பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத் 5
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.

எங்கள் ஊரில் ஒரு குளம் இருக்கிறது. இரண்டு காதல் பறவைகள் அந்தக் குளத்தில் ஆனந்தமாக நீந்திக்கொண்டிருக்கின்றன.

ஆனந்தமாக நீந்திக்கொண்டிருக்கிற அந்தக் காதல் பறவைகளுக்கு முன்னால் ஒரு தாமரைப் பூ அழகாகப் பூத்துக்கொண்டிருக்கிறது.

அந்தப் பெண் பறவையின் கணவன் கொஞ்சம் அவளை முந்திப் போகிறான்.

அவர்களை ஒரு தாமரைப் பூ பிரிக்கிறது.

அந்தப் பெண் பறவை அவள் கணவனைத் தேடுகிறது.

அவள் கண்ணுக்கு அவள் கணவன் தென்படவில்லை.

அவளைவிட கொஞ்சம் முன்னால்போன அவள் கணவனை அந்தத் தாமரைப்பூ அவள் கண்ணுக்குத் தெரியாதபடி மறைத்துக் கொண்டிருந்தது.

அது கொஞ்சம் நேரம்தான்.

அந்தக் கொஞ்சம் நேரத்தில் அந்தப் பெண் பறவை அவள் கணவனைக் காணாமல் பதறி துடித்துப் போய்விட்டது.

-சிறைக்குடி ஆந்தையார்
குறுந்தொகை 57