அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் 5
கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.

ஒரு இளைஞன்.

அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.

அவளிடம் அவன் பேசும்போது அவன் நெஞ்சு நடுங்கியது.

காதலத்தவளையே அவன் திருமணம் செய்துகொண்டான்.

திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவியின் மார்பில் தலை வைத்துப் படுத்திருக்கிறான். இப்போதும் அவன் நெஞ்சு நடுங்குவதை நிறுத்தவில்லை.

நெடும் பல்லியத்தையார்
குறுந்தொகை 178