முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
டாஸ்மாக் மதுபானக்கடை: தமிழ் சினிமா பாடல்களின் தேக்கமும் புதுப்பாய்ச்சலும்
-ஆர்.அபிலாஷ்
மார்போஜன்களும்......மேலண்ண வரிகளும்......
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
ஏ.ஆர்.ரஹ்மான் மீட்பராக வந்த மானுடன் 3
ஆத்மார்த்தி
அயல் பசி - 9
ஷாநவாஸ்
எண்ணங்கள் : 5
நர்சிம்
கொஞ்சம் டேஸ்டியாய்... கொஞ்சம் ஹெல்தியாய்...
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய அரிச்சுவடி
இளங்கோ
ஒருபொழுதின் புழுக்கம்
எம்.ராஜா
மிஞ்சும் மெளனம்
ராம்ப்ரசாத்
ஆராதனா எனும் பேய்
ஆறுமுகம் முருகேசன்
அலட்சியக் குறிப்புகள் சில...
ஹேமா(சுவிஸ்)
சில மேகங்கள்
சின்னப்பயல்
ஏவாளைத் தொலைத்த ஆதாமின் இரவு
க.உதயகுமார்
பயண வழியில்.....
உமாமோகன்
தயக்க இலைகள்
ந.பெரியசாமி
சிறுகதை
தூக்கம் நிறைந்த கனவுகள் (சிறுகதை)
வித்யாசாகர்
இந்த வார கருத்துப்படங்கள்
ஆராதனா எனும் பேய்
ஆறுமுகம் முருகேசன்

ஆராதனா எனும் பேய்

1.
மழை விலகிய ஒரு அந்தியில்
உனது கூட்டைவிட்டு வெளியேறுகிறாய்
நிறமற்ற எனது இருப்பில்
பெருமழைக் கர்வமாய் பற்றிக் கொள்ளவென!

2.
உனது பெருங்காதலின் வன்மத்தில்
எனது றெக்கைகளின் குரூரம்
நிலைபடுத்துகிறது
அன்பின் வக்கற்ற சாதுர்யத்தை!

3.
தடங்கள் களவாடிய மழையாய்
என்னிலிருந்து கூட்டிச்செல்கிறாய்
என்னை
உன் பரிச்சயமற்ற வனத்துள் !

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com