பாடல்: 37 நசைபெரிது

பாலை – தோழி கூற்று

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

என்பது, தோழி கடிது வருவாரென்று ஆற்றுவித்தது.

 

ஒரு பெரிய பாலைவனம்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு யாம் மரம் இருக்கிறது.

இரண்டு யானைகள் அந்த மரத்துக்கு ஓடிஓடி வந்துகொண்டிருக்கிறது. பசியோடும் தாகத்தோடும் அந்த யானைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆண் யானை தன்னுடைய பெரிய தும்பிக்கையால் அந்த மரத்தின் கிளைகளை ஒடிக்கிறது.

அந்த ஆண்யானை தன்னுடைய பெரிய தும்பிக் கையால் அந்த மரத்தின் பட்டைகளை உரிக்கிறது.

அந்தப் பெரிய யாம் மரத்தின் பட்டைகளில் இருந்து கொளுகொளுன்னு தண்ணீர் வடிகிறது.

 

ஆண் யானை பசியோடும் தாகத்தோடும் இருந்தாலும் அது தன் பசியையும் தாகத்தையும் பொறுத்துக்கொண்டு அது அந்த யாம் மரத்தின் பட்டைகளை உரித்து உரித்து மனைவிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ-
குறுந்தொகை 37