யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும்,       5
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால் தோழி! ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி,  10
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.

 

யதான ஒரு நோயாளிப் பாட்டி படுத்தப் படுக்கையிலேயே எந்திரிக்க முடியாமல் படுத்தே கெடந்தாகளாம்,

அவுக  முதுகில் படுக்கைப் புண் வந்ததாம். அந்தப் படுக்கைப்புண் பாட்டியைப் பாடாகப்படுத்தியதாம் .

படுக்கைப் புண் வந்த பாட்டி உறக்கம் வராமல் படுத்தே கிடந்ததைப்போல் நான் என் படுக்கையில் படுத்துக்கொண்டு உறக்கம் வராமல் கண் முழித்துக் கொண்டிடுக்கிறேன் .

இரவு  போவனாங்கு

இந்த இரவு என் காமத்தைத் தூண்டி விடுகிறது. என் காமத்தைத் தூண்டி விட்டுவிட்டு என் காமத்தை அது மேலும் தீவிரப்படுத்துகிறது,

நான் கண் உறக்கம் இல்லாமல் இந்த நடுச்சாமத்தில் கண் முழித்துக் கொண்டிருக்கிறேன் .

தீராத என் காம நோய்க்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம்,

நான் ஒருத்தனைக் காதலித்தேன். நாங்கள் ரெண்டு பேரும் தனிமையில் சந்தித்தோம். நாங்கள் நெருங்கிப் பழகினோம். நாங்கள் ரொம்ப நெருங்கி நெருங்கிப் பழகினோம்.

இப்போ அவன் என்னைச் சந்திக்க வரவே மாண்டங்கான்,

எனக்கு அவனை மறக்க முடியல,

எங்கள் ஊர் ஒரு கடலோரக் கிராமம்.

நான் எங்கள் வீட்டில் எங்கள் முத்தத்தில் மணல் வீடு கட்டி  விளையாடிக் கொண்டிருந்தேன்.  என் மணல் வீட்டுக்கு முன்னால் அழகான ஒரு கோலமும் நான் வரைந்திருந்தேன்,

ஒரு ஆள் வந்தான்.  அவன் என் மணல் வீட்டை அழித்தான். என் மணல்  வீட்டுக்கு முன்னால் நான் வரைந்திருந்த என் கோலத்தையும் அவன் அழித்தான். அழகான என் வீட்டையும் அழகான என் கோலத்தையும் அந்த ஆள் முரட்டுத்தனமாக அவன் காலால் மிதித்து அழித்தான்.

இந்த முரடன் என்னைக் காதலித்தான்.

நானும் விழுந்துவிழுந்து இந்த முரடனைக்  காதலித்தேன்,

என் காமம் இந்த முரடனைக் காதலிக்கும்படி என்னை தூண்டியது,

நான் இந்த முரடனைக் காதலிக்கிறதுக்கு முன்னால், இவனுடைய குணாதிசயங்களை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்துத் தெளிவுபெறுவதற்கு  என் அறிவு அன்று முதிர்ச்சி அடையாமல் இருந்தது,

இத நடுச்சாமம்.

நான் எங்கள் வீட்டில் படுத்திருக்கிறேன், எனக்கு உறக்கம் வர மாண்டங்கு.

என் காமத்தை இந்த இரவு வளர்கிறது.

இந்த இரவு என் காமத்தைத் தூண்டிவிட்டு என் காமத்தை அது மேலும் மேலும் தீவிரப்படுத்துகிறது.

 

வடம வண்ணக்கன்  பேரி சாத்தனார்
நற்றிணை 378