முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அன்று வந்ததும் அதே நிலா (3)
ராஜ்சிவா
இளவரசனும் திவ்யாவும்: சில கேள்விகளும் விடைகளும்
ஆர்.அபிலாஷ்
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்'
எம்.ரிஷான் ஷெரீப்
கடவுள்களும் மரிக்கும் தேசம்
சின்னப்பயல்
வாலி
நர்சிம்
கொஞ்சம் டேஸ்டியாய்........கொஞ்சம் ஹெல்தியாய்........
கே.பத்மலக்ஷ்மி
சொலவடைகளும் பழமொழிகளும்
கழனியூரன்
கவிதை
உயிர்த்திருப்பின் இசை
ஆறுமுகம் முருகேசன்
தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..
வித்யாசாகர்
இளங்கோ கவிதைகள்
-
சிறுகதை
ஒரு வேலை
ராம்ப்ரசாத், சென்னை
உயிர்த்திருப்பின் இசை
ஆறுமுகம் முருகேசன்

உயிர்த்திருப்பின் இசை

 
ஒரு முதல்முத்தம் பிரசுரித்தக் கிளர்வென
அசைகிறது இலை
அந்தி கோபுரத்தின் ஒற்றைதீபம் ஒத்து
விரல் நீட்டியது அது
மெல்லத் திரும்பி
“என்ன?” என்பதுபோல்
பார்வை தருகிறது இலை
பாலருந்தும் மார்குழந்தையென
சயனிக்கத் துவங்கியது அது
 
அதற்குப்பிறகு
கொட்டித் தீர்ந்தது ஆலாபனை மழை
***


துரோகம்
 
கல்லை எவ்வளவு விசைக்கூட்டியும் எறிந்துக்கொள்
அது உன் விருப்பம்
மிகுந்த நம்பிக்கையோடு எறிகிறாய்
இலக்கு உன்னை மறுதலிப்பது தெரிந்தும்
 
எறிந்துக்கொள் நீ
அது உன் விருப்பம்

தொடர்ந்து எறிகிறாய்
உனது செயற்கை விருப்பம் தொட்டு
எந்தக் கவலையும் இல்லை
எறிந்துக்கொள்ளலாம் நீ
 
திரும்பிப்பார்
என் நெஞ்சைக்கட்டிக்கொண்டு நிற்கிறது
உன் இலக்கு
 
கல்லை இன்னும் கொஞ்சம் விசைக்கூட்டி எறியடா

***

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com