நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல- தோழி!- கடுவன், 5
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் 10
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

 

ஒரு மலை.

அந்த மலையில் ஒரு குகை இருக்கு.

அந்தக் குகையில் ஒரு புலி படுத்துக்கெடக்கு.

குகையில் படுத்திருக்கிற அந்த ஆண் புலியைக் கொல்லுவதற்காக ஒரு ஆண் யானை அந்தக் குகைக்குக் கோவத்தோடு போய்க்கொண்டிருக்கிறது.

அந்த ஆண் யானை அந்தப் புலியின் பிடறியில் ஏறி ஓங்கி மிதிக்கிறது. அந்தப் புலியின் நெஞ்சில் அந்த யானை தன் தந்தங்களால் ஓங்கிக் குத்துகிறது. புலியின் நெஞ்சில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. புலி செத்து விழுகிறது.

அந்த ஆண் யானை ஒரு அருவியில் நின்னுக்கிட்டுருக்கு. அதன் தந்தங்களில் ரத்தமாருக்கு.

அந்த ஆண் யானை தன் தந்தங்களில் படிந்திருக்கிற ரத்தக் கறையைக் கழுவுவதற்காக அது மலை மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கிற அந்த அருவி நீரில் குளித்துக் கொண்டிருக்கிறது.

இளநாகனார்
நற்றிணை 151