முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 5
ராஜ்சிவா
நீண்ட நாள் வாழ்தலின் உயிர் ரகசியம்..?
கிருஷ்ணன் ரஞ்சனா
நகரத்தின் கதை - பாகம் 16
சித்ரா ரமேஷ்
ஒரு நாடகமாக முடிந்த பேரிடர் ஒத்திகை: கூடன்குளத்தில் தெரியும் அரசாங்கத்தின் உண்மையான முகம்
மாயா
சொற்களின் வனம் நடுவே
ஆர்த்தி வேந்தன்
எண்ணங்கள் - 11
நர்சிம்
கவிதை
நானும் பீனிக்ஸ் போல......
ராஜ்சிவா
நிகழ்வின் நிறைவு
வளத்தூர் தி .ராஜேஷ்
பின்தொடர்ந்து படியிறங்கும் நிழல்..
இளங்கோ
எப்படி புரிந்து கொள்வது அன்பினை
தனுஷ்
பொருந்துத‌ல், பொறுத்துத‌ல்
ராம்ப்ரசாத்
நீ அப்பா என அழைத்த நாட்கள் மகளே..
வித்யாசாகர்
மகிழ்மொழி பூப்பெய்தினாள்
ஆறுமுகம் முருகேசன்
கோடு...
ஹேமா
பிரியத்தின் இசை
செ.சுஜாதா
விழலுக்கு இறைத்த நீர்
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
வேகத்தடை
உஷாதீபன்
மகிழ்மொழி பூப்பெய்தினாள்
ஆறுமுகம் முருகேசன்

மகிழ்மொழி பூப்பெய்தினாள்

ஓர் எளிய காற்று விலக்கிய
பைத்தியக்காரனின் மயிரடர்ந்த குறி கண்டு
பயம் பிடித்த சிறுமியின் பால்யத்தை

செடியிலிருந்து ரோஜாவைப்
பிரிப்பதெனப் பிரிக்கிறாள்

பின்,
உதிரத்தின் ரகசியம் குறித்து

அவ்வளவு இயல்பாய்
பதின்மத்தினுள் வயது உதிர்ந்ததை
மகிழ்மொழிக்குப் புன்கண்ணீரோடு
புரிய வைக்கிறாள் என் தாய்!இருப்பு


ஒரு பசித்த அந்தியில்
காத்திருப்பை உண்டுக்கொண்டிருந்தேன், 

ஒற்றை மென் புன்னகையில்

வானளவு அந்தியை
அத்தனை சாதாரணமாய்
விழுங்கி
இயல்பாக்குகிறாய் வாழ்தலின் கோடையை! 

அழைப்பு

துண்டு துண்டாக வெட்டி வைத்திருக்கிறேன்
வெயிலுக்கு முன்
எடுத்துப் போ
ஈரம் சுடரும் முத்தத்தை! 


அந்தரப்பூச்சி

விலைமகளின் விலக்கு நாட்கள்
ஏனோ ஞாபகத்தில்,
 
ஓர் அர்த்தம் கொண்ட

ஓர் அபத்தம் நிறைந்த
ஒரு கவிதையை
எழுத முயன்று பாதியிலேயே
தோற்றுப்போகும் பொழுது! 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com