யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே!

 

ஒரு பெரிய மலைக்காடு.

அந்த மலைக்காட்டில் ஒரு பக்கம் மூங்கில் மரங்கள் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. அந்த மூங்கில் காட்டுக்கு ஒரு யானை வந்திருக்கிறது. அந்த யானை மூங்கில் இலைகளைத் தின்று பசியாறுவதற்காக அது ஒரு உயரமான மூங்கில் மரத்தைப் பிடித்து வளைக்கிறது.

அந்தப் பெரிய மலைக்காட்டில் ஒரு பக்கம் தினை விதைத்திருக்கிறது. தினைப் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. ஒரு காவல்காரன் தினைப்பயிர்களைக் காவல் காத்துக்கொண்டிருக்கிறான். அந்தக் காவல்காரன் ஒரு மிருகத்தைக் குறிவைத்துத் தெறிக்கிறான். அவன் கவணில் இருந்து புறப்பட்ட கல் வேகமாக இரைக்கப் போட்டுக்கொண்டு போகிறது.

காற்றைக் கிழித்துக்கொண்டு இரைச்சல் போட்டுக்கொண்டு வருகிற கவண்களின் சத்தத்தை அந்த யானை கேட்கிறது. அது பயந்துவிட்டது. பயத்தில் அது வளைத்துப் பிடித்திருந்த உயரமான மூங்கில் மரத்தை விட்டுவிட்டது.

-மீன் எறி கண்டிலார்-
குறுந்தொகை 54