உயிர்மை - மே 2009
 
மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள்?
- மனுஷ்ய புத்திரன்
தேர்தல் - 2009 திராவிடக் கட்சிகள் உருவாக்கும் கானல் நீர் அரசியல்
- மாயா
ஐ.பி.எல் : நவீன கிரிக்கெட்டின் அசுரக் குழந்தை
- ஆர்.அபிலாஷ்
'இப்போது நான் அன்பின் தூய்மை'
- சுகுமாரன்
குருதி கசியும் பனிநிலம் : ரோஜா முதல் தஹான் வரை
- யமுனா ராஜேந்திரன்
அமெரிக்காவின் தவறான புரிதலுக்கு என்ன காரணம்
- பி.சாய்நாத்
தேர்தல் - 1946 "மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு"
- எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சமநிலையைக் குலைக்கும் சமன்பாடுகள்
- சுப்ரபாரதிமணியன்
சுந்தர ராமசாமி : நினைவின் கதவுகளைத் திறந்து பார்கிறேன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
மனதில் புகுந்தது மா மத யானை
- பிரபஞ்சன்
அதிர்ஷ்டத்தின் வருகை
- மனுஷ்யபுத்திரன்
வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி - 16.04.2009
- மனுஷ்யபுத்திரன்
சிநேகிதிகளின் கணவர்கள்
- மனுஷ்யபுத்திரன்
பரஸ்பரம் சில உதவிகள்
- மனுஷ்யபுத்திரன்
கடைசியில் வருத்தமே மிஞ்சியது
- மனுஷ்யபுத்திரன்
யாசிப்பின் திசையெல்லாம்
- புவனராஜன்
பெண்ணாய் உணர்ந்த கணம்
- மகா
மரியா
- த.செல்வசங்கரன்
சிவாஜிகணேசனின் முத்தங்கள்
- இசை
அந்த கணத்தில். . .
- சம்யுக்தா
பங்குப்பணம்
- சுரேஷ்குமார இந்திரஜித்
இனி ஒண்ணையும் மறைச்சு வைக்க முடியாது
- வா.மு.கோமு
யுவன் சந்திரசேகருக்கு ஒரு பதில் - சரியாக இசை கேட்டதன் லட்சணம்
- சாருநிவேதிதா
விட்டுப்போன வார்த்தைகளும் எஞ்சிய நினைவுகளும் - அப்பாஸ் - சி.மணி அஞ்சலிக் கூட்டம்
- லக்ஷ்மி சரவணக்குமார்
சி.மணி 1936-2009 அணை உடைத்த காவிரி
- ஞானக்கூத்தன்
கடிதங்கள்
- -
click here
பரஸ்பரம் சில உதவிகள்
மனுஷ்யபுத்திரன்

நேற்று மாலை பெற்றுக் கொண்ட
ஒரு சிறிய உதவி

இந்த அதிகாலையில்
பளபளக்கும் கண்களால்
உற்றுப் பார்க்கிறது

அது
ஒரு நிபந்தனை
அல்லது கட்டளை

இந்த நாளுக்கான
பசி

இந்த நாளை எங்கிருந்து தொடங்க வேண்டும்
என்ற அறிவித்தல்

ஒரு திருட்டுப் பொருளை
திரும்ப வைப்பது போல
பெற்றுக் கொண்ட ஒரு உதவியை
திரும்ப வைக்க வேண்டும்

ஒரு நன்றியால்
ஒரு புன்னகையால்
அவ்வளவு எளிதாக
அது தீர்க்கப்படுவதில்லை

உதவிகள் காயத்தைப் போல
நினைக்கப்படுகின்றன
அளித்தவர்களாலும்
பெற்றுக்கொண்டவர்களாலும்
சாட்சியாக இருந்தவர்களாலும்

அவை எதிர்பாராத ஒரு தருணத்தில்
சொல்லப்படுகின்றன

நீங்கள் அடிவயிற்றில்
கத்தியால் குத்தப்படுகிறீர்கள்

அல்லது
நிர்வாணமாக
ஒரு ஐஸ்கட்டியின்மீது படுக்க வைக்கப்படுகிறீர்கள்


எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பதற்கு
நமது கலாச்சார வாழ்க்கை
ஏராளமான வழிமுறைகளைக் கற்பித்திருக்கிறது

நமது சிகரெட்டிற்கு
ஒரு தீக்குச்சியைக் கொடுத்தவருக்கு

ஒரு குழப்பமான சந்தியில்
நமக்கு வழி சொன்னவருக்கு

ஒரு கோப்பைத் தேனீரையோ
மதுவையோ
உள்ளன்போடு பகிர்ந்து கொண்டவருக்கு

யாசகமிட்டவருக்கு
யாசிக்கும் கைகளில் முத்தமிட்டவருக்கு

எல்லோருக்குமே
ஏதேனும் ஒரு வழியில்
திரும்பக் கொடுத்துவிடுவது நல்லது

விசுவாசம் நம்மை பிணையக் கைதிகளாக்குகிறது
நன்றியுணர்ச்சிகள் நம்மை உறுதியற்றவர்களாக்குகின்றன
துரோகம் நம்மை நிரந்தரமாகக் கறைப்படுத்துகிறது

ஒரு முறை
ஒரு பறவையைத் தந்துதவியவருக்கு
நான் ஒரு புலி நகத்தைத் திரும்பத் தந்தேன்

என்னிடமிருந்த ஒரு ரகசிய வரைபடத்தைப்
பெற்றுக் கொண்ட ஒருவர்
ஒரு குருதி தோய்ந்த வாளை
எனக்குப் பரிசளித்தார்

பணத்தாலும்
அன்பாலும்
விபச்சாரத்தாலும்
சொற்களாலும்
ஏராளமான உதவிகள்
சுலபமாக திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டன

பரஸ்பர உதவிகளால்
உடனடியாகத் தீர்க்கப்படாதவை
மறுமை நாளில் கேட்கப்படலாம்

ஒரு முறை நீ
உன் மகத்தான காதலால்
என்னை மரணத்திலிருந்து
விடுவித்தாய்

பதிலுக்கு
கடவுள்
உன் முகத்தை எனக்கு
நிரந்தரமாக
மறந்துபோகச் செய்தார்.

*


click here

click here
click here