முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அயல் பசி - 17
ஷாநவாஸ்
நகரத்தின் கதை - 22
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் -17
நர்சிம்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 11
ராஜ்சிவா
அழித்தல் கடவுளின் யுகம்
மாயா
கொஞ்சம் டேஸ்டியாய்.........கொஞ்சம் ஹெல்தியாய்....
கே. பத்மலக்ஷ்மி.
கவிதை
நீங்கள் யார் ?
சின்னப்பயல்
அறுதி
வளத்தூர் தி. ராஜேஷ்
இளைப்பாறும் நிழல்களில் பழுக்கும் முரண் இலைகள்..
இளங்கோ
முத்தம் என்பது முத்தம் மட்டுமல்ல
செ.சுஜாதா
தனியாத வேட்கை
ராம்ப்ரசாத்
இருந்திருந்தும்
ஆறுமுகம் முருகேசன்
சிறுகதை
"அடடா…!"
உஷாதீபன்
இருந்திருந்தும்
ஆறுமுகம் முருகேசன்

இருந்திருந்தும் 

யாதொரு பார்வைக்கும்
 
அது  
 
ரோஜா இதழாக இல்லாமல் போவதை
 
அறிந்திருந்தும்
 

தேவதையின் சாத்தான் நிரம்ப விளம்பும்
 
ஆசிர்வாதம் பெற்றவன் நானென்பதில்
 
மிகுகர்வம் கொண்டு உக்கிரத்தாண்டவம் பூண்டு
 
வியாபிக்கும் நமது காதலின்
 
நகக்கண் உபயோகித்து
 
ஒரு மெல்லிய ரோஜா இதழை
 
வரைந்து பார்க்கிறோம்


ஆலயத்து வௌவாலின் கூக்குரலோடு
நம்மை உண்ணக் காத்திருக்கிறது 
பாசிப்படர்ந்ததொரு பெரும் பாறை
வர்ணங்கள் பூசப்பட்டிருக்கும் பாவனை 
 
கவிதைக்குள் அழைத்துப் போகிறாய்

அல்லது 
அழைப்பதுபோல் பாவனை செய்கிறாய்
 

நீ பூசியிருக்கும்
  
உன் மனைவிக்கும் மகனுக்குமான
 
வேதனைக்கும் அன்பிற்கும் நடுவில்
 
எட்டிப்பார்க்கும் என்னை


சொற்ப நொடிகளில் வெளியேற்றுகிறாய்

பின்  
மிகுசிரத்தையோடு ஒரு துரோகத்தை அழிக்க

மெனக்கெடுகிறாய்

இன்னும் நான் முழுமையாக உள்ளிருந்து 
புறப்படவில்லை என்பது
 
வாய்ப்பில்லைதான் நீ அறிந்திருக்க
அன்பே
 

மேலும் சொல்வதற்கென்றால்
 
இத்தருணம் என்னோடு இல்லாத என்னை

கத்தி போன்ற உனதன்பு கொண்டு
மெல்லிய புன்னகை செய்து 
விளையாட்டாக நகர்கிறாய்


நான் நின்ற இடத்திலிருந்தே
உன்னை வாழ்த்துகிறேன்
என்னைத் தீர்த்து

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com