கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. 5

ஒரு பெரிய மரம்.

ஒரு பெரிய யானை அந்தப் பெரிய மரத்தில் ஒரு கிளையைப் பிடித்து வளைக்கிறது.

அந்தக் கிளை வளைந்து ஒடிகிறது.

ஒடிந்த அந்தக் கிளை கீழே விழுந்துவிடாமல் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது நாறும், பட்டையும்.

ஒடிந்த அந்தக் கிளை காயவில்லை.

ஒடிந்த அந்தக் கிளைக்கு இன்னும் உயிர் இருக்கிறது.

ஆலத்தூர் கிழார்
குறுந்தொகை 112