முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஊர்க்காரனும் பிரேஸில் கோழித்துண்டும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
கர்ண மோட்சம்
ஆனந்த் அண்ணாமலை
மிருகயா: மிருக நிலையின் விமோசனம்
ஆர்.அபிலாஷ்
நீயா நானா
எஸ்கா
கடலினிலே வரும் கீதம்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
காஷ்மீரில் பெய்த மழை
நிஜந்தன்
மேகங்களுக்குப் பின்னால்..
ராமலக்ஷ்மி
கவிதை
மரணித்தவனின் கனவு.
சசிதரன் தேவேந்திரன்
லதாமகன் கவிதைகள்
லதாமகன்
ஆதவா கவிதைகள்
ஆதவா
தெரிந்தும் தெரிந்துமே
மதன்
ஓர் மடல்
மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்) : தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
நேசப்பரிபாஷை..!
ஆறுமுகம் முருகேசன்
மானுட பிம்பங்கள்
ஷம்மி முத்துவேல்
விரல்களிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்..!
இளங்கோ
ஒரு மழைநாளும் திங்கட்கிழமையும்
நளன்
சிறுகதை
தங்க பிஸ்கட்ஸ்
ராம்ப்ரசாத்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் : ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
ஜாதி என்ன?
பாபுஜி
இலட்சியம்
பாபுஜி
நேசப்பரிபாஷை..!
ஆறுமுகம் முருகேசன்

கடல்மேல் பறவையாகும் வானம்!

போன்றதொரு நேசப்பரிபாஷையினை
விழிகளிரண்டிலும் அழுந்தப் பிடித்தவளாய்..

என்னை மிக நெருக்கத்தில்
பருகச் சொல்லிக் கெஞ்சுகிறாள் !

அப்பொழுதும் என்னை நான்
மிகப்பத்திரமாக மௌனமாகவே
தொலைத்துக் கொண்டிருந்தேன்..!

காய்ந்த அந்த ஒற்றைரோஜா இதழ்கள்
மழையின் ஈசல் போல் 
அவளது மென்விரல்களில்
தன்னைச் செத்துக்கொண்டிருந்தது..

அப்பொழுதும் மௌனமாகவே வைத்திருந்தேன்
என்னை நான்..!

பிரிவின்..
கையடங்காக் குருதியினை... 

ஒரு முத்தத்தில்..

எரித்துவிடத் தயாரானவளாகி,  
எனது வன்விரல்களை
மெல்லப் பற்றிக் கொண்டு
அழ.. அழ.. அழுதேவிடுகிறாள்...

நான் பெருமழையாகி
அவளை இறுகக் கட்டிக்கொள்கிறேன்..

பின் ஒருவானவில்லின் மேல்
இருவரும் கைகோர்த்து நடக்கின்றோம் !!

வண்ணத்துப்பூச்சிகளும்..
காதலும் ( "காதலென்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடுவதல்ல அது!”)
எங்களுக்கானது.. எங்களுக்கானதே..!   

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com