முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...!
கிராபியென் ப்ளாக்
எண்ணங்கள்
நர்சிம்
சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
கழனியூரன்
கவிதை
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து...
ஹேமா(சுவிஸ்)
பிரத்யேகக் கொலைவாள்
பாலசிவா
பாவனைகள்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பெண் புலி!
தினேஷ் பாலா
சிறுகதை
திருட்டு
ஆத்மா
பொது
பிரத்யேகக் கொலைவாள்
பாலசிவா

பிரத்யேகக் கொலைவாள்

மழைநீர்த் தடமறுத்த ஓடையோரம் - ஓர் 

கைவிடப்பட்ட நாடோடி பிரசவிக்கும் கனவில் 

பனிக்குடம் உடையும் கடைசி நொடி 

விழித்தவுடன் பதியும் 

ஒரே துளி கண்ணீருக்கானது… 

நெடுஞ்சாலை நடுவே 

துடித்திறக்கும் வண்ணத்துப்பூச்சியின் 

கருப்பு வெள்ளைப் பகலுக்கு 

நிறம் வழியும் அதன் சிறகுகளும் 

என் சிகப்பு நிழலும் சாட்சி… 

குழந்தைகள் உறங்கிவிட்ட‌ 

பின்னிரவின் குளிரில் 

சாம்பல் காகிதப் பைகளில் 

தூக்கிச் செல்லப்படும் 

நாய்க்குட்டிகளின் விசும்பல்கள் 

மறத்துப்போன செவிமடல்களில் 

விடியும் வரை கசிகிறது… 

தூர‌த்து சதுப்புநிலக்காடு காணும் 

கூடிழந்த ப‌ற‌வையொன்றின் 

ந‌க‌ச்சிலிர்ப்பை நான‌றிவேன்… 

ம‌ரமடர்ந்த‌ பச்சைவெளி மேல் 

அலையென‌ ப‌ர‌வுமத‌ன் நிழ‌ல் 

உட்புகுந்து ப‌ற‌க்கும் என் வ‌ன‌மெங்கிலும்… 

முன்னெச்ச‌ரிக்கைய‌ற்ற‌ 

நிஜங்களின் கூர்மை 

எப்போதும் பின்தொடர‌ 

எனக்கெனவே விதிக்கப்பட்ட‌ 

பிரத்யேகக் கொலைவாள்… 

பலி மரத்தண்டின் விளிம்பில் படிந்த 

பழங்கறை நீங்க‌த் தோயும் 

குருதியின் வெதுவெதுப்பு காயும் முன் 

இறக்கத் தயாராகிறேன் 

இன்று மற்றுமொரு முறை… 

 ••

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com