முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சின்னவனைச் சுழற்றியெடுக்கும் 'சுழிக் காற்று'
எம். ரிஷான் ஷெரீப்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (16)
ராஜ்சிவா
நகரத்தின் கதை: பாகம் 27
சித்ரா ரமேஷ்
அயல் பசி-22
ஷாநவாஸ்
கார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
சின்னப்பயல்
எண்ணங்கள் 22
நர்சிம்
கவிதை
சில வேளைகள்
ஷம்மி முத்துவேல்
இரவுக்கான நிழல்
வளத்தூர் தி.ராஜேஷ்
நகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..
இளங்கோ
சொல்லிவிடமுடியாத கோடை
ஆறுமுகம் முருகேசன்
இன்னும் ஒரு பகல்
வருணன்
ஆசுவாசம்
செ.சுஜாதா
ஏதுவாக
சின்னப்பயல்
கடைசி நாள் காப்புக்கட்டு
பாலகுரு முரளிதரன்
என்னின் ஓவியம்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
சிறுகதை
கண்களைத்திற கண்மணி
ராம்ப்ரசாத் சென்னை
"முடிச்சு"
உஷாதீபன்
சொல்லிவிடமுடியாத கோடை
ஆறுமுகம் முருகேசன்

சொல்லிவிடமுடியாத கோடை

ஒரு சொல்லிவிடமுடியாத கோடையைப்
பார்வையில் செருகி விரைபவளிடம்
என்ன சொல்லியிருக்கக் கூடும்
மழை நின்ற இம்-மரத்தின் கிளை?

வெயில் குடித்த குடியை
ரோட்டோரத்தில்
சிறுநீராக நனைத்துக்கொண்டிருந்தவனிடம்
நான் எதுவும் சொல்லவுமில்லை
கேட்கவுமில்லை

******

தொலையும் வனம் ஒழுகும் கடல்

பால்காம்புகளில்
ரிதம் மீளும் உதடுகளை
அபரிமிதமாய் அமிழ்த்தி அமிழ்த்திக்
கொல்கிறாய்

நீ யாரென முன் நின்று
பரிசுத்தமாய் அழத் துவங்குகிறாய்
கலைந்த மயிர்கள் அள்ளி

பிரியத்தின் நகம் கீறி புன்னகைக்கிறாய்,

வியாபிக்கும் அன்பு
கருணையற்று வலிக்கிறது

******

ஆமென்

பசித்த நாக்கை வெட்டி வீசத்
துரத்துகிறீர்கள்

 

பொறுமையாக
குடில் செய்துகொண்டிருக்கிறேன் நான்

நாய் தொப்பலாக மழையில் நனைந்துள்ளது

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com