முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
எம். எஃப். ஹுசேன்: வெறுப்பின் வேர்கள்
வாஸந்தி
ஏன் எமது சினிமா சாகிறது?
சுதேசமித்திரன்
திருமணம் என்ற பந்தம்
ந. முருகேசபாண்டியன்
போதகனிடம் திருடனின் கேள்வி
சி.வி. பாலகிருஷ்ணன்
மெல்லினமும் வல்லினமும்
அ.ராமசாமி
நிழல் உலகின் நிஜங்கள்
வா. மணிகண்டன்
நாகரிகத்திற்கான பெரும் போர் - ராபர்ட் பிஸ்க் பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது
மின் வெட்டு: இருளும் உண்மையின் வெளிச்சமும்
சஞ்சித்
அமிதாப் பச்சனும் பானி பூரி விற்பவனும்
மனோஜ்
இலக்கியப் பரிந்துரைகள்
சுகுமாரன்
தி.நகர்: மரணத்தின் வாசலில் ஷாப்பிங்
மாயா
கவிதை
கடவுளும் இன்ன பிற
இலக்குவண்
மழை இரவின் கதை
றஞ்சினி
பாண்டித்துரை கவிதைகள்
பாண்டித்துரை
அறிவுநிதி கவிதைகள்
அறிவுநிதி
உயிரின் கடைசித் துகள்கள்
ந. லக்ஷ்மி சாகம்பரி
நீல நிறக் கனவு
கார்த்திகா
மணிமொழி கவிதைகள்
மணிமொழி
சிறுகதை
சிறுகதை: நித்யாவும் நானும்
கென்
சிறுகதை: நோக்கம்
தமிழ்மகன்
இந்த வார கருத்துப் படம்
ஆஹா! வெற்றி!!
பாபுஜி
சுமைகள்
பாபுஜி
பொது
ஹைக் கூ வரிசை
ஆலன் ஸ்பென்ஸ்
வாய்மொழி வரலாறு: நாட்டார் தரவுகளில் சுதந்திரப் போராட்டச் சுவடுகள்
கழனியூரன்.
அறிவிப்புகள்
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்-மாத இதழ்
வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்
சிறுகதை
பழமொழிகளும் சொலவடைகளும்
கழனியூரான்
கடிதங்கள்
கங்காணி
திங்களிதழ்
கடித இலக்கியம்
அன்புடன் கல்யாண்ஜி
வண்ணதாசன் தி.க.சிக்கு எழுதியது
சிறுகதை
எங்கே போகிறோம்
புது நூல் அறிமுகம்
நிகழ்வுகள்
"தமிழ் தனித்து இயங்காது"
'தொல்காப்பியம் - பொருளுரை' நூல் வெளியீட்டு விழா
குகனின் நடைபாதையில் கொஞ்ச நேரம்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
uyirosai@uyirmmai.com
குகனின் நடைபாதையில் கொஞ்ச நேரம்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

புதுக்கவிதை வந்துவிட்ட பிறகு கவிஞராவது எளிதாகிவிட்டது. பெயருக்கு முன்னால் கவிஞர் என்று போட்டுக் கொண்டு, வாக்கியங்களை உடைத்து எழுதினால் போதும். புத்தகம் வெளியிடுவதும் முன்பு போல ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குகிற மாதிரி பெரிய விஷயமாக இல்லாமல் எளிதாகிக் கொண்டுதான் வருகிறது.

‘அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்-பெரம்பூர்ப் பகுதி’ கடந்த 14.09.08 அன்று மாலை எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள ‘இக்சா மையத்தில்’ குகன் எழுதிய நடைபாதை என்ற சிறுகதைத் தொகுப்பை சங்கத் தலைவரும், இலக்கிய பீடம் மாத இதழின் ஆசிரியருமான கலைமாமணி. விக்கிரமன் மூலம் சீட்டுகளை வரிசையாக அடுக்குவது போல மூன்று புத்தகங்களைப் பூ மாதிரி விரித்து (ஃபோட்டோ எஃபெக்ட்டுக்காக) வெளியிட, புத்தகத்தைப் பெற வேண்டியவர் வராததால், திடீர் விருந்தினரான அரிமா ராஜரத்னம் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். பதிப்பாளர் மயில வேலனுக்கும் ஒரு பிரதி கொடுத்ததும் நன்றாகத்தானிருந்தது.

மாலை 5.55க்கு (என்ன ஒரு ஃபேன்சி நம்பர்!) மினி டிபனோடு துவங்கிய நிகழ்ச்சியில் மேடையின் பின்னணியில், பேனரில் ஒரு பக்கமாகத் திரும்பி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த எழுத்தாளர் குகனைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.

வறுமையும், வெறுமையும் வாழ்க்கையாகிப் போன தமிழ் எழுத்தாளர்கள்... எக்ஸ்கியூட்டிவ் லுக்கிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சாரு நிவேதிதா போன்றவர்கள் டிஸைன் ஷர்ட், ஜீன்ஸ், காதில்  கம்மல் என்று லயோலா, நியூ காலேஜ் இளசுகளின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவது இன்னும் ஸ்பெஷல். பாரதியைப் போல “எமக்குத் தொழில் கவிதை” என்று கம்பீரமாக கர்ஜித்தால் இறுதி ஊர்வலத்தில் நான்கு பேர்தான் வருவார்கள் என்பது தெரிந்து, காதலிக்க ஒருவர், கல்யாணத்திற்கு வேறொருவர் என்ற ஃபார்முலாவில், பிழைக்க ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு... பொழுதுபோக்காகவோ அல்லது ஆத்மதிருப்திக்காகவோ எழுதுவது தவிர்க்க இயலாத தமிழ்ச்சூழல்.

பணத்தைத் துரத்தும் ‘எந்திரன்’களாகி விட்ட மென்பொருள் ஆசாமிகளுக்குள்ளும், ஈரமான... இலக்கிய மனப்பான்மை இருப்பதை வெளிக் கொண்டு வந்த பெருமை Blog spot க்கு உண்டு.

இணையத் தள எழுத்தாளராக Blog spotல் எழுதிய குகனது 24 சிறுகதைகளின் தொகுப்புதான் நடைபாதை.

B.E.,M.B.A.,முடித்துவிட்டு ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் அஸோஸியேட் கன்ஸல்டண்டாகப் பணிபுரியும் கு. கண்ணன் என்ற குகன் (short cut), “கம்பெனி பேர் வேணாம்” எனக் கவனமாகத் தவிர்க்கிறார். அவர் சொன்னாலும் நாம் எழுதப் போவதில்லை. நாம் எழுதினாலும் எடிட்டோரியலில் விடப் போவதில்லை.

நிகழ்ச்சியில் ‘முத்தாய்ப்பாக’ இருந்திருக்க வேண்டிய கவியரங்கம், சென்னைத் தமிழில் சொல்லப் போனால் ‘சத்தாய்ப்பாக’ ஆகிவிட்டது.

“நாம் வேறு வேறு செய்கிறோம். ஆனால் மழை... மழையை மட்டும்!” என்ற கல்யாண்ஜியின் கவிதையைப் போல், நிகழ்ச்சியின் இடைவேளையாக அவரவர் வேலையைச் செய்யும் வாய்ப்பை கவிஞர்கள் பெருமையோடு வழங்கினார்கள். எந்த உணர்வுமின்றிச் செய்தி வாசிப்பதைப் போல இருந்த கவிதை(?)களில்...    

ஸ்ரீராம் என்ற இளைஞர் ஒருவர் மட்டும், 24 வரிகள் சொல்லலாம் என்ற அதிகார துஷ்பிரயோகத்தைக் கைவிட்டு, சுமார் பத்து வரிகளில் தன்னம்பிக்கைக் கவிதையை கவிதையாகச் சொன்னார். ஆனால் பரிசு வேறொருவருக்கு. அவர் பெயரும் ஞாபகமில்லை. அவரது கவிதையும் கடைசி வரை ஞாபகத்திற்கு வரவில்லை.

பொன்னாடை போர்த்துவது, முகஸ்துதி பாடுவது போன்ற நிகழ்ச்சிக்கான இலக்கணங்கள் சரியாக நடந்தது.

விழாவில் பேசிய சிறப்புப் பேச்சாளர்களைவிட தொகுத்து வழங்கிய கவிஞர். சோலை தமிழினியனின் பேச்சு சமயோசிதமாகவும், சுவராஸ்யமானதாகவும் இருந்தது. (ஆங்கிலப் பேராசிரியருக்கு இப்படி ஒரு தமிழ்ப் பெயரா?!)

வெலவெலப்பான நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கியது வாழ்த்துரை வழங்கிய இதயகீதம் ராமானுஜம் பேச்சு. “எழுத்தாளர்களுக்கு மோதிரம் போடணும்னு ஒரு ஆசை... ஆனா மார்வாடிக்காரங்களுக்கும், எனக்கும் செட்டாகாததால நேரா ஜவுளிக்கடைக்குப் போய் ஒரு பொன்னாடை வாங்கிட்டு வந்தேன்” என்ற கமெண்டுக்கு அரங்கம் அதிர்ந்தது. (“அப்படின்னா நான் வாரம் ஒரு புத்தகம் போடுறேன்”  என்றார் தமிழினியன்)

புகழ்ந்தே ஆளைக் காலி பண்ணுகிற வேலையைச் செய்யாமல், “உங்கள் கதையில் வர்ணனையே இல்லை. ஒரு கவிஞர் சிறுகதை எழுதும்போது... அதில் நாங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். நாடகத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்” எனப் பகிரங்கமாகச் சொன்னார். போர்த்திய பொன்னாடையை எடுக்காமலேயே பேசிய அவரை “குமரி அனந்தன்” என விக்கிரமன் வர்ணித்தது மறுபடியும் அரங்கத்தை அதிர வைத்தது.

நூலைத் திறனாய்வு செய்த அண்ணா ஆதர்ஷ் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் கஸ்தூரி ராசா (s/o தனுஷ், செல்வராகவன் & co அல்ல.) ஒவ்வொரு கதையைப்பற்றியும், குறிப்பாக ‘மனசாட்சி’ என்ற சிறுகதையைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னார்.

ஊறிய காய், ஊறும் காய், ஊறப்போகும் காய் என்ற வினைத்தொகையோடு ஒப்பிட்டு... ‘நடைபாதை’ என்ற தலைப்பை முக்காலத்திற்கும் நிற்கும் தலைப்பு என்றது நல்ல வர்ணனை. எழுத்தாளன் சமூக சிந்தனையோடு இருக்க வேண்டும். அந்தச் சமூக சிந்தனை உங்களிடம் இருக்கிறது. ஆனால், போதுமான வர்ணனை இல்லை. சிறுகதை என்பது குதிரைப் பந்தயம் போல முடிவு தெரியாததாக இருக்க வேண்டும்.     அதனால் இதற்கு 100க்கு 99 மார்க்தான் தருவேன். இந்தத் தவறுகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்ற வேண்டுகோளோடு முடித்தார்.

வாழ்த்துரை வழங்கிய கவிஞர் துருவன் “குகன் என் மாணவன்”  எனப் பெருமையோடு சொல்லிக்  கொண்டார்.

தலைமையுரையாற்றிய விக்கிரமன் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் என்றார்.

“ஒன்று, இன்று குகனுடைய பெற்றோரின் 28வது திருமண நாள் விழா. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்  தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்... தந்தையும் கூட!

இரண்டாவது காரணம், இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அடிப்படையில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன். ‘சிறுகதை சேக்கிழார்’ என்ற பட்டம் எனக்கு உண்டு. 1942ல் முதல் சிறுகதை எழுதிய போது எனக்கு வயது 14. சிறுகதை எழுத்திலக்கியத்தில் முக்கியமான இரண்டாவது வடிவம். முதலில் கவிதை” என்றார்.

விக்கிரமன் பேச்சில் Break the rules என்ற ஃபார்முலா தென்பட்டது கவனிக்கத்தக்கது.

“சிறுகதைக்கு வர்ணனை தேவையில்லை. திருக்குறளுக்கு வர்ணனை உண்டா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“இலக்கிய நிகழ்ச்சிக்குக் கூட்டம் தேவையில்லை” என ஆவேசமாகிறார்.

“தமிழைவிட மற்ற மொழிகளின் இலக்கியங்கள் பெரிதல்ல” என முன்னே பேசியவர்களின் பேச்சை மறுக்கிறார்.

தமிழரல்லாதவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருந்ததை சுரதா முதல் நா. காமராசன் வரை பட்டியலிடுகிறார். (குகன் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்).

“குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் குற்றம் காண்பது அவர்களது உற்சாகத்தைக் குறைத்துவிடும். க், ச் சரியாக இல்லை. ஒருமை, பன்மை இல்லை போன்றதைக் கைவிட வேண்டும்” என்று முடித்தார்.

நிறைவாக 2 நிமிஷத்துக்கு மேல் பேச மாட்டேன் என்ற முன்னுரையோடு 6 நிமிஷத்துக்கு மேல் ஏற்புரை வழங்கிய குகன், சிறுகதைத் தொகுப்புக்கு Library order கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இதை வெளியிடுகிறோம் என்று தனது M.B.A புத்தியை மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று குகனின் மனைவியைப்பற்றி விக்கிரமன் சொன்ன வார்த்தைக்கு... “என் குழந்தைக்கே நான் பார்ட் டைம் அப்பாவாதான் இருக்கேன். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை” என வருத்தத்தோடு கூறினார்.

நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடலுடன் முடித்தது வித்தியாசம்.

விடைபெறும் வேளையில் குகன், ‘ஞான தேஷிஹன்’ புனை பெயரா என்கிறார் நம்மிடம். தமிழில் எழுதுவதற்கான பொதுவான விதிகளில் ஒன்றாகிவிட்டது புனைபெயரில் எழுதுவது. கவியரங்கத்தில் கவிதைக்கான பரிசு கொடுத்தவரின் பெயர் பகீரதன். (பெயரே திகீரென்றிருக்கிறது.) நன்றியுரையாளரின் பெயர் பேரம்பலவாணன். பேர் அம்பலவாணன் அல்ல. பெயரே பேரம்பலவாணன்.  M.Phil., பண்ணுகிற புண்ணியவான்கள் யாராவது தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களை ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும்.

இக்சா மையத்திலிருந்து வெளியேறுகிற போது அவரது சிறுகதைத் தொகுப்பைப் புரட்டியவரை சொல்லிக்கொள்கிற மாதிரியோ, சுவராஸ்யமாகவோ ஒன்றும் நமக்குப் பிடிபடாவிட்டாலும்,

குகனின் தாய்மொழி கடந்த தமிழார்வமும்...

தொழில் கடந்த இலக்கிய ரசனையும்...

வயதுகடந்த பெற்றோர் மீதான பக்தியும்... ஒரு தனி விழாவில் பாராட்டத்தக்கதாகவே தோன்றியது.

தொகுப்பு: ஞான தேஷிஹன்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com