முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...!
கிராபியென் ப்ளாக்
எண்ணங்கள்
நர்சிம்
சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
கழனியூரன்
கவிதை
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து...
ஹேமா(சுவிஸ்)
பிரத்யேகக் கொலைவாள்
பாலசிவா
பாவனைகள்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பெண் புலி!
தினேஷ் பாலா
சிறுகதை
திருட்டு
ஆத்மா
பொது
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...!
கிராபியென் ப்ளாக்

இந்தியசினிமாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக சென்னையில் நடந்தேறியது.அரசு ரூ. 10 கோடி வழங்கி விழா ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவின் சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒருசேர விழாவில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.அந்தந்த மாநில அரசு சார்பில், கலைஞர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில் ஏராளமான கலைஞர்கள் விருதுக்கு தேர்வு- பெற்றிருந்தார்கள். பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், சூப்பர் ஸ்டார், உலகநாயகன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.சினிமா எனும் மகத்தானஊடகத்தின் மூலம் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட நட்சத்திரங்கள்மூலம் சென்னை நான்கு நாட்களுக்கு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.முக்கிய திரையரங்களிலும், பூங்காவிலும் பாமரரசிகனுக்கு இலவசமாகதிரைப்படங்களும் காட்டப்பட்டன.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்தவிழாவில் அரசியல் ரீதியான அணுகுமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. தொலைக்காட்சி செய்தியாளர்களை அரங்கத்துக்குள் அணுமதிக்காத நிகழ்வுகளும் நடந்தேறியது. ஆனாலும், நிறை, குறைகளை மீறி இந்திய சினிமா நூற்றாண்டு விழா தமிழகத்தில் நடந்ததன் மூலம் மேலும் ஒரு வரலாற்று சாதனை அதற்குக் கிட்டிவிட்டது!

ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, இந்தியசினிமா நூற்றாண்டு குறித்த பதிவுகள் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில் பலவாறாக அலசப்பட்டபோதிலும், எல்லோரும் சொல்லிற்வைத்தாற்போல் இயக்குநர், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பவாதிகள் குறித்து அலசினார்களே தவிர, திரைக்கதையாசிரியர்கள் குறித்தத் தகவல்களை மறந்தோ அல்லது அப்படியான முக்கியத்துவம் எதுவும் இந்தியசினிமா நூற்றாண்டில் நடந்தேறவில்லை என்று நினைத்தோ (விதிவிலக்காக எழுத்தாளர் ஞாநியின் கட்டுரைத் தவிர்த்து...!) அவர்கள் குறித்த பதிவை சொல்லிச் செல்லவேயில்லை! குறைந்தது, தமிழ் சினிமாவின் திரைக்கதைமற்றும் இலக்கியஆளுமைகள் குறித்தும் கூட கோடிட்டு காட்டவில்லை!

தமிழ் சினிமா இந்த நூறு ஆண்டுகளில் உண்மையில் பலசாதனைகளைப் படைத்திருக்கிறதா? என்றால் படைத்திருக்கிறது ஆனால், படைக்கவில்லை என்ற குழப்பமானபதில்தான் பெரும்பானோர் இடத்தில் இருக்கிறது.காரணம், தொழில்நுட்பத்திலும், வியாபார ரீதியாகவும் தமிழ் சினிமா முன்னால் சென்றதேதவிர, கதையமைப்பில் இன்னும் அது குறிப்பிட்ட அளவுக்குக் கூடவளரவில்லை என்பதுதான் மோசமான உண்மை. 2013ல் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வரைஇந்தியசினிமாவில், தமிழ் சினிமா இன்னும் ஒரு பெண்ணின் மனதைகரைத்து, எப்படி கைப்பிடிப்பது என்றசூத்திரத்தைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் மகேந்திரனைத் தவிர்த்து, காதலைத் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு அதற்குப்பிறகான வாழ்க்கைப்பதிவை செல்லுலாய்டில் பதிவு செய்ய... எந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் முன் வரவில்லை. உண்மையில், தமிழ் சினிமா சிறந்ததிரைக்கதையாசிரியர்கள்மூலமாகவே, தனக்கானஇடம் நோக்கி, வேகமாக வளர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆரூர்தாஸ், கலைமணி, செல்வராஜ் போன்றவர்கள் திரைக்கதைகளுக்குள் ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது. நாம் சிலாகித்துக் கொண்டிருக்கும், பலபடங்களுக்குப் பின்னால் அவர்களின் பணியேஅதிகம். அதேபோலஇலக்கியஆளுமைகளான புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பாஸ்கர்சக்திமற்றும் சுபா, அஜயன் பாலா போன்றவர்களின் பங்களிப்பின் மூலமேஅடுத்தகட்டம் நோக்கிசினிமா நகர்ந்திருக்கிறது என்பதைஎப்படி மறந்துவிட்டு, சினிமா நூற்றாண்டை கொண்டாட முடியும்! இந்திய அளவில் உச்சபடைப்பாக நிற்கும் இயக்குநர் சத்யஜித்ரே இயக்கியபதேர் பாஞ்சாலியும், தமிழகத்தில் இயக்குநர் மகேந்திரன் இயக்கியஉதிரிப்பூக்கள்திரைப்படமும் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புகள்தான் இல்லையா?

நமக்கு பக்கத்தில் இருக்கும் மலையாளப் படவுலகிலும் இலக்கியஆளுமைகள்மற்றும் திரைக்கதையாசிரியர்கள்தான் சிறந்த படைப்புகள் வெளிவந்துள்ளன. வைக்கம் முகம்மது பஷீரின் எழுத்துக்களில் தங்களை பறிகொடுத்தவர்கள், தகழிசிவசங்கரப்பிள்ளையின் செம்மீன் நாவலில் கரைந்து போனவர்களால்தான் மலையாள சினிமா மகத்தானசாதனைகளை நிகழ்த்திக் காட்டியது. எம்.டி.வாசுதேவன் நாயர் மற்றும் லோகிததாஸ் போன்றோர்கள்எழுதியதிரைக்கதைகளைக் கொண்ட படங்கள்தான் என்றென்றும் உயிர்ப்புடன் திரையில் உலவும்படி உள்ளன. ஒரு வடக்கன் வீரகதா, நிர்மால்யம் மற்றும் கிரீடம் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதகாவியங்கள். தமிழில் திரைக்கதையாசிரியன் பங்கு குறித்துத் தீவிரமாக பேசியும், எழுதியும் வந்ததோடு.. அந்தஇடத்தை தன்னை கொண்டு நிரப்பவும் செய்தவர் சுஜாதா.ஆனால், அவரின் ஆளுமையைதமிழ் சினிமா இயக்குநர்கள் புரிந்துகொள்ளும் முன்னே அவர் காலமாகிவிட்டது, தமிழ் சினிமாவின் பேரிழப்புகளில் ஒன்று!

இன்று, இந்தியசினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில் திரைக்கதையாசிரியர்களுக்காக காத்திருக்கும் போக்கு உருவாக்கியிருக்கிறது.அனுராக் காஷ்யப் போன்றோர் எழுதியதிரைக்கதைகள்வணிக ரீதியாகவும் பெரும் வெற்றிப் பெற்றுள்ளன. அவரின் திரைக்கதைக்காகநட்சத்திரங்கள் காத்திருக்கிறார்கள். வாட்டர்’, ‘சத்யா’, ‘மும்பை டாக்கீஸ்’, ‘பிளாக் பிரைடே’, ‘அக்லி’, ‘நோ ஸ்மோக்கிங்’, ‘தேவ் டிபோன்றவைஅனுராக்கின் திரைக்கதையில் உருவான படைப்புகள். சமீபத்தில் தமிழில் கவனம் பெற்றுள்ள ஆரண்யகாண்டம், அட்டகத்தி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தகாணோம், சூதுகவ்வும் போன்ற படைப்புகள் கூடதிரைக்கதையின் வலிமையைதயாரிப்பாளர்களுக்கும், மங்காத நட்சத்திரங்களுக்கும் பாடம் புகட்டி உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆனாலும், காதலைத் தாண்டிய வாழ்க்கையை, பாடல்கள்இ ல்லாத ஒரு படத்தை எடுக்கஇன்னமும் நாம் தயங்கிக்கொண்டிருக்கிறோம். கமர்ஷியல் வெற்றி... கமர்ஷியல் வெற்றி வேண்டும் என்று புடலங்காய் தத்துவத்தை உதிர்த்தாலும், கமர்ஷியல் படத்தில் கூடகாதலைத் தவிர்த்து, வேறுகதைகளை தேர்ந்தெடுக்கும் துணிச்சலும் நம்மிடம் இன்னும் வரவில்லை. மலையாளத்தில் கமிர்ஷியல் வெற்றியைப் பெற்றிருக்கும் ஷட்டர்திரைப்படத்தின் திரைக்கதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பலஅம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்தியமற்றும் தமிழ் சினிமாவின் இலக்கியஆளுமைகள், திரைக்கதையாசிரியர்களை எளிதில் மறந்துவிட்டு, அப்படியெல்லாம் எழுதிவிட முடியாது இந்தியசினிமா வரலாற்றை...!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com