சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும்புல வாகி 5
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.

ஒரு பாலைவனத்தில் ஒரு ஆண் யானை தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கிறது. அந்த ஆண் யானைக்கு இரண்டு அழகான தந்தங்கள் இருக்கிறது. அந்த ஆண் யானை தன்னுடைய தந்தங்களைக் கொண்டு ஒரு பெரிய கல்மலை மேல் குத்துகிறது. அந்த யானையின் இரண்டு தந்தங்களும் உடைந்து விழுகிறது.

வெள்ளி வீதியார்
குறுந்தொகை 169