முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
மதுரையில் உயிரோசை விழா
-
உயிர்மை பதிப்பகம் - உயிரோசை விழா குறித்த தினமணி செய்தி
-
இரு நாடுகள் ஒன்றாக கலக்கப்படுகின்றன
தீபச்செல்வன்
பிரான்சில் என்ன நடக்கிறது?-1: பன்றிக் காய்ச்சல்
நாகரத்தினம் கிருஷ்ணா
கனவாகிப் போகுமோ நம் பாரம்பரிய விவசாயம்?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
அருண் ஷோரிக்கு ஏன் கோபம் வந்தது?
நிஜந்தன்
வெகுஜன எழுத்தின் அவசியம்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
அவருதாம்பா இவரு!
தமிழ்மகன்
பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஓ. . .செகந்திராபாத் - 23
சுப்ரபாரதிமணியன்
நெஞ்சே நெஞ்சே தமிழ் நெஞ்சே!
இந்திரஜித்
கவிதை
நகரத்தான் குறிப்புகள்
லதாமகன்
உதிர்ந்த இலையொன்றை பற்றியதானவை
நளன்
ஜிப்சி
அனுஜன்யா
மித்ரா நேசமித்திரன் கவிதைகள்
மித்ரா நேசமித்திரன்
"சுதந்திரம்" சிறுகுறிப்பு வரைக
உழவன்
மாறி நழுவலாம் மனசு
இர.ஜெ.பிரேம்குமார்
ஒளிந்திருந்த கடவுள்
கார்த்திக் பிரபு
ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை
என்.விநாயக முருகன்
தனித்திருத்தலின் கவிதை
அசரீரி
பலூன்கள் பறக்கும் பள்ளத்தாக்கு
நந்தாகுமாரன்
சிறுகதை
வாரத் தேவை
சூர்யா
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்தவாரக் கருத்துப்படம்
அரசியல் நாகரீகம்
பாபுஜி
வளரும் காங்கிரஸ்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் : ஆர்.அபிலாஷ்
பொது
ஆட்சிப் பொறுப்பில் எலிகள்
-
பிரான்சில் என்ன நடக்கிறது?-1: பன்றிக் காய்ச்சல்
நாகரத்தினம் கிருஷ்ணா

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதென தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார், அதை சொல்ல அவருக்கு எல்லாத்தகுதியுமுண்டு. போகிறபோக்கைப் பார்த்தால் நமது கடவுள்களும் 'மாஸ்க்' அணிவித்துவிடுவார்களோ என்று பயந்தேன். அதுபோலத்தான் நடந்தது. தமிழ் தினசரி ஒன்றில் பன்றிக் காய்ச்சலைப் பற்றிய விழிப்புணர்வினை வற்புறுத்தி, சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களில் சிலர் 'மாஸ்க்' அணிந்த பிள்ளையாராக மாறியிருந்தார்கள். நமது கடவுள்களும் மனிதர்போல சோதனைகளைச் சந்திப்பவர்கள்தானே, கொஞ்சம் எச்சரிக்கையுடனிருப்பது அவர்களுக்கும் நல்லது. மனிதர் காய்ச்சலுக்கே பழகிய நமது கடவுளர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் குறித்து பயப்பட ஒன்றுமில்லைதான். எனினும் இப்போதைக்கு ஸ்டார் வேல்யு உள்ள கடவுள்கள் மாத்திரமல்ல அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்கூட தங்கள் பக்தர்களிடமிருந்து தள்ளியிருப்பது நல்லது. விழாக்கள், பண்டிகைகளை நிறுத்திவைப்பதும் தப்பில்லை.

இங்கே மேற்கத்தியர்களுக்கு பன்றிக் காய்ச்சலைப் பற்றிய அச்சம் கூடுதலாவே இருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர்மாதம் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடவிருப்பதாக பிரான்சு நாடு அறிவித்துள்ளது அந்த அச்சத்தின் எதிரொலிதான். தடுப்பூசியிலும் பள்ளி பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாமென்ற கருத்தும் யோசனையிலிருக்கிறது. அவர்களிடமிருந்து தொடங்கப்படும் எந்த முயற்சிக்கும் பலனுண்டு என்பது அமெரிக்க ஆய்வின் முடிவில் பெற்ற உபயோகமான தகவல். வெள்ளத்திற்கு அணைபோடவேண்டுமென்பதில் யாருக்குத்தான் அக்கறையில்லை. ஆனால் மேற்கத்தியர்கள் வெள்ளம் வரும் முன் அணை போடுபவர்கள்.

எதிர்வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் பள்ளிகளையும், கல்விக்கூடங்களையுங்கூட பன்றி காய்ச்சல் காரணமாக மூடவேண்டிவருமோ என்ற கோணத்திலும் பிரான்சு அரசாங்கம் சிந்திக்கப்போக, நாட்டின் கல்விக் கூடங்களில் புழங்கும் சுமார் ஒருகோடியே இருபது லட்சம் மாணர்களையும் தொலைக்காட்சி பெட்டிகள் முன் உட்காரவைத்துவிடலாம் என்பது அரசு எடுத்துள்ள முடிவு. நீங்கள் விபரீதமாக எதையும் கற்பனை செய்துகொள்ளவேண்டாம், ஏனெனில் ஆளுங்கட்சிக்குச் சொந்தமாக இங்கே தொலைகாட்சி நிறுவனங்களென்று எதுவுமில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகளில் பெரும்பாலும் நேர்மை இருக்கும். ஒன்றிரண்டு தவறுகள் நிகழலாம், எதிர்பாராமல் திட்டங்கள் பொய்த்துப் போகலாம். மக்கள் நலனுக்கு எதிராக இயங்கமாட்டார்களென்பது திண்ணம். அரசாங்கத்தின் நோக்கம் மாணவர்களை தொலைக்காட்சி, மற்றும் வானொலி பெட்டிகளுக்கு ரசிகர்களாக மாற்றுவதில்லை. பன்றிக்காய்ச்சலை முன்னிட்டு பள்ளிகளையும், கல்லூரிகளையும், பல்கலைகழகங்களையும், இதரக் கல்வி கூடங்களையும் மூட நேரிட்டால், வீட்டிலிருக்கும் நாட்களில் மாணவர்களின் கல்விநலன் பாதித்திடாமல் தொலைகாட்சி, வானொலி ஊடகங்களைக் கொண்டு கல்விச் சேவையைத் தொடர்வதென்பது அரசாங்கத்தின் மாற்று திட்டம். அப்படியொரு மோசமான நெருக்கடியைப் பிரான்சுநாடு சந்திக்குமென்று தோன்றவில்லை. இப்போதைய சூழலில் அப்படியானதொரு நெருக்கடிக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். எனினும் இங்குள்ள அரசு எத்தகைய சிக்கலையும் சந்திக்கவல்ல அரசாக உள்ளது. பறவைக் காய்ச்சல் பரவலாக உலகை அச்சுறுத்திய காலத்தில் உருவானது மேற்சொல்லப்பட்ட திட்டம் என்கிறார்கள். கலை, இலக்கியம் அறிவுச் சேவைக்கென்று புகழ்பெற்றிருக்கும், France 5 என்ற தொலைக்காட்சியின் சேவையையும், France Culture என்ற வானொலியின் சேவையையும் இதற்கென உபயோகித்துக்கொள்ள தீர்மானித்து நேர அட்டவணைகளெல்லாங்கூட தயாரித்திருக்கிறார்கள். காலையில் 8மணியிலிருந்து 9 மணிவரை ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், காலை 10.30லிருந்து 12 மணிவரை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 2.40லிருந்து 5.50வரை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குமென அரசு வெளியிட்டுள்ள ஆணையில் வாசித்துக்கொண்டு போகலாம். இந்நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும்? வகுப்பில் சொல்லவேண்டியதை ஆசிரியர்கள் தொலைக்காட்சிகளில் சொல்லிக்கொண்டிருப்பார்களா என்ற கேள்விக்கு, போதனாமுறைகளுக்கான வழிவகைகளை கண்டுதவும் பிரெஞ்சு அரசின் Centre national de documentation pedagogique அமைப்பின் பொறுப்பாளரான அஜ்னேஸ் ஸெர்வெட்ஸ் என்பவர், 'வகுப்பறை போதனாமுறையைத் தவிர்த்து, செயல்வழி கற்றல் முறையில் ஊடகக் கல்விமுறை இருக்குமென்றும்; உபகரணங்கள், தாயாரிக்கப்பட்ட காட்சிகள் போன்றவை போதனாமுறைக்குதவுமென்றும் கூறுகிறார். அடுத்து ஆசிரியர்களுடன் நடிகர்களும் ஊடக நிகழ்ச்சி நடத்துனர்களுங்கூட இதற்கென பயன்படுத்திக்கொள்ளப்படுவார்களென தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில் தற்போது நூறு ஆசிரியர்கள் அதே எண்ணிக்கையில் கல்வி நிபுணர்கள், பெற்றோர் சங்கத்தின் பிரதிநிதிகள், ஊடகக் கலைஞர்கள் எனப் பலரின் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு பிரான்சு அரசு ஒதுக்கி இருக்கும் தொகை இரண்டு மில்லியன் யூரோ. சம்பந்தப்பட்ட பிரெஞ்சு கல்வி அமைச்சர் லுய்க் ஷத்தெல், "திட்டத்தின் நோக்கம், கல்வி நிறுவனங்களுக்கு மாற்றுவழி காண்பதல்ல, அவற்றின் உபயோகத்திற்கு நெருக்கடிகள் வருகிறபோது, அவை அளிக்கும் சேவையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட தற்காலிக திட்டம்", என்கிறார்.

பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை மாத்திரமில்லை, வியாபாரத்தையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இணைய தளங்களில் கடந்த பல மாதங்களாக H1N1 தொற்று கிருமிகளை நம்பி கணஜோராக வியாபாரம் நடக்கின்றது, தாயத்தைத் தவிர எல்லா வழிமுறைகளும் இருக்கின்றன. வயாகராவைக்காட்டிலும், தமிஃப்ளூ(Tamiflu) வின் விற்பனை பலமடங்கு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். பத்து வில்லைகள் அடங்கிய தமிஃப்ளூ மாத்திரைப் பையொன்று பிரான்சு நாட்டில் 25 யூரோவென்றால் கனடாவைச்சேர்ந்த மருந்து நிறுவனமொன்று இணையதளத்தில் 90 யூரோவுக்கு(130 டாலர்கள்) விற்கிறது. அப்படி விற்கப்படுகிற மாத்திரைகளும் போலிமாத்திரைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். EAASSM என்ற ஐரோப்பிய அமைப்பொன்று அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் பத்து விற்பனையில், ஆறு போலியானவையாக இருக்கமுடியுமென்கிறது. பன்றிக்காய்ச்சலுக்கான உபகரணங்கள் விற்பதிலும் கொள்ளை அடிக்கிறார்கள். கையுறைகள், மாஸ்க்குகள், கிருமிநாசினிகள் என விற்கப்படுகின்ற பெரும்பாலான பொருட்கள் போலியானவை. லாட்ஜ் புகழ் இந்திய வைத்திய ரத்தினங்கள் இப்போது பன்றிகாய்ச்சலுக்கும் மருந்துகொடுப்பதாக விளம்பரமொன்றில் படித்தேன். புதுச்சேரி தொடங்கி சென்னையிலுங்கூட மாஸ்க் விற்பனையாளர்களைப் பார்க்க முடிந்தது. யார் தயாரித்தார்கள், எப்படி தயாரித்தார்கள், அவற்றின் நம்பகத்தன்மையென்ன கேள்விகள் இல்லை, ஆர்வத்துடன் ஒரு சிலர் வாங்கிச்சென்றார்கள், கால்களை மாற்றிமாற்றிபோட்டு தவித்தபடி நின்று கையேந்தி பவன்களில் பசியாறும் கோழி மனிதர்களைப்போல.

Times of India தன்னுடைய ஆகஸ்டு 13 இதழில் பன்றிகாய்ச்சலை தடுப்பதற்கான பத்து வழிமுறைகளைத் தன் பங்கிறகுச் சொல்லியிருக்கிறது. துளசி, கற்பூரம், பூண்டு என்று நீளும் அப்பட்டியலில், கைகளை அடிக்கடி சோப்புகொண்டு கழுவவேண்டும் என்ற மிகவும் அத்தியாவசியமாக கடைபிடிக்கவேண்டிய ஒன்றை பத்தாவதாக இடத்தில் வைத்திருந்தது ஆச்சரியம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com