தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.

ஒரு பெரிய கடல்.

அந்தப் பெரிய கடல்கரையில் நாரைகள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றன. அந்த நாரைகளின் இறகுகள் வெள்ளை வெளேர் என்று அழகாக இருக்கிறது.

அந்தப் பெரிய கடல் இன்று கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. அலைகள் கோபத்தோடு சீறிக்கொண்டு உயரமாக எழும்புகின்றன. பெரியபெரிய அந்தப் பேரலைகள் வேகமாக எழும்பி கரையில் வேகமாக வந்து மோதுகிறது. கரைக்கு வருகிற அந்தப் பேரலைகள் மீன்களைக் கரைக்குக் கொண்டு வரவே இல்லை.

அந்த நாரைகள் இன்று இந்தப் பெரிய கடலில் மீன்பிடிக்க முடியாது என்று புரிந்துகொள்கின்றன. அந்த நாரைகள் அயரை மீன்களைத் தேடி ஊர்க்காட்டில் இருக்கிற ஒரு பெரிய குளத்துக்குப் போகலாம் என்று முடிவெடுக்கின்றன.

வானவெளியில் வரிசையாகப் பறந்து போய்க்கொண்டிருக்கிறது. அந்தப் பெரிய நாரைக்கூட்டம்.

கூடலூர் கிழார்
குறுந்தொகை 166