முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...!
கிராபியென் ப்ளாக்
எண்ணங்கள்
நர்சிம்
சொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10
கழனியூரன்
கவிதை
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
எம்.ரிஷான் ஷெரீப்
தாத்தனின் நாட்குறிப்பிலிருந்து...
ஹேமா(சுவிஸ்)
பிரத்யேகக் கொலைவாள்
பாலசிவா
பாவனைகள்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
பெண் புலி!
தினேஷ் பாலா
சிறுகதை
திருட்டு
ஆத்மா
பொது
இளங்கோ கவிதைகள்
இளங்கோ

பெருகும் மௌன நீர்த்துளி...

அழைத்ததும் வருவதாகச் சொல்லியிருந்தாய் 
அப்படியொரு அழைப்புக்கான புன்னகையை 
பறித்து வைத்துக் கொண்டாய் 

நீண்ட பகல்வெளிகளின் நிழல் சொற்கள் 
அத்தனை உவப்பானது.

அள்ளிப் பருக 
பெருகும் மௌன நீர்த் துளி கரையில் 
நிறுத்துகிறது 
மொத்த அர்த்தங்களையும்

**
அவ்வளவே.

நீ 
உன்னை எழுதிக் கொண்டிருக்கிறாய் 

நான் இந்தப் பேனாவை 
மூன்று விரல்களுக்கு நடுவே 
லாவகமாய் பிடித்து வைத்திருக்கிறேன் 

அவ்வளவே 

நீயே உன்னை 
எழுதிக் கொள்கிறாய் 

***


இத்தனை இருள் சூழ்ந்த தனிமை

போதுமானதாயிருக்கிறது 
இத்தனை இருள் சூழ்ந்த 
தனிமைக்குள் 
கடைசியாகத் தந்து சென்ற 
புன்னகையோடு 
உட்கார்ந்திருப்பது 

*****

ம்...

மனமற்று சிதறிய 
சந்தர்ப்பமொன்றில் 
ஒரு 
சிறிய வார்த்தைக் கூட 
உடனிருக்கவில்லை

***

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com