கு?!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com