முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கத்திடமிருந்து தலைவரை யாராவது காப்பாற்றுங்கள்
அ.ராமசாமி
பிராத்தனையின் இசை- சூஃபி இசைமீதான ஓர் எளிய அணுகல் (பகுதி - 2 )
யா. பிலால் ராஜா
மானெக்‌ஷாவின் தொப்பி
ஷாநவாஸ்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (10)
ராஜ்சிவா
இளமை வரும், முதுமை வரும்
உஷாதீபன்
கவிதை
இதய வடிவினாலான கவிதை
அன்பரசன்
ஒற்றை மழைத்துளி
சின்னப் பயல்
புறாக்கள்
ராசை நேத்திரன்
ராஜா கவிதைகள்
ராஜா
வெறிச்சோடும் நிதானங்கள்..
இளங்கோ
கானல் கவிதை
சசிதரன் தேவேந்திரன்
மழை இரவில்
ஆறுமுகம் முருகேசன்
நாஸ்ட்ர‌டாம‌ஸ்
ராம்ப்ரசாத்
முத்தக் க/கு 2011...
ஹேமா
சிறுகதை
சம்பத்து
ஆத்மார்த்தி
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்........கொஞ்சம் ஹெல்தியாய்..........
கே.பத்மலக்ஷ்மி
மழை இரவில்
ஆறுமுகம் முருகேசன்

மழையோய்ந்த முன் இரவின்
விடியலில்
சொட்டிக்கொண்டிருக்கும் துளிகளென
வசீகரிக்கிறாய்.

தெளிந்த நீரோடையில்
ஒரு இலை உலவுவதைப்போல
அத்தனை அழகியலாக
என்னுடல் பற்றுகிறாய்.

அன்பின் ஆயிரங்கரங்கள் கொண்டு
அத்தனை மெலிதாய் புன்னகைக்கிறாய்.

புன்னகைக்கும் போதே
இனியும் கோடை வருமென்கிறாய்.

ஒரு சிறு கைப்பிடியினைச் சுற்றும்
கொடியென தன்னை
இறுகப் பற்றிக்கொள் என்கிறாய்.

கோடையொன்றும்
அத்தனை வெம்மையோ
அத்தனை தனிமையோ அல்லவென
நம்பும்படியாகச் செய்துவிடுகிறாய்.


இன்றிரவும் மழை பொழியுமாயின்
அதனின் சில துளிகளை
உன் கைக்குட்டையில் கோர்த்து
பின் வரும் கோடையில்
உலர்த்தலாமென நிசப்தமாகிறேன்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com