உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், 5
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
யானே, தோழி! நோய்ப்பாலேனே. 10

ஒரு காடு.

அந்தக் காட்டில் ஒரு பெரிய வாகை மரம் இருக்கு.

ஒரு யானை அந்த வாகை மரத்துக்குப் பக்கத்தில் வந்து நின்னுக்கிட்டுருக்கு.

அது ஒரு பெண் யானை. அந்த பெண் யானைக்குக் கால்கள் பெருசு பெருசாருக்கு. அந்த பெண் யானைக்கு அதன் பெரிய கால்களில் நகங்களும் பெருசு பெருசாருக்கு.

அந்தப் பெண் யானை அந்த பெரிய காட்டு வாகைமரத்தின் பட்டைகளை உரிச்சி உரிச்சி தின்னுக்கிட்டேருக்கு. அந்த பெண் யானை அந்தப் பெரிய காட்டுமரத்தின் பட்டைகளை உரிச்சி உரிச்சி சுத்தமாத் தின்னுட்டுது.

அந்தக் காட்டு வாகை மரத்தில் பட்டைகளே இல்லை.

ஒரு பெண் யானையிடம் ஒரு பெரிய காட்டு வாகைமரம் பட்டைகளையெல்லாம் பறிகொடுத்துவிட்டு அம்மணமாக நின்றுகொண்டிருக்கிறது.

பெருவழுதியார்
நற்றிணை 107