தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
மனைவயின் தோழியைத் தலைமகன்
புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்

எங்கள் முற்றத்தில் அவ்வளமும் குருத்துமந்தான். எங்கள் முற்றதுக்கு அந்தக் குருத்துமண் அவ்வளவு  அழகாருக்கு.

எங்கள் ஊரைச் சுற்றிச்சுற்றி நாலு திசைகளிலும் பனைமரங்கள்தான். அந்தப் பனைமரங்களின் தூரில் இருந்து மண்டைவரைக்கும் அவ்வளவும் ஒலைகள்தான். பனைஒலைகள் பனைமரங்களில் கருக்கு மட்டைகளோடு அழகாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பனை ஒலைகளைக் கொண்டுதான் நாங்கள் எங்கள் கொட்டாரங்களை அடைத்திருக்கிறோம். பனை ஒலைகளைக்கொண்டு அடைத்த எங்கள் கொட்டாரங்கள் அழகாக இருக்கிறது.

எங்கள் ஊர் கடல்கரையில் ஒரு புன்னைமரம் இருக்கிறது, அது தூர் பருத்த மரம். அந்த புன்னைமரத்தில் ஒரு வள்ளத்தைக் கெட்டி வைத்திருக்கிறார்கள்.

கடல் அலைகள் புரண்டு புரண்டு மேலே எழும்பி எழும்பி அலைகள் கரைக்கு வந்துகொண்டிருக்கின்றன. கரைக்கு வந்த்தும் கடல் அலைகள் உடைந்து சிதறுகிறது. கடல் அலைகளில் இருந்து சிதறித் தெறிக்கிற நீர்த்திவலைகள் புன்னைமரத்தில் கட்டித் வைத்திருக்கிர வள்ளத்தை நனைத்துக்கொண்டெ இருக்கிறது,

எங்கள் கடல்கரையில் ஒரு உப்பளம் இருக்கிறது. அப்பாரம் அம்பாரமாக உப்பு உப்பளத்தில் குமிக்கி வச்சிருக்கு, இந்த உப்பு அம்பாரங்கள் எங்கள் ஊருக்கு அது ஒரு தனி அழகாருக்கு,

வெளியூர் வியாபாரிகள் உப்பு வாங்க எங்கள் ஊர் உப்பளத்துக்கு வந்திருக்கிறார்கள்

எங்கள் ஊர் உப்பளத்தில் வெளியூர் உப்பு வியாபாரிகளின் நாகரீகமான பேச்சுக் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. உப்பு வியாபாரிகளின் நாகரிகமான பேச்சுச் சத்தம் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது,

உப்பு வியாபாரிகளைப் பார்த்துக்கொண்டுருப்பதும், உப்பு வியாபாரிகளின் மாட்டு வண்டுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதும்கூட மகிழ்ச்சியாக இருக்கிறது,

உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உப்புவண்டிகள் சாரைசாரையாகப் போகிற அழகு பார்க்க வேண்டிய ஒரு அழகு,

உப்பு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக அவைகள் நடந்து போகிற அழகைப் பார்த்துக்கொண்டெ இருக்கலாம்.

அது கண்கொள்ளாக் காட்சி.

-உலோச்சனார்
 நற்றினை-354