முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (14)
ராஜ்சிவா
வாத்தின் நெடி அனுபவித்தது உண்டா?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்: நான்கு கேள்விகள்
ஆர்.அபிலாஷ்
கவிதை தரிசனங்கள்...
ஆர்த்தி வேந்தன்
இயல் விருதுபெறும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை நடத்தும் மாபெரும் பாராட்டு விழா -2.2.2012- சென்னை
-
கவிதை
ஜனா கே கவிதைகள்
ஜனா கே
மரணத்தைக் கடந்து
சசிதரன் தேவேந்திரன்
இளங்கோ கவிதைகள்
இளங்கோ
இருள்சிறகுகளுடன் நடனமாடும் அதிர்வலைகள்..
தேனு
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்
தூரத்தில் உரையாடிக்கொண்டிருப்பவன்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
பிரிவும் சந்திப்பும்
யுகயுகன்
சேற்றுத் தவளை
இர.ஜெ.பிரேம்குமார்
சிறுகதை
இதுவும் காதல்
ராம்ப்ரசாத்
ஹைக்கூ
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
இந்த வார கருத்துப்படம்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்..............கொஞ்சம் ஹெல்தியாய்........
கே.பத்மலக்ஷ்மி
ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்
ஆறுமுகம் முருகேசன்

அந்தரத்தில் அசைவுறும் மனப்பிரயாசங்கள்..!

சொற்களின் நதியில் தலை குளிக்கிறாய் நீ
காதலின் கண்ணாடியில் முகம் காண்கிறேன் நான்

வர்ணங்கள் வாய்க்கப்பெற்ற வண்ணத்துப்பூச்சி நீ
பேரலையை உடைக்கும் ஒரு துளி மழை நான்

நிசியைப் புசிக்கும் ஒற்றை நிலா நீ
நுரை தின்ற கால்சுவடு நான்

சிறுமி பலூனின் ஆர்ப்பாட்டமென நீ
தட்டாம்பூச்சியின் ரீங்கரிப்பாய் நான்

பனி குழுமிய இலையென நீ
கிளைமர நிழல் நீந்தும் ஆறென நான்

இப்பெருங்காட்டின்
ஆதி துயரென நீ
ஆதி பொய்யென நான்


காலத்தைக் கொன்று வயது வளர்த்தல்..

என்னைச் சிதைத்துப் புதைத்த
இக்கவிதை உங்களுக்கெதற்கு

இந்நினைவுகளைத் தீயிலிட்டுக் கருக்கிய
பின்னும் கருமேகமாய்
என்னை ஏன் பின்தொடர்கிறீர்கள்

நானொரு கைவிடப்பட்டவன்
என்னிடத்தில் நீங்கள் தன்னைக்காண
ஒரு வாய்ப்பும் இல்லை
விட்டு விடுங்கள் என்னை

நானொரு மனம் பிசகியவன்
நீங்கள் உங்கள் மனதினை
வேறு திசையில் செலுத்துங்கள்

சென்று விடுங்கள்
இந்நைந்த காகிதம்
உங்களுக்கானது அல்ல

திரும்புதலின் பாரத்தை சவமாக்க
ஒரு வைகறையின் மலையுச்சியிடமோ
ஒரு பின்மதியத்தின் அலையிடமோ
ஒரு நள்ளிரவின் ஒற்றைக் காற்றாடியிடமோ
யாசித்துப் பின்-துயிலவென காத்திருக்கிறேன். 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com