தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுன் மாலை
எமிய மாக ஈங்குத் துறந்தோர்
தமிய ராக இனியர் கொல்லோ
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த 5
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.

 

எங்கள் ஊரைச் சுற்றி ஏழு ஊர் இருக்கிறது.

இந்த ஏழு ஊர்களிலும் கொல்லுப்பட்டரைகள் இல்லை. ஒரேஒரு கொல்லுப்பட்டரை எங்கள் ஊரில் இருக்கிறது.

இந்த ஒரு கொல்லுப்பட்டரையில் தான் ஏழு ஊர். வேலையும் நடக்கிறது.ஏழு ஊர் வேலையும் ஒரு கொல்லுப்பட்டரையில் நடப்பதால் பெருசாருக்கு துருத்தி.

கச்சிப்பேட்டு நன்நாகையார்
குறுந்தொகை 172