முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அயல் பசி
ஷாநவாஸ்
ஒரு நகரத்தின் கதை பாகம்: 10
சித்ரா ரமேஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்தியாய்........
கே.பத்மலக்ஷ்மி
எண்ணங்கள் : 4
நர்சிம்
கவிதை
வீழ்ந்து மீளும் வார்த்தைகளின் வன்மக்கீற்றுகள்
தேனு
நிகழும்
எம்.ராஜா
பரிமாறலில் தவறி விழும் சொற்களின் வெளிச்சம்..
இளங்கோ
வித்யாசாகர் கவிதைகள்
வித்யாசாகர்
உன்னை வரைபவன்
ஆறுமுகம் முருகேசன்
தொலையும் வாழ்க்கை
ராம்ப்ரசாத் சென்னை
இயற்றி விட்ட
வளத்தூர் தி.ராஜேஷ்
திரியும் பால்
உமாமோகன்
சொற்கள் இன்னும் திரளவில்லை
சம்பு
சிறுகதை
சகானா
அருண் காந்தி
இந்த வார கருத்துப்படங்கள்
பேச்சுவார்த்தை
பாபுஜி
உன்னை வரைபவன்
ஆறுமுகம் முருகேசன்

வான் அழகு சுடர்!

விருப்ப நிழல்
ஒரு மழலையின் நிறத்தோடு
அடர்ந்து பொழியும்
இவ்விரவின் வனத்தில்
கைத்தாங்கலாய் அரவணைக்கிறது
பெருநதியின் வேட்கைத் துளி!

வாழ நீளும் மரணம்!

துயர் சாயல் வழியும்
கர்ப்பம் தரிக்கா வயிற்றின்
யாசிப்பினை யொத்து
கடக்க, கலைய மறுக்கிறது
உனது நிராகரிப்பின் வெயிலிலிருந்து
எனது கடல்நீளக் காதல்!

உன்னை வரைபவன்

பாசிகள் பற்றாத நீர்ப்பாறையென
இருத்தலின் அசௌகரியங்கள்

என்னைவிட நீ நன்றாக
அறிந்து வைத்திருப்பதிலுள்ள
ஆச்சர்யம்தான்

இத்தனை அவமானங்களுக்குப் பிறகும்
இத்தனை நிராகரிப்புகளுக்குப் பிறகும்
இத்தனை கொலைகணங்களுக்குப் பிறகும்
இத்தனை அசைவற்ற மௌனத்திற்குப் பிறகும்..
 
நான் உன்னை வரைந்து கொண்டிருப்பதின்
சூட்சமம்! 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com