பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும் 5
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

 

பார்ப்பன மகனே..

பார்ப்பன மகனே..

விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே..

உங்களுக்கு உரியது எது?

ஒரு கமண்டலம்..

ஒரு கம்பு..

நான்கு வேதங்கள்..

பார்ப்பன மகனே..

உங்கள் நான்கு வேதங்களுக்கும் எழுத்துக்கள் இல்லை. நீங்கள் மனப்பாடம் செய்து உங்கள் வேதங்களை உங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள்.

உங்கள் வேதங்களில் ஆற்றல்மிக்க மந்திரங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள்.

என் காம நோயை உங்கள் மந்திரங்களால் தீர்த்துவைக்க முடியுமா?

உங்கள் மந்திரங்கள் என் காம நோயைத் தீர்த்துவைக்காது. என் காம நோயை என் தலைவியால்தான் தீர்த்து வைக்க முடியும்.

-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
குறுந்தொகை 156